Monday, January 30, 2017

ஸ்ரீ கஜானன் மகராஜ் - பாகம்-3


ஒருவர் வாழ்வில், சத்குருவின் பாதுகாப்பு என்பது மிகவும் வலிமை வாய்ந்த படைக்கலமாகும். ஏனெனில், தன்  குழந்தைகளைக் காப்பதற்காகச் சத்குரு எந்த அளவுக்குச் செல்வார் என்பதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. ஒருமுறை, கஜானன் மகராஜ்  

பங்கத்லாலின் அழைப்பிற்கிணங்கி, அவருடைய விவசாயப் பண்ணைக்கு மக்காச்சோளம் உண்பதற்குச் சென்றார்.  பக்தர்கள் கூட்டத்துடன் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து, தீமூட்டி, சோளத்தைச் சுட ஆரம்பித்தனர். மரத்தின் மேல் ஒரு தேன்கூடு இருப்பதை யாருமே கவனிக்கவில்லை! தீயினின்றும் புகை கிளம்பிக் கூட்டை அடைந்ததும், தேனீக்கள் படையாக வெளிவந்து எல்லாரையும் கொட்ட ஆரம்பித்தன. மகாராஜைத் தவிர மீதி எல்லாரும் ஓடி விட்டனர். பின்பு எல்லா தேனீக்களும் மகராஜின் உடலில் தங்கிவிட்டன. மகராஜ் சிறிதும் அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். தூரத்திலிருந்து இதனைக்கண்ட பங்கத்லால், மகாராஜின் நிலைமை கண்டு வருத்தமுற்றார். அவர் மகராஜை நெருங்கி உதவிட எண்ணியபோது, மகராஜ் தேனீக்களைப் பார்த்து 'நீங்கள் உங்கள் இடத்துக்கு திரும்பிச் செல்லுங்கள்' என்னுடைய அன்பான  பக்தன் பங்கத்லால் இங்கு வருகிறான். அவனுக்கு எதுவும் துன்பம் நேரிடக்கூடாது' என்று கூறினார். அவர் இந்த வார்த்தைகளைக் கூறிய மறுகணமே, தேனீப்படைகள் முழுவதும் கூட்டிற்குத் திரும்பின. பக்தர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, மகராஜ் புன்னகை புரிந்து, ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தார். உடனே, எல்லாக் கொடுக்குகளும் அவர் உடலிலிருந்து நூற்றுக்கணக்கில் உதிர்ந்தன. மக்களும் ஆறுதலடைந்தனர்.   சத்குருவானவர் தம் குழந்தைகளைக் கஷ்டப்பட அனுமதிக்காமல், வலி அனைத்தையும் அவரே ஏற்றுக்கொள்கிறார்.


- இதன் இறுதிப்பாகம் நாளை பதிவில்.

பாகம் 1 படிக்க - http://www.shirdisaibabasayings.com/2017/01/1.html
பாகம் 2 படிக்க -http://www.shirdisaibabasayings.com/2017/01/2.htmlhttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 29, 2017

ஸ்ரீ கஜானன் மகராஜ் - பாகம்-2

பாகம் 1 படிக்க - http://www.shirdisaibabasayings.com/2017/01/1.html
எல்லா மனிதப் பிறவிகளுக்கும், மற்றும் மற்ற ஜீவராசிகளுக்கும் ஆன்மீக எழுச்சியை நோக்கி ஓர் உலகளாவிய உந்துதல் கொடுப்பதே சத்குருவின் வேலையாகும். ஜாதி, மதம், பால், தேசம் மற்றும் ஜீவராசிகளின் இடையே உள்ள வேறுபாடுகள் இவை எதுவும் அவர்களுக்குப் பொருட்டல்ல. அவர்கள் மனிதர்களுடன் உள்ளபோது மனிதர்களாகவும் மிருகங்களுடன் இருக்கும் போது அவற்றுடன் ஒன்றி மிருகங்களாகவும் உள்ளனர். அவர்கள் இந்த நிலையை அடையத் தொடங்கியவுடன் கண்ணுக்கு தெரியாத சக்தியால் இழுக்கப்பட்டதுபோல், எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அவர்களைத் தேடி வருகின்றனர். உண்மையில், இதைதான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா எப்போதும் கூறுவார்; 'காலில் கட்டிய நூலைக் கொண்டு ஒரு பறவையை இழுப்பது போன்று நான் என் குழந்தைகளை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தும் இழுத்துக் கொள்கிறேன். 
கஜானன் அவதூதரின் வரவுக்குப்பின், பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், இவ்வுலக வாழ்வின் நன்மைக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் எனப் பங்கத்லால் வீட்டினில் கூட ஆரம்பித்தனர்.   பங்கத்லால், தன்னால் இயன்ற அளவு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முயன்றார். ஒரு பூரணமடைந்த சத்குருவை ஒருவரின் விருந்தாளியாக உபசரிப்பது என்பது எளிதானது அல்ல. சாதாரண மனிதனுக்கு சத்குருவின் நடவடிக்கைகள் சில சமயங்களில் கொஞ்சம்கூட ஊகிக்கமுடியாததாக இருக்கும். சில நேரங்களில் குழந்தைகள் போலும், சில நேரங்களில் பைத்தியம் போலும், மற்றும் சில நேரங்களில் ஏதோ ஆட்க்கொள்ளப்பட்டவர்கள் போலும் அவர்கள் நடந்து கொள்வர். எப்படி இருந்தாலும், அவர்கள் எது செய்தாலும், அது மற்றவரின் நன்மைக்காகவே இருக்கும். சத்குருவின் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை ஆன்மீகத்தில் மிகுந்த எழுச்சி பெற்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
கஜானன் மகராஜ், அடிக்கடி பங்கத்லால் வீட்டிலிருந்து எந்த நேரத்திலும் அமைதியாகத் தப்பித்துச் சென்று விடுவார். அவர் எங்கு செல்கிறார் என்பதைப் பற்றி பங்கத்லாலிடம் கூறவும் மாட்டார். பங்கத்லால் கடும் முயற்சிகள் எடுத்து அவரைத் தேடித் சென்று திரும்பி வரும்படி வேண்டிநிற்பார். ஒருநாள், அட்காவ்ன் என்னும் இன்னொரு கிராமத்தில் மகராஜ் அமைதியாகத் தங்கினார். நண்பகல் பொழுதில், சூரியன் உச்சியில் இருக்கும்போது, தன்  நிலத்தை உழுது கொண்டிருக்கும் ஒரு விவசாயியிடம் சென்று குடிக்கத் தண்ணீர் கேட்டார். பாஸ்கர் படேல் என்ற பெயருடையை அந்த விவசாயி, அவருக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று வசைபாடினார்.. மகராஜ் எந்த மாற்றமும் இல்லாமல் புன்னகை புரிந்துவிட்டு, பழைய கிணறு போல் தோன்றிய ஓர் இடத்திற்கு மெதுவாக நடந்து சென்றார். அவரை சோதிக்கும் வண்ணம் பின்னாலிருந்து பாஸ்கர் பட்டேல் மறுபடியும் அவரிடம் அது ஒரு வறண்ட கிணறு என்றும், அதிலிருந்து யாரும் எப்படித் தண்ணீர் பெறமுடியும் என்றும் கூறினார். மகராஜ் அக்கிணற்றை அடைந்து சில நிமிடங்கள் தியானம் செய்ததும் பன்னிரண்டு வருடங்களாக வறண்டு கிடந்த அக்கிணற்றில், விரைவிலேயே சுத்தமான நீர் நிரம்பியது.  அத்தண்ணீரால்  அவர் தாகத்தைத் தீர்த்துக்கொண்டார். இந்த அற்புதத்தைக் கண்டவுடன், பாஸ்கர் பட்டேல் இவர்( கஜானன் மகராஜ்) சாதாரண மனிதர் அல்ல என்பதை உணர்ந்து தன்னுடைய மரியாதையற்ற நடத்தைக்காக மிகவும் வருந்தி மன்னிப்புக்கேட்டார். சத்குருக்கள் கடல்போல் எல்லையற்ற அன்பும், கருணையும் கொண்டவர்கள். பழிவாங்கும் எண்ணமோ, கோபமோ, எரிச்சலோ அடைய இயலாதவர்கள். அதனால்தான் கிருபாசிந்து, தயாநிதி போன்ற அடைமொழிகளால் அவர்களைக் குறிக்கிறோம். பாஸ்கர் பட்டேலின் நிலையைக் கண்டு மகராஜ் மனமிரங்கி, கிணற்றில் அவருக்காத் தண்ணீர் உண்டாக்கியிருப்பதாகவும் , எனவே பட்டேல் தினந்தோறும் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிராமத்திலிருந்து கஷ்டப்பட்டுக் கொண்டு வரவேண்டாம் எனவும் கூறினார்.
                                                           - இதன் தொடர்ச்சி நாளை பதிவில்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 28, 2017

ஸ்ரீ கஜானன் மகராஜ் - பாகம் - 1


கஜானன் மகராஜ் எனப் பிரபலமாக அழைக்கப்பட்ட ஸ்ரீ கஜானன் அவதூதரின் இளமைக்கால வாழ்க்கை பற்றி ஆதாரப்பூர்வமான செய்திகள் எதுவுமில்லை. மஹாராஷ்டிராவில் உள்ள சஜ்ஜன்கர் என்னும் இடத்தில் அவர் பிறந்தார் என்று மக்கள் ஊகம் செய்தாலும், அவர் பிறந்த இடம், பிறந்த தேதி, அவரது பெற்றோர் இவையாவும் புரியாத புதிராகவே உள்ளன. ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, ஸ்ரீ கஜானன் அவதூதர் போன்ற ஞானிகள் தங்கள் கடந்த காலத்தைப்பற்றி வெளிப்படுத்தவில்லை. ஸ்ரீ சாயிநாதரையுடைய பிறப்பைப் பற்றியும் உறுதிப்படுத்தப்படாத பல கதைகள் உள்ளன.மஹாராஷ்டிராவில் உள்ள ஷேகாவ்ன் என்னும் கிராமத்தின் வெளிவட்டாரத்தில், குப்பைமேட்டில் தூக்கி எறியப்பட்ட உணவுப் பண்டங்களை ஸ்ரீ கஜானன் அவதூதர் சேகரித்துக் கொண்டிருக்கும்போதுதான், பங்கத்லால் அகர்வால் என்ற ஒருவரால் முதன்முதலாகக் கவனிக்கப்பட்டார். நல்ல ஆரோக்கியமான, ஒளி வீசுகின்ற உடலைப் பெற்றிருந்தபோதும், விழிப்புணர்வின் உச்சகட்ட நிலையில் அப்போது அவர் இருந்ததால், தம் உடலைப் பற்றிய உணர்வே இல்லாமல் ஆடைகள் எதுவும் இல்லாமல் இருந்தார். பங்கத்லால், இவரின் நடவடிக்கையை பார்த்து, இவர் ஒரு சித்தராக இருக்கக்கூடும் என உணர்ந்தார்.அது 1878-ம் வருடம் பிப்ரவரி 23-வது நாள். பங்கத்லால், அவருடைய நண்பர் தாமோதர் பந்த்  குல்கர்ணியுடன் மகராஜைப் பணிவுடன் நெருங்கி, 'மகராஜ், தூக்கி எறியப்பட்ட இவ்வுணவை நீங்கள் ஏன் உண்ண வேண்டும்?  நீங்கள் பசியோடு இருந்தால், அதற்கு தகுந்த ஏற்பாடுகளை நிச்சயம் நான் செய்து தருகிறேன் என்று கேட்டார். இருப்பினும் மகராஜ் அவரது சொற்களுக்குச் செவிசாய்க்காமல், எந்தவிதப் பற்றுமில்லாமல் தம்முடைய உணவைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைக் கண்ட பங்கத்லால், அருகிலுள்ள ஆஸ்ரமத்திற்கு சென்று, கிடைத்த உணவைச் சேகரித்துக் கொண்டு மகராஜிடம் திரும்பி வந்தார். அந்த உணவை அளித்தபோது, மகராஜ், எல்லா உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து அப்படியே விழுங்கினார். ஞானிகளுக்கு இந்த நிலையில் ருசி என்ற உணர்வே இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். பின்னர் ஆடுமாடுகளுக்கு என வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து மகராஜ் தண்ணீர் குடிக்கலானார். இதைப் பார்த்து திகைத்த பங்கத்லால், தான் ஒரு சாதாரண மனிதர் முன்னாள் அல்ல, மிகுந்த உயர்ந்த நிலையை அடைந்த ஆத்மாவின் முன் இருக்கிறோம் என்பதை உணர்ந்தார். பயபக்தியுடன் அவரை வீழ்ந்து வணங்கி, அவரது ஆசிகளை வேண்டி நின்றவர், தன தலையை நிமிர்ந்து பார்த்தபோது, மகராஜ் மறைந்து விட்டார்!
                           மறைவதும், பின் மீண்டும் தோற்றமளிப்பதும், முன் காலத்தில் இந்திய யோகிகள் பெற்றிருந்த அஷ்டமாசித்திகளில் ஒன்றாகும்.  மகாராஜின் திடீர் மறைவினால் பங்கத்லால் மிகுந்த வருத்தமும், உற்சாகமற்ற நிலையையும் அடைந்தார். ஆனால் அதேசமயம், தானாகவே அந்த நேரத்தில் அங்கு வந்த கஜானன் அவதூதர்தான் தன்னுடைய சத்குரு என்பதை அவர் சிறிதும் அறியவில்லை. சத்குருக்கள் அல்லது பரிபூரணமடைந்த குருக்கள், ஆன்மீக இலக்கை நோக்கித் தன சீடர்களை வழிநடத்திச் செல்ல, அதற்குரிய நேரத்தில் சீடர்களைத் தம் பக்கம் இழுப்பர் அல்லது அவர்களை நாடிச் செல்வர். எல்லா நேரமும் பங்கத்லால், கஜானன் மகராஜ் நினைவிலேயே இருந்தார். அன்று முழுவதும், அவரை தேடியும், அவருக்கு வெற்றி கிட்டவில்லை.இருப்பினும், மாலையில், அவர் ஒரு கீர்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள பழைய சிவாலயத்திற்குச் சென்றபோது அங்கு மகாராஜை மீண்டும் கண்டார். அவரைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுற்று, உணர்ச்சியில் தொண்டை அடைக்க, மகராஜை தன் வீட்டிற்கு வந்து தங்குமாறு வேண்டிக்கொண்டார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி மகராஜ் அவர் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து அவரது தெய்வீக லீலைகள் தொடங்கின.
                                                                  - இதன் தொடர்ச்சி நாளை பதிவில்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 27, 2017

ஸ்ரீ சாய்பாபாவின் கிருபை


கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான  உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்ர பாராயணம் போன்றவை ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை சென்றைடைகின்றன. ஸ்ரீ  சாயியிடமிருந்து  புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் வந்தடைகின்றது..     

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 26, 2017

பாபாவிடம் சரணடையுங்கள்நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது?. பாபாவிடம் சரணடைவது ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 25, 2017

குருஸ்தான்
இனிப்பு வேப்பமரத்தடியில் இருக்கும் என்னுடைய குருவின் சமாதியான இவ்விடத்தில் (குருஸ்தான்), மணப்புகை வீசும் தூபம் ஏற்றி, வியாழன், வெள்ளி கிழமைகளில் சூரிய அஸ்தமன வேளையில் இவ்விடத்தை பசுஞ்சாணியைக் கொண்டு மெழுகி வழிபடுபவர்கள் இறைவனின் சங்கமத்தின் பேரானந்தத்தைப் பெறுவார்கள்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 24, 2017

கோபம் இல்லைஉன்னிடம் எனக்கு கோபம் இல்லை. என் குழந்தைகளான நீங்கள் என்னிடத்தில் கோபித்துக் கொள்ளலாம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 23, 2017

உளப்பூர்வமான நம்பிக்கை

  
வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.   


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 22, 2017

பாபா பாபா


எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது  இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். "அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது" என்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 21, 2017

என்னுடையவன்


எனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை. இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 20, 2017

கைவிட்டு விடாதே


அளவுக்கு மீறி துறவு மேற்கொள்ள வேண்டாம். அதாவது எல்லாவகை உணவுகளையும், விளையாட்டு, பயிற்சி ஆகையவற்றையும் ஒரேயடியாக கைவிட்டு விடாதே. சாப்பாடு, ஓய்வு போன்ற எல்லாவற்றையும் சீராக கடைப்பிடிக்க வேண்டும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரிடம் கூறியது )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 19, 2017

சாயி நிச்சயம் உதவுவார்பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய  நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போதும் அவரை அண்டுபவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு அவை இருக்கும். பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை.  தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக "பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்" என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது  மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.
                                                       
                                                      * ஓம் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 18, 2017

நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.

1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா (ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 17, 2017

ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்


பக்தன் பாட்டிசைக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பார். வெல்லம் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பதைப் போன்று, நாமஸ்மரணை செய்பவரின் வீட்டிலேயே இறைவன் இருப்பார். ஆன்மீக விஷயத்தில் நாளை என்பதை மறந்து இந்த வினாடியிலிருந்தே நாமஸ்மரணை செய்யத் தொடங்குங்கள்.

   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 16, 2017

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்


உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற  இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குனமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல  சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்! இச்செயல்களின் நோக்கம் இதுவே. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 15, 2017

ஒரு துரும்பும் அசையாது


எனது அருள்  பாரபட்சமற்றது. அதை நான் எல்லோருக்கும் சமமாகவே வழங்குகிறேன். என்  சங்கல்பமின்றி ஒரு  துரும்பும் அசையாது - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [சாயி சுதா].

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 14, 2017

பாபாவை நினைத்துக்கொள்ளுங்கள்


ஒவ்வொரு செய்கைக்கு முன்னாலும் பாபாவை நினைத்துக்கொண்டால், கெடுதலையோ  காயத்தையோ ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் ஈடுபடமாட்டோம். ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் பாபாவை நினைத்துக்கொண்டால், ஒதுக்கப்பட்ட அல்லது கேடு நிறைந்த உணவையோ பானத்தையோ சாப்பிடவே மாட்டோம். புலனுணர்வு அல்லது உலகாயத சந்தோஷங்களை அனுபவிப்பதற்கு முன் பாபாவை நினைத்துக்கொண்டால், ஒழுக்கமற்ற எந்தப் பழக்கத்திலும் ஈடுபட மாட்டோம்.
         
                                                     *ஓம் சாயிராம்*

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 12, 2017

பாபா உன் அருகிலேயே இருக்கிறார்

                                             

பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 11, 2017

தைரியமாக இரு
எவனொருவன் பக்தியுடன் முழு உள்ளத்தையும் என்னிடத்தில் வைக்கிறானோ, அவனது தேகம் மற்றும் ஆத்மாவிற்கு எந்த ஆபத்தும் வராது. தைரியமாக இருக்கலாம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 10, 2017

ஆபத்துகள் விலகும்


எனது பக்தனுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் நான் பாதுகாப்பேன். என்னுடைய பக்தர்களின் கஷ்டங்கள் என்னுடையதேயாகும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 9, 2017

உண்மையான பக்தன்

ஆடம்பரங்களையும், வெளித்தோற்றத்தையும் நான் பொருட்படுத்துவதே இல்லை. எவனொருவன் உள்மனதில் 'சாயி, சாயி ' என்று சொல்லி வருகிறானோ, அவனே உண்மையான பக்தன். அவனிடமே நான் வசிக்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 8, 2017

கோரிக்கை எதுவாக இருந்தாலும் பாபா நிறைவேற்றித் தருவார்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனே என் கோரிக்கையை நிறைவேற்று என பாபாவிடம் வேண்டுதலை தவிர்ப்போம். அப்படி வேண்டும் தருவாயில் நீண்ட காலம் பாபாவின் மீது பக்தியாக இருக்கும் வாய்பை இழக்க நேரிடலாம். வேர் பிடிக்காத மரத்தைப் போலவும், நீர் சுமக்காத வறண்ட மேகத்தைப் போலவும் நமது பக்தி முடிந்துவிடும்.
பாபாவிடம் உங்கள் விருப்பப்படி எங்களுக்கு தேவையானதை செய்யுங்கள். அதுவரை நாங்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை அனுபவிக்க சக்தியை கொடுங்கள், பொறுமையை கொடுத்து, உங்கள் மீதுள்ள நம்பிக்கை பட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுதல் விடுப்போம்.
உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் பாபா உடனடியாக நிறைவேற்றித் தருவார்.    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 7, 2017

பாபாவின் போதனைகள்


சாயியின் அமிழ்தம் போன்ற போதனைகள்:

1. என்னை நேசிப்பவரின் பார்வையில் நான் மட்டுமே தெரிவேன்.
2. அவருடைய வாயில் என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.
3. அவர் என்னையே அகண்டமாகத் தியானம் செய்வார்.
4. நாக்கு என் நாமத்தையே ஜெபம் செய்யும்.
5. என் சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பர்.
6. என்னிடம் சேர்ந்தவரின் கடனை தலையில் ஏற்று அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனை திருப்பிச் செலுத்துகிறேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 6, 2017

உங்கள் தேவைகளை பாபா கவனித்துக் கொள்வார்


எம்மிடத்தில் முழுவதும் சரணடைந்து, தன் செயல்களையெல்லாம் எம்மிடமே அர்ப்பணித்து வரும் பக்தனுடைய தேவைகள் யாவையும் யாமே கவனித்துக்கொள்கிறோம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 5, 2017

பாபா உங்கள் முன் தோன்றுவார்.

யாரும் இறப்பதில்லை, நிச்சயமாக சாயி பாபா போன்ற, தன்னைக் கண்டறிந்த ஒரு மகாத்மா இறப்பதில்லை. பௌதீக உடலை விட்டு விடும்போது ஆத்மா ஞானிகள் அல்லது ஜீவன் முக்தர்கள், விதேக முக்தர்கள் அல்லது நிராகரபரப்பிரம்மம்  என் அழைக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் சரீரங்களை விட்டபின் பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகாமல் சூட்சும சரீரத்துடன் திகழ்ந்து, மனித சகத்திற்கு நன்மை பயத்தல் என்ற தெய்வீக சங்கல்பத்துடன் ஒத்துழைக்கின்றனர். இந்த சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்கும் போது  நினைத்த மாத்திரத்தில் அவர்கள் சரீரத்துடன் தோன்றி மறைய முடியும். இவர்கள் அபாந்தராத்மாக்கள் ஆவர். சாயி பாபா இப்போது ஒரு அபாந்தராத்மா. தமது பௌதீக உடலை விடுவதற்கு முன், தாம் தமது சதை எலும்புகளாலான போர்வையை விடப்போவதைக் கண்டு பக்தர்கள் பயப்படவோ, வருந்தவோ வேண்டாமென்றும், எந்த ஒரு பக்தன் எந்த இடத்திலும்,எந்த ஒரு தருணத்திலும் தம்மை நினைத்தால், தாம் அங்கே தோன்றி அவனை கவனித்துக் கொள்வதாகவும் பாபா கூறினார். பாபா கூறியது எவ்வளவு சத்தியமானது என்பதை எண்ணற்ற பக்தர்கள் கண்டிருக்கின்றனர். தீவிர பக்தர்கள் இன்றும் பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து தங்களுடைய சொந்த அனுபவங்கள் வாயிலாகவே பாபா கூறியது எவ்வளவு சத்தியமானது  என்பதைக் காணலாம்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 4, 2017

குருபக்தி


தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.  

உதாரணத்திற்கு, பாபாவின் நெருங்கிய பக்தரான சாமாவை ஒருமுறை நச்சுப் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. வலி கடுமையாக இருந்தது. விஷம் மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. சாமாவும் பயத்தில் மிரண்டு போயிருந்தார். உடல் முழுவதும் சிவந்து போயிருப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர்களில் ஒவ்வொருவரும் மருத்துவரிடமும் செல்லவும், விரோபா கோயிலுக்கு (பாம்பு கடித்தவர்களை இக்கோயிலுக்கு  சென்றால்,உயிர் பிழைத்து விடுவதாக ஷிர்டி மக்கள் நம்பினர்) செல்ல சொன்ன போதும் சாமா " எனக்கு எல்லாமே பாபாதான்.அவரிடமே நான் செல்ல விரும்புகிறேன். ஒருவேளை எனது உயிர் போவதாக இருந்தாலும் அது எனது ஒரே அடைக்கலமான பாபாவின் மசூதியிலேயே போகட்டும் என்று கூறி அழுதபடி பாபா வாழ்ந்து வந்த மசூதிக்கு (துவாரகாமாயி) ஓடிச் சென்று பாபா பாதத்தில் வீழ்ந்து பணிந்தார் (உயிர் பிழைத்தார்). இதற்குப் பெயர் தான் குருபக்தி. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 3, 2017

வீடு மனைவி மக்கள்


தேகம், வீடு, மனைவி, மக்கள் -இவையனைத்தும் என்னுடையவை' என்று நினைப்பது விவேகமற்ற செயல். இவையனைத்தும் பிற்பகல் நிழலைப்போல் வேகமாய் இடம் மாறும் தன்மையுடையவை; கணநேரத்தில் மறையக்கூடிய மாயை. இந்த மாயையின் சுழலில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று விரும்புபவர் வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்துவிட வேண்டும். - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 2, 2017

பாபாவின் லீலைகள்

"மனம், செல்வம், உடல்,பேச்சு ஆகியவற்றால் பாபாவின் பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தரமாக அவருடைய நாமத்தை ஸ்மரணம் செய்தால் லீலைகள் அனுபவமாகும்."-ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 1, 2017

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

                சாயி பக்தர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


அமைதியாக உட்கார். தேவையானதை நான் செய்கிறேன். நிறைவு காணும் வரை நான் உங்களை நடத்திச் செல்கிறேன். கவலையை விடு ! எல்லா விதத்திலும் உங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். உன் சுமைகளை என் மீது இறக்கிவிடு. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...