Friday, February 3, 2017

நாம் கேட்பதையெல்லாம் பாபா தரமாட்டார்



பாபாவிடம் சரணடைந்து விட்ட ஒருவர், தனது எதிர்காலத்தை பற்றியோ, தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை பற்றியோ கவலை கொள்ள கூடாது. வீண்கவலை எந்த விதத்திலும் பலன் தராது. மாறாக பாபாவின் மீது நம்பிக்கை இல்லாமையையே அது காட்டுகிறது. நடப்பது எல்லாமே பாபாவின் விருப்பம். வேண்டியதையெல்லாம் பாபா தருவார் என்பது தவறான கருத்து. நம்முடைய எதிர்காலத்தை நாம் அறியோம். ஆனால் முக்காலத்தையும் பாபா அறிவார். தன் குழந்தைக்கு எது நன்மையோ அதை மட்டுமே பாபா அளிப்பார். எல்லாமே பாபாவின் செயல் என்று நம்பிக்கை இழக்காமல் எப்போதும் 'சாயி, சாயி' என்று சொல்லிவாருங்கள். கண்ணுக்கு தெரியாவிட்டாலும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். எனவே தைரியத்தோடு இருங்கள். எல்லாம் பாபாவின் விருப்பம்போல் நல்லபடியாக நடக்கும். எல்லாவற்றையும் பாபா பார்த்துக்கொள்வார். அவரின்றி வேறு யாரும் நமக்கு துணை இல்லை. ஓம் சாய்ராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்

குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற ம...