Tuesday, February 28, 2017

பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.


வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ?. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 27, 2017

அனுபவித்தே தீரவேண்டும்பூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன. குடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி ஓப்பாரி வைத்து அழுதார். (பாபா உடம்போடு இருந்த காலம் அது.)

1916-ஆம் ஆண்டு, 2 மாதம் ஷீரடியில் தங்கினார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார்.

அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .

"எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை ரோகங்களாகவும் (வியாதி), குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே!" என்று உபதேசித்தார்.


இந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.     


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 26, 2017

பயமென்பதே இல்லை


எல்லாவற்றையும் குரு(பாபா)வின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டவருக்கு பயமென்பதே இல்லை.-ஸ்ரீ சாயி சத்சரித்திரம் அத் 23

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 25, 2017

பணக்காரராக மாற்றிவிடுவார்


குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட  மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 24, 2017

உமக்கு ஏன் கவலை"காகா துலா கால்ஜி கஸ்லி மலா சாரா கல்ஜி ஆஹே " , அதாவது, " காகா, உமக்கு ஏன் கவலையும் பொறுப்பும் ? எல்லா பொறுப்புகளும் என்னுடையவை " - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா

 ( பாபா தனது பக்தரான எச்.எஸ். தீக்ஷித்திடம் கூறியது. திரு. தீக்ஷீத் பாபாவிடம் வைத்திருந்த திடமான விஸ்வாசத்திற்காக பாபா விசேஷமாக அருளிய வாக்கு இது. மானுட சக்திகளைக் கொண்ட எந்த ஒரு சாதாரண மனிதனும் அத்தகைய சாஸனத்தை அளிக்கமுடியாது. ஆனால், அதை அருளியது தெய்வீக அவதாரமான பாபா.)
பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த எல்லா பக்தர்களுக்கும், பாபாவின் இந்த வாக்குறுதி பொருந்தும். அத்தகைய  பக்தன் மற்றும் அவனது குடும்பத்தினரின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது, எந்த வித தீங்கு நேரும் என நினைக்கவும் அவசியமில்லை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 20, 2017

பாபா உங்களை பின்தொடர்கிறார்


என் பக்தன் ஷீரடியிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால் இருப்பினும், அவனுடைய உடலை விட்டுப் பிரிந்த கணமே அவனது ஆன்மா எம்மை வந்தடையும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

ஒரு ஆத்மாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டால், அதை ஒன்றன் பின் ஒன்றாகப் பல பிறவிகளிலும் தாம் பின் தொடர்வதாகவும், அவசியத்திற்கேற்ப அடிக்கடி தாமும் பிறவி எடுப்பதாகவும், அந்த ஆன்மா இறுதி இலக்கை, அதாவது பகவத்பாத மூலத்தை, அடையும்வரை கவனிப்பதாகவும் பாபா கூறுகிறார். கடந்த கால பாவச் செயல்களுக்காக யமனும், யம தூதர்களும் அளிக்கும் தண்டனைகளின் கொடுமையும் தமது பக்தர்களை அச்சுறுத்தாது என்கிறார் அவர். சாயியின் பிரபாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும்; யமனும் பாசத்துடன் கூடிய அவனது கிங்கரர்களும் கனவில் கூட அவர்களை நெருங்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய கர்மவினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன ( சாயி தியானத்தின் மூலம் ).


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 19, 2017

ஷீரடிக்கு வந்தால் உன்னை அடிப்பேன்


ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா? தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம்! அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, "அஞ்சேல்! உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, "இனி பயமில்லை" என்றார்.
மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" என்று எச்சரித்தார். (பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் )http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 18, 2017

குரு சரித்திர பாராயணம் செய்யவும்


"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன?  குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா? என்று கேட்டார். அதற்க்கு பாபா "ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்" என்று கூறினார்.

( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )


குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

சாய் ராம்,  குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் புத்தகங்களை  படிக்க விரும்பும்   சாயிஅன்பர்கள்  saibabasayings@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file  அனுப்பபடும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 17, 2017

பேராசையும் கடவுளும்பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.-  ஷிர்டிஸ்ரீ சாய்பாபா.  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 12, 2017

ஆன்மீகப் பாதை


ஸ்ரீ சாய்பாபாவின் பாதங்களில் முழுமையாக சரணடைவதன் மூலம் ஒரு பக்தன் ஆன்மீகப் பாதையில் செல்ல முடிவதுடன் அப்பாதையில் செல்வது எளிதாகவும் ஆகிறது. 'உலகியல் வாழ்வில் உள்ள மனிதன்' என்ற நிலையில் உள்ள ஒருவர் ஒரு யோகியாகவோ, சித்தராகவோ அல்லது குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டும் என்றோ ஒரேடியாக முன்னேற வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. இந்தச் சொற்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உபயோகிப்பது பெரும் முட்டாள்தனமாகும்.  பாபாவிடம் அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.

பாபாவிடம் அவர் தோற்றத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்ட தொடர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும். செயல் புரிபவர்கள் நாம் அல்ல என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 'செயலைச் செய்பவர்' என்ற உணர்விலிருந்தும் நாம் விடுபடுதல் அவசியமாகும். செயலைச் செய்பவர் என்ற அந்த உணர்வு, நம் அகங்காரத்திலிருந்து பிறக்கிறது. அது மிக மிக மெதுவாகவே குறைகிறது. பாபா விரும்பினால் அவர் நமக்கு சித்தி, முக்தி அல்லது எதை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

வெறும் படிப்பதினால் மட்டுமோ அல்லது மற்றவர்கள் கூறுவதைக் கவனுத்துடன் கேட்பதினால் மட்டுமோ அல்லது ஆன்மீக வளர்ச்சியை ஒரு கால அட்டவணைக்குட்பட்ட நிர்வாகம் என்னும் கருத்துடன் திட்டமிடுவதாலோ, ஆன்மீகப் பாதையில் எவரும் முன்னேற்றம் அடைய முடியாது. எந்த ஒரு அறிவும் நடைமுறையில் பயன்படுத்தப்படவில்லை என்றால் அது முற்றிலும் பயனற்றது. ஆன்மீகப் பாதையில் செல்வதற்கு நமக்குத் தேவையான நடத்தை வழிமுறைகளை நாம் பழக்கத்தில் கொணர்வது என்பது மிகவும் கடினமானது. இதற்கு நம்பிக்கையும் திடசித்தமும் தேவை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 11, 2017

நான் பார்த்து கொள்கிறேன்


பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார். பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும். நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார். வேறெதிலும் நாட்டமில்லாமல், பாபாவிடம் மட்டுமே தீவிர நம்பிக்கை ( சரணாகதி ) கொண்ட பக்தனின் காரியங்கள் யாவும் பாபாவால் பொம்மலாட்டத்தை போல் முன் நின்று நடத்த படுகின்றன. அத்தகைய பக்தர்கள் எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. லௌகீக தேவைகளுக்காகவே (வேலை, திருமணம், சம்பள உயர்வு குழந்தை பேறு போன்றவை )  பாபாவிடம்  செல்கிறோம். சில சமயங்களில் அது போன்ற வேண்டுதல்கள் நடக்காமல் போகலாம். உண்மையில் பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே அளிப்பார். இது போன்ற சமயங்களில் மிகவும் நம்பிக்கையோடு பொறுமை காத்து எல்லாம் பாபாவின் விருப்பம் என்று விட்டுவிடுங்கள்.  அமைதியாக என்னிடம் இரு, மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நாம் கோரிக்கை வைத்தாலும், வைக்காவிட்டாலும், பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மை என்பதை நன்கு அறிவார்.                                                  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 10, 2017

குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்
இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை  சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும். -  ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 4, 2017

நம்பிக்கையுடன் கூடிய பொறுமை
எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன்  பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.  இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று, மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள். ஓம் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 3, 2017

நாம் கேட்பதையெல்லாம் பாபா தரமாட்டார்பாபாவிடம் சரணடைந்து விட்ட ஒருவர், தனது எதிர்காலத்தை பற்றியோ, தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை பற்றியோ கவலை கொள்ள கூடாது. வீண்கவலை எந்த விதத்திலும் பலன் தராது. மாறாக பாபாவின் மீது நம்பிக்கை இல்லாமையையே அது காட்டுகிறது. நடப்பது எல்லாமே பாபாவின் விருப்பம். வேண்டியதையெல்லாம் பாபா தருவார் என்பது தவறான கருத்து. நம்முடைய எதிர்காலத்தை நாம் அறியோம். ஆனால் முக்காலத்தையும் பாபா அறிவார். தன் குழந்தைக்கு எது நன்மையோ அதை மட்டுமே பாபா அளிப்பார். எல்லாமே பாபாவின் செயல் என்று நம்பிக்கை இழக்காமல் எப்போதும் 'சாயி, சாயி' என்று சொல்லிவாருங்கள். கண்ணுக்கு தெரியாவிட்டாலும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். எனவே தைரியத்தோடு இருங்கள். எல்லாம் பாபாவின் விருப்பம்போல் நல்லபடியாக நடக்கும். எல்லாவற்றையும் பாபா பார்த்துக்கொள்வார். அவரின்றி வேறு யாரும் நமக்கு துணை இல்லை. ஓம் சாய்ராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 2, 2017

பாபாவிடம் அர்ப்பணம் செய்யவேண்டும்

குரு தாமாக உனது குரு ஆகிவிடுவதில்லை.நீயே அவரை குருவாக மதிக்கவேண்டும். அதாவது அவரிடம் விசுவாசம் வைக்க வேண்டும். ஒரு ஓட்டாஞ்சில்லை எடுத்து வைத்துக் கொண்டு அதை உனது குருவாக பாவித்து வா. அப்போது  உன் இலக்கு அல்லது  குறிக்கோள் கிட்டிவிடுகிறதா இல்லையா என்று பார். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

நமக்கென நிர்ணயக்கப்பட்ட கடமையை செய்வோம். நமது உடல், வாக்கு, உயிர் முழுவதையும் எல்லாவற்றையும் வியாபித்து நிற்கும் தன்மையுடைய பாபாவிடம் அர்ப்பணம் செய்யவேண்டும். அவரிடம் விசுவாசம் வைப்பது இப்போது அவசியமாகிறது..

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 1, 2017

உங்களுடைய காரியம் கைகூடும்

    

நம்பிக்கையுடன் பாபாவை வணங்கும் எல்லா இடமும் துவாரகாமையியே! பாபாவை தவிர வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர்களாலேயே இது உணரப்படும். அப்படிப்பட்ட பக்தர் கடல் கடந்து இருந்தாலும் பாபா அவருடனேயே  இருப்பார். தனக்காக எந்த விதமான பூஜை முறைகளையோ, விரதம் இருக்கவோ பாபா கூறியது இல்லை. அவர் கேட்பது அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டுமே. பாபா மீது அத்தகைய நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், இயலாத காரியம் என்று எதுவுமில்லை.

என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக .- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...