பாபா விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். நாம ஜபம், நாம ஸங்கீர்த்தனம் போன்ற சிறந்த சாதனம் வேறு எதுவுமில்லை என்பது பாபாவின் கருத்து. பாபாவின் புகழை பரப்பிய தாஸ்கணுவை கூட்டம் நிரம்பிய துவாரகாமாயியிலிருந்து ஒதுங்கிச் சென்று தனிமையான இடத்தில் அடிக்கடி விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் பண்ணச் சொல்வார். தாஸ்கணுவை மட்டுமல்ல, இன்னும் பல பக்தர்களைப் இவ்வாறு பாராயணம் செய்யும்படி பாபா பணித்தார். பாபா தாமே ஹரி நாம ஜபம் செய்ததாகக் கூறுகிறார். இடையறாது ஹரிநாம ஜபம் செய்ததால், தம் முன் ஹரி தோன்றியதாகவும், அதன்பின்பே தாம் மருந்துகளைக் கொடுப்பதை நிறுத்தி ஹரியின் பெயரை நினைத்து ஊதியைக் கொடுத்து எல்லா ரோகங்களையும் நிவர்த்தி செய்ததாகவும் பாபா கூறுகிறார்.
விஷ்ணு சகஸ்ரநாமம் மிகவும் பயனுள்ளது. ஒருமுறை எனக்கு மிகவும் படபடப்பாக வந்தபோது இந்தப் புத்தகத்தைதான் என் நெஞ்சில் வைத்துக் கொண்டேன். ஹரியே நேரிடையாக என் நெஞ்சுக்குள் இறங்கி என்னை காப்பாற்றுவது போல் உணர்ந்தேன். எனவே விஷ்ணு சகஸ்ரநாமத்தை நிதானமாக படி. தினமும் பாராயணம் செய். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. [ஸ்ரீ சாய் சத்சரித்திரம் ]
விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் படிக்க/ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்'ஐ கிளிக் செய்யவும்.
http://www.prapatti.com/slokas/tamil/vishnusahasranaamam.pdf
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil