Sunday, January 29, 2017

ஸ்ரீ கஜானன் மகராஜ் - பாகம்-2

பாகம் 1 படிக்க - http://www.shirdisaibabasayings.com/2017/01/1.html
எல்லா மனிதப் பிறவிகளுக்கும், மற்றும் மற்ற ஜீவராசிகளுக்கும் ஆன்மீக எழுச்சியை நோக்கி ஓர் உலகளாவிய உந்துதல் கொடுப்பதே சத்குருவின் வேலையாகும். ஜாதி, மதம், பால், தேசம் மற்றும் ஜீவராசிகளின் இடையே உள்ள வேறுபாடுகள் இவை எதுவும் அவர்களுக்குப் பொருட்டல்ல. அவர்கள் மனிதர்களுடன் உள்ளபோது மனிதர்களாகவும் மிருகங்களுடன் இருக்கும் போது அவற்றுடன் ஒன்றி மிருகங்களாகவும் உள்ளனர். அவர்கள் இந்த நிலையை அடையத் தொடங்கியவுடன் கண்ணுக்கு தெரியாத சக்தியால் இழுக்கப்பட்டதுபோல், எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அவர்களைத் தேடி வருகின்றனர். உண்மையில், இதைதான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா எப்போதும் கூறுவார்; 'காலில் கட்டிய நூலைக் கொண்டு ஒரு பறவையை இழுப்பது போன்று நான் என் குழந்தைகளை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தும் இழுத்துக் கொள்கிறேன். 
கஜானன் அவதூதரின் வரவுக்குப்பின், பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், இவ்வுலக வாழ்வின் நன்மைக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் எனப் பங்கத்லால் வீட்டினில் கூட ஆரம்பித்தனர்.   பங்கத்லால், தன்னால் இயன்ற அளவு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முயன்றார். ஒரு பூரணமடைந்த சத்குருவை ஒருவரின் விருந்தாளியாக உபசரிப்பது என்பது எளிதானது அல்ல. சாதாரண மனிதனுக்கு சத்குருவின் நடவடிக்கைகள் சில சமயங்களில் கொஞ்சம்கூட ஊகிக்கமுடியாததாக இருக்கும். சில நேரங்களில் குழந்தைகள் போலும், சில நேரங்களில் பைத்தியம் போலும், மற்றும் சில நேரங்களில் ஏதோ ஆட்க்கொள்ளப்பட்டவர்கள் போலும் அவர்கள் நடந்து கொள்வர். எப்படி இருந்தாலும், அவர்கள் எது செய்தாலும், அது மற்றவரின் நன்மைக்காகவே இருக்கும். சத்குருவின் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை ஆன்மீகத்தில் மிகுந்த எழுச்சி பெற்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
கஜானன் மகராஜ், அடிக்கடி பங்கத்லால் வீட்டிலிருந்து எந்த நேரத்திலும் அமைதியாகத் தப்பித்துச் சென்று விடுவார். அவர் எங்கு செல்கிறார் என்பதைப் பற்றி பங்கத்லாலிடம் கூறவும் மாட்டார். பங்கத்லால் கடும் முயற்சிகள் எடுத்து அவரைத் தேடித் சென்று திரும்பி வரும்படி வேண்டிநிற்பார். ஒருநாள், அட்காவ்ன் என்னும் இன்னொரு கிராமத்தில் மகராஜ் அமைதியாகத் தங்கினார். நண்பகல் பொழுதில், சூரியன் உச்சியில் இருக்கும்போது, தன்  நிலத்தை உழுது கொண்டிருக்கும் ஒரு விவசாயியிடம் சென்று குடிக்கத் தண்ணீர் கேட்டார். பாஸ்கர் படேல் என்ற பெயருடையை அந்த விவசாயி, அவருக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று வசைபாடினார்.. மகராஜ் எந்த மாற்றமும் இல்லாமல் புன்னகை புரிந்துவிட்டு, பழைய கிணறு போல் தோன்றிய ஓர் இடத்திற்கு மெதுவாக நடந்து சென்றார். அவரை சோதிக்கும் வண்ணம் பின்னாலிருந்து பாஸ்கர் பட்டேல் மறுபடியும் அவரிடம் அது ஒரு வறண்ட கிணறு என்றும், அதிலிருந்து யாரும் எப்படித் தண்ணீர் பெறமுடியும் என்றும் கூறினார். மகராஜ் அக்கிணற்றை அடைந்து சில நிமிடங்கள் தியானம் செய்ததும் பன்னிரண்டு வருடங்களாக வறண்டு கிடந்த அக்கிணற்றில், விரைவிலேயே சுத்தமான நீர் நிரம்பியது.  அத்தண்ணீரால்  அவர் தாகத்தைத் தீர்த்துக்கொண்டார். இந்த அற்புதத்தைக் கண்டவுடன், பாஸ்கர் பட்டேல் இவர்( கஜானன் மகராஜ்) சாதாரண மனிதர் அல்ல என்பதை உணர்ந்து தன்னுடைய மரியாதையற்ற நடத்தைக்காக மிகவும் வருந்தி மன்னிப்புக்கேட்டார். சத்குருக்கள் கடல்போல் எல்லையற்ற அன்பும், கருணையும் கொண்டவர்கள். பழிவாங்கும் எண்ணமோ, கோபமோ, எரிச்சலோ அடைய இயலாதவர்கள். அதனால்தான் கிருபாசிந்து, தயாநிதி போன்ற அடைமொழிகளால் அவர்களைக் குறிக்கிறோம். பாஸ்கர் பட்டேலின் நிலையைக் கண்டு மகராஜ் மனமிரங்கி, கிணற்றில் அவருக்காத் தண்ணீர் உண்டாக்கியிருப்பதாகவும் , எனவே பட்டேல் தினந்தோறும் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிராமத்திலிருந்து கஷ்டப்பட்டுக் கொண்டு வரவேண்டாம் எனவும் கூறினார்.
                                                           - இதன் தொடர்ச்சி நாளை பதிவில்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற ம...