Friday, March 31, 2017

நன்மைக்கே

நான் கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து நான் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும்.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 30, 2017

ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்உங்கள் மனதில் எழும் ஆழமான எண்ணங்களையும் நான் அறிவேன். உங்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். நீங்கள் எந்த வேலையாக சென்றாலும், உங்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பேன். - ஷீரடி  ஸ்ரீ சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 29, 2017

உனது எண்ணம் நிறைவேற்றப்படும்

பாபாவிடம் செல்ல பக்தன் எவ்வளவு அதிகம் கவலையுள்ளவனாக இருக்கிறானோ, எவ்வளவு அதிகம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறானோ, அவ்வளவு விரைவில் அவன் மனநிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 28, 2017

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள்

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. நம் தாயை எப்படி அணுகுவோம்? இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது. அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிரவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது? அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என் மனப்பூர்வமாக விரும்பட்டும். உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலனடைகின்றனர். முதலில் ஒரு வித நன்றியுணர்வையும்,நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள், படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து, பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும், கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி[108 நாமாக்கள்]மிக்க சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார். பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும். உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.- பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 25, 2017

இவ்வுடம்பு அழியக்கூடியது....

 பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 24, 2017

பாவச்செயலுக்கு உண்டான தண்டனைபி.லகாதே, பி.ஏ., எல்.எல்.பி.
(ஸப் ஜட்ஜாக இருந்தவர், வயது 70, பூனா) ஜூலை 20, 1936.

1913 அல்லது 1914-ம் ஆண்டு வாக்கில் நான் சாயிபாபாவிடம் சென்றேன். நான் ஒரு இக்கட்டில் இருந்தேன்; அதிலிருந்து விடுதலை பெற ஆசிகளை நாடி நான் அவரிடம் சென்றேன். நான் அவரை அணுகிய போது, அவர் என்னிடம் தக்ஷிணை கேட்டார்; நான் கொடுத்தேன். அவராகவே "வேம்பை விதை; பின்னர் மரத்தை வெட்டிவிடு"என என்னிடம் கூறினார். அவருடைய இந்தப் பேச்சு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் அவரிடம் வேண்டிச் சென்ற ஆசிர்வாதம் அல்ல அது. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். 

* குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது ஒரு ஊழல் வழக்கு தொடரப்பட்டு, அவர் குற்றவாளி எனக் கருதப்பட்டு கடும் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டிலும் இது ஊர்ஜிதமாயிற்று. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது தான் இவர் (லகாதே) தாம் வெற்றிபெற ஆசிகோரி பாபாவை அண்டினார். வேம்பு விதைப்பதும், வேம்பு அறுவடை செய்வதும் கர்மாவின் நியதி பற்றிய பாபாவின் உபமானக் கதை. கசப்பானதை விதைத்தால், கிடைப்பது அதே ரகமாக, கசப்பாகத் தான் இருக்கும். ஆதலால், ஒருவன் தான் செய்த பாவச் செயலுக்கு உண்டான தண்டனை முழுவதும் அனுபவித்து கர்மவினையைப் போக்கிக் கொண்டு, இதை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் பயனடைவதே சிறந்தது. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்- பூஜ்ய நரசிம்ம சுவாமிஜி.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 23, 2017

கவலைப்பட வேண்டியதில்லை

வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்து, வருவதையும் போவதையும் சாயியின் கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. பாபாவுடைய மஹத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நாம் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?
சமர்த்த சாயியே சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெலுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 22, 2017

பாபாவை வழிபடவேண்டும்பாபாவுக்கும், பக்தனுக்கும் இடைவெளி ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தேயிருக்கிறார்கள். பக்தன் பாபாவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில் செய்யப்படும் மரியாதையே. பக்தன், தான் பாபாவோடு ஒன்றியவன் என்ற எண்ணத்திலேயே பாபாவை வழிபடவேண்டும். பாபாவும் பக்தனை தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர அன்பை பக்தன் புரிந்துகொள்ளவேண்டும்


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 21, 2017

பாபாவையே நினைத்துக்கொண்டிருங்கள்

புலன் அனைத்தும்,மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாகப் படட்டும்.வேறு எவ்விதப் பொருள்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம். உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனத்தை ஸ்திரபடுத்துங்கள். அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்].

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 20, 2017

மசூதியில் உள்ள பக்கீர்

இந்த மசூதியில் உள்ள பக்கீர் தயை நிறைந்தவர். யாரையும் நிராசையுடன் திரும்பிச் செல்லும்படி விடமாட்டார். உன் ஆனந்தத்தில் நான் இருக்கிறேன்.உன் மகிழ்ச்சிக்காகவே நான் இவ்வளவு சிரமப்படுகிறேன். உன் விஸ்வாசத்தை ஸ்த்ரமாக்கவே இங்கு விந்தைகள் நிகழ்கின்றன. இம்மசூதி நம்மைப் பெற்றெடுத்த தாய். இதன் படியேறியவர்கள் யாராயினும் கூட,அவர்கள் துக்க சாகரத்தில்  மூழ்கியிருந்தாலும், அவர்களுடைய சஞ்சித கர்ம வினை பலமானதாக இருப்பினும் அவர்களும் நிச்சயமாக ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 19, 2017

அனைத்திலும் நிறைந்திருக்கிறார்எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பக்தர்களுக்காக கைதூக்கி வாழ்த்து கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷீரடியில் நீத்துவிட்டபோதிலும், நகரும், நகராப்பொருள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமர்த்தியம் உடையவர் பாபாவே.- ஸ்ரீ மத் சாயி ராமாயணம்.      http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 18, 2017

நம்பிக்கையும் விசுவாசமும்குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள்,-இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 17, 2017

பாபா விரும்புவது என்ன?


புரந்தரே ( பக்தர் ) தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக  கேட்கிறீர்கள்?  

பாபா : நான் எல்லோரிடமும் கேட்பதில்லை.ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன்.ஆனால் பதிலுக்கு, நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது. எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை. எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்; பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும். மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும். பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும், அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே. பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர். அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும், உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 16, 2017

உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்


மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு நம்பிக்கையுடன் சாயியை வழிபட்டால், நிச்சயம் உங்கள் குறிக்கோளை அடைவீர்கள். உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் பூர்த்திசெய்யப்படும். கடைசியில் நீங்கள் எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள். அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 15, 2017

உன் அருகிலேயே இருக்கிறேன்நான் உன்னுடனேயே (கண்ணுக்கு புலப்படாமல்) வருவேன். கவலை வேண்டாம். நான் உன் அருகிலேயே இருக்கிறேன். தாளிடப்பட்ட கதவுகள் என் நுழைவை தடுத்துவிட முடியாது. நானே அங்கு உன் இல்லாளையும் உன்னையும் காத்துக் கொண்டு அமர்ந்துள்ளேன். நீ எங்கிருப்பினும், என்னை நினை. நான் உன் பக்கத்தில் இருப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 14, 2017

புண்ணியம்

இந்த உடல், மனைவி, மக்கள், மணை, செல்வம், வாழ்க்கை நிரந்தரமென்று வாழ்பவன் அறிவில்லாதவன். கடந்தகாலம் திரும்பிவராது. நிகழ்காலத்தை நினைக்க முடியாது. ஆகையால் உடல் திடமாக உள்ள பொழுதே தர்மங்களை செய்யவேண்டும். எந்த நாள் புண்ணியம் செய்யாமல் கழிக்கின்றோமோ, அந்த நாள் நம் வாழ்க்கையில் வீணாக கழிந்த நாளென்று நினைக்கவேண்டும். - ஸ்ரீ குரு சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 13, 2017

இரவும் பகலும் பாபா உங்களுடனே இருக்கிறார்பாபாவிடம் பக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ? அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் உழைப்பு ஏதுமில்லாமலேயே வந்து சேரும். யாரை பாபா அரவணைக்கிறாரோ, அவர் தம்முடைய வீட்டிலிருந்தாலும் சரி, ஏதோ தீவிலிருந்தாலும் சரி, சர்வ நிச்சயமாக சாயி அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார். பக்தர் எங்கே சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும், சாயி அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத வகையில் தரிசனம் அளிக்கிறார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 12, 2017

உண்மையான பக்தன் முன் பாபா தோன்றுகிறார்.


 சாய்பாபா ஓர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பி போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி   இருக்கிறார். பாபாவின்சஞ்சாரம்  புரிந்துகொள்ளமுடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன! உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன் தோன்றுகிறார் ..-ஸ்ரீ சாயி இராமாயணம்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 11, 2017

பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன்

விதிக்கப்பட்ட, விதிக்கபடாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம்  தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்? போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேடலில் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான். - ஸ்ரீ சாயி இராமாயணம் .

Friday, March 10, 2017

குருவின் திருவாய்மொழி


யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும். அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய  லட்சியப்பாதையிலிருந்து தடம்புறளகூடாது. நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.
குருவின் திருவாய்மொழிதான் நமக்கு பரம மங்களங்களை விளைவிக்கும். அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும் - அனைத்தும் ஆகும். - ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 9, 2017

எதற்காக பயப்படுகிறாய்?


எல்லா திசைகளிலும் நான் உன்னை  சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய்? நீ  எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன்? உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. (ஸ்ரீ சாய் சத்சரித்ர சாராம்சம்)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 8, 2017

நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்திநாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லை என்றாலும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களானால், இவ்வுலக வாழ்வு என்னும் பெருங்கடலுக்கு அப்பால், அவர்கள் நம்மை பத்திரமாக இட்டுச் செல்வார்கள். சாயி சத்சரித்திரம் - 10.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 7, 2017

பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக


பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே.
மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!
மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக. - ஸ்ரீ சாயி இராமாயணம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 6, 2017

எல்லாம் பாபாவின் செயல்


செயல்களின் பலனை துறந்துவிட்டவர், ஸங்கல்பத்தையும் தியாகம் செய்துவிட்டவர் பாபாவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.
(ஸங்கல்பம் என்பது நான் இந்த காரியத்தை செய்யப்போகிறேன் என்று செய்யும் தீர்மானம். எல்லாம் பாபாவின் செயல் என்ற மனோபாவம் வளர, வளர, ஸங்கல்பம் படிப்படியாக விலகிவிடும்.)- ஸ்ரீ சாயி இராமாயணம் .

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 5, 2017

குருவே ஒரே கடவுள்நமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், பாபாவை மனதில் இருத்திக் கொள்ள பழக வேண்டும். மற்ற எல்லாத் தேவதைகளும் வெற்றுத் தோற்றமே. குருவே ஒரே கடவுள். பாபாவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிர்ஷ்டத்தை மாற்றி விடுவார். -ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 4, 2017

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்

நானா சாகேப் ராஸனே அல்லது தவுலத்ஷா என்கிற தத்தாத்ரேய தாமோதர் ராஸனே
(தாமோதர் ஸாவல்ராம் (அண்ணா) ராஸனே, காசர் அவர்களது புதல்வர், வயது 40, வசிப்பது ரவிவார்பேட், பூனே - மே, 1936
                                     

என் தந்தை சாயிபாபாவின் பழம் பெரும் பக்தர், நானா சாகேப் சந்தோர்க்கர் பாபாவிடம் சென்ற அதே காலத்தில் என் தந்தையும் சென்றார். அப்போது என் தந்தைக்கு குழந்தைகள் இல்லை; புத்திரப்பேறு கிடைக்க ஆசி பெற பாபாவிடம் செல்ல விரும்பினார். சுமார் 1900ம் ஆண்டு ஒரு பக்தர் பாபாவுக்கு ஒரு கூடை மிகச்சிறந்த கோவா மாம்பழங்கள் அனுப்பியிருந்தார். அவற்றுள் ஆறு பழங்களை தனியாக எடுத்துவைத்துவிட்டு எஞ்சியதை அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக பாபா விநியோகம் செய்துவிட்டார். அவர்கள் எஞ்சிய ஆறு பழங்களையும் விநியோகிக்கும்படி கேட்டனர். ஆனால் அவற்றை தாம்யாவுக்காக (அதாவது என் தந்தைக்கு) எடுத்து வைத்திருப்பதாக பாபா கூறிவிட்டார். 'தாம்யா இங்கு இல்லையே?' என்றனர். 'கோபர்காமுக்கு வந்துவிட்டார், விரைவில் இங்கு வருவார்' என பாபா பதிலளித்தார். சிறிது நேரம் கழித்து என் தகப்பனார் அங்கு வந்து பாபாவுக்கு மலர் மாலைகள், ஆடை போன்றவற்றை சமர்ப்பித்தார். அப்போது பாபா "தாம்யா, இந்த பழங்களை இப்போது எடுத்துப்போ. அவற்றை உண்டு சாவாயாக" எனக் கூறினார்.

பாபாவின் இந்த சொற்களை கேட்டு என் தந்தை நடுங்கிப்போய்விட்டார். ஆனால் அங்கிருந்த மஹல்சாபதி பாபாவின் காலடியில் இறப்பதும் ஒருவித அனுக்ரஹமே எனக் கூறினார். இவ்வாறு ஊக்குவிக்கப்பட்ட என் தகப்பனார் பழங்களை உண்ணலாமென நினைத்தார். ஆனால் பாபா,"இந்த பழங்களை நீயே உண்டுவிடாதே, உன் இளைய மனைவியிடம் கொடு. உனக்கு முதலில் 2 பிள்ளைகள் பிறப்பார்கள். முதல்வனுக்கு தவுலத்ஷா என்றும் இரண்டாவது மகனுக்கு தானாஷா என்றும் பெயர் வை" எனக்கூறி என் தந்தைக்கு ஆறுதலளித்தார். அகமத் நகரிலுள்ள தமது வீட்டிற்குத் திரும்பிய என் தந்தை இளைய மனைவியிடம் பழங்களை கொடுத்தார். பிறகு ஒரு குறிப்பேட்டில் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு இட வேண்டிய பெயர்களை குறித்துக்கொண்டார். ஒரு வருடத்திற்குப்பின் நான் பிறந்தேன். பதினைந்து மாதங்கள் நிரம்பியிருந்த என்னை என் தந்தை ஷிர்டியிலுள்ள சாயிபாபாவின் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் பாபாவிடம் "இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?" எனக் கேட்க, பாபா, "நான் உன்னிடம் கூறியதை மறந்து விட்டாயா? உன் குறிப்பேட்டில் முன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்துள்ளாய். குழந்தைக்கு தவுலத்ஷா என்ற பெயரை சூட்டும்படி நான் கூறவில்லையா?" என பதிலளித்தார்.

என்னுடைய ஐந்தாவது வயதில் (1990ம் ஆண்டில்) செளளம் செய்வதற்காக (சிகை வைப்பது - முடி கொடுப்பதற்கு) என்னை ஷீரடிக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு அக்ஷராப்யாசமும் (முதன் முறையாக எழுத பழுகுவது) நடந்தது. சாயிபாபா என் கையை பிடித்து சிலேட்டில் ஹரி எழுத வைத்தார். அதன் பின்னர் ஷிர்டியிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு திருமணம்  நடத்த தீர்மானித்தபோது, நான்கு பெண்கள் பார்க்கப்பட்டனர். எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் முன்னதாக பாபாவை கலந்தாலோசித்து அனுமதி பெறாமல் என் தந்தை முடிவு எடுக்கமாட்டார். அவர்  சாயிபாபாவிடம் சென்று எனக்கு மணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நான்கு பெண்களின் ஜாதகங்களையும் அவர் முன் வைத்தார். அவர்களுள் ஒரு பெண்ணுக்கு ரூ.2500 அல்லது ரூ.3000 வரதட்சிணை அளிப்பதாக முன் வந்திருந்தனர். பாபா நான்கு ஜாதகங்களில் ஏழ்மையான ஒரு பெண்ணின் ஜாதகத்தை எடுத்து என் தந்தையின் கைகளில் கொடுத்தார். அந்த பெண்ணையே நான் மணந்தேன். பண்டரிபுரத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு வருகை தரும்படி பாபாவை என் தந்தை அழைத்தார். ஆனால், "பாபா, நான் உன்னுடனேயே இருக்கிறேன். அஞ்ச வேண்டாம்!" எனப் பகன்றார். மேலும் என் தந்தை திருமணத்திற்கு வரவேண்டுமென பாபாவை வற்புறுத்தினார். ஆனால் பாபாவோ வருவதற்கு மறுத்து, "ஆண்டவனின் சித்தமின்றி என்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை. என் சார்பில் திருமணத்தில் பங்கேற்க சாமாவை அதாவது மாதவராவை அனுப்பி வைக்கிறேன்" எனக் கூறிவிட்டார். பண்டரிபுரத்தில் நிகழ்ந்த திருமணத்தில் சாமா பங்கேற்றார்.

எனக்கு ஒரு இளைய சகோதரன். அவனுக்கு பாபா கூறியபடிய பெயரிடப்பட்டது. மணமாகி எனக்கு இரு பெண்களும் ஒரு பிள்ளையும் பிறந்தனர். ஆனால் அவர்கள் பிறந்து சில மாதங்களிலேயே இறந்தனர். ஆண் குழந்தை 1926ல் மாண்டது. என் மனைவியின் உடல் மிக்க பலவினமாக ஆனது. மிகவும் மனம் தளர்ந்த நான் பாபாவிடம் இவ்வாறு பிராத்தனை செய்தேன். "விரைவிலேயே மாண்டுவிடும் பல குழந்தைகளை அளிப்பதற்கு பதிலாக நீண்ட ஆயிளுடன் கூடிய ஒரு குழந்தையை அளிக்கவேண்டும்." நான் ஷீரடியில் ஓரிரவு உறங்கிக்கொண்டிருந்தேன். பாபா என் கனவில் தோன்றி நான் இறந்துவிட்டதாக வருத்தப்படும் ஆண் குழந்தை மூலா நக்ஷத்திரத்தில் பிறந்தால் பெற்றோர்களுக்கு கெடுதல் விளையும் எனக்கூறினார். கனவில் பாபாவின் மார்பில் சூரியனைப் போன்ற ஒரு ஒளிமிக்க வட்டத்தைக் கண்டேன். அந்த சூரியனுக்குள் இறந்துபோன என் ஆண் சிசுவை மடியில் வைத்துக்கொண்டு பாபா உட்கார்ந்திருக்க, அவர் என்னிடம் கூறுகிறார்: "இந்த ஆபத்தான குழந்தையை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டேன். உனக்கு ஒரு நல்ல குழந்தையை அளிக்கிறேன், பயப்படாதே". இந்த காலத்திற்கு முன் எங்கள் குடும்பம் அகமத்நகரை விட்டு பூனாவில் குடியேறிவிட்டது. நான் வீட்டிற்கு திரும்பியவுடன் இறந்துபோன குழந்தையின் ஜாதகத்தை எடுத்துப்பார்த்தேன். அது மூலா நக்ஷத்திரத்திலேயே பிறந்திருந்தது. பதினைந்தே மாதங்களில் எனக்கு ஒரு மகன் பிறந்து இன்றும் ஆயிளுடன் இருக்கிறான். இது நடந்தது 1918ல்.

சாயிபாபாவிடம் என் விசுவாசம் அதிகரித்தது. பிற மகான்களையும் நான் சாயிபாபாவாகவே காண்கிறேன். அவர்களை பணியும்போது வெளிப்படையாகவோ அல்லது எனக்குள்ளேயோ "சமர்த்த சத்குரு சாயிநாதனுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொள்வேன். 1927ம் ஆண்டில் கேத்காம்பேட்டிற்குச் சென்று நாராயண மகராஜை இந்த வார்த்தைகளை மனத்துள் கூறிக்கொண்டே வணங்கினேன். அவர் என்னிடம் உரைத்தார்: "உனது குரு பரமகுரு. அவர் என்னை விட உயர்ந்த தன்மை படைத்தவர். நீ ஏன் இங்கு வந்தாய்? அங்கே செல். உன் எண்ணம் ஈடேறும்". இது நடந்தது பாபாவால் என் முந்தைய குழந்தை பிறந்தது பற்றி குறிப்பிட்டிருந்ததற்கு முன்னதாக.

1927ல் என் கிரகபலன் சுபகரமாக இல்லை! என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருந்த சீதாராம் உத்தரேச்வரர் (அதாவது சிவபெருமான்) ஆலயத்திற்கு சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு "சாயிபாபாவுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்ப்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருக்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகி தாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் பெயரை உச்சரிக்க அவரிடம் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார்: "நீ ஒரு பெரும் மகானிடம் தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற ஒரு எளிய சாதுவிடம் நீ ஏன் வரவேண்டும்.? என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களை பற்றுகிறோம்". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் ஒரு பகீர் போன்று தோன்றி  "நீ மிகவும் சஞ்சல மடைந்துள்ளாய். எனக்கு பிட்சை கொடு. உனது உடல், மனம் முழுவதையும் பிட்சையாக கொடு". எனக் கூறினார்.

நான்: இந்த பிச்சையை அளித்துவிட்டு பின்னர் என் தந்தையிடம் தெரிவிக்கிறேன்.
பாபா: உன் தந்தையை கலந்தாலோசிக்காமல் நீ எப்படி இதை செய்வாய்?
நான்: என் வாழ்க்கையின் அதிகாரி நானே. என் தந்தைக்கு இதர புத்திரர்கள் இருக்கிறார்கள்; அவர் ஆட்சேபிக்கமாட்டார். குழந்தைகளை அளித்தவர் தாங்களே; ஆகவே என்னை தங்களுக்கு அர்ப்பணிப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

பின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்களில் தாங்கி தமது சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் நிறைய அன்பு காட்டினார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப் பெற்றேன். விழித்தெழுந்தபோது, நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்; என் மனது உதாசீனம் அல்லது வைராக்கியம் (பற்றின்மை) பெற்றது. முன்புபோல் இப்போது பொருட்கள் என் மனதைக் கவரவோ ஆட்கொள்ளவோ இல்லை. இரண்டு மூன்று மாதங்களில், அதாவது 1928ம் ஆண்டு பங்குனியில் எனக்கு பண்டரிபுரத்தில் ஒரு மகன் பிறந்தான். பதினைந்து மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையும் நானும் ஷீரடிக்குச்  சென்றபோது என் தந்தை எனக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்க அருள்செய்ய வேண்டும் என பாபாவிடம் பிராத்தித்தார். 1931ல் எனக்கு இன்னுமொரு மகன் பிறந்தான்; அவனுக்கு சாயிதாஸ் என பெயர் சுட்டினேன். பிறந்த இரண்டாவது தினத்தில் அவனுக்கு அதிக காய்ச்சல் கண்டது. பாபாவின் ஊதியையும், தீர்த்தத்தையும் கொடுத்து ஒரு தாயத்தில் பாபாவின் துணிக்கந்தைகளிலிருந்து எடுத்த ஒரு துண்டை வைத்து அந்த தாயத்தை குழந்தைக்கு அணிவித்தோம். குழந்தை குணமடைந்தது. ஒரு வயது நிரம்பியவுடன் குழந்தையை ஷிர்டிக்கு எடுத்துச் சென்றோம்.

என் சிறு வயதில், சுமார் ஏழு வயதானபோது, ஷீரடிக்கு சென்ற நான் பாபாவின் பாதத்தை பிடித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே வந்திருந்த குழந்தைகள் யாவருக்கும் பாபா இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார். என் கவனம் இனிப்புகள் மீது திரும்பி பாத சேவையில் சிரத்தை குறைந்தது. என் அருகில் இருந்த என் தாய் "இனிப்புகளை நினைத்துக்கொண்டு பாபாவின் தொண்டை மறந்துவிட்டாயா?" எனக் கூறி என்னை அடித்துவிட்டாள். "ஏன் அம்மா பையனை அடிக்கிறாய்?" எனக் கத்தினார் பாபா. பாபாவுக்கு பணிவிடை செய்வதில் நல்ல ஆவல் எனக்கு உண்டாக அருள்புரிய வேண்டுமென பாபாவிடம் பிராத்தித்தாள். "சிறுவன் எனக்கு சிறப்பாக பணிபுரிவான். மனதில் தூய்மையான ஆசைகள் எழ ஆண்டவன் அருள்புரிவார். அஞ்சவேண்டாம்! அவனை அடிக்காதே!" என பாபா மொழிந்தார். எனக்கு பன்னிரண்டு வயதான போது, எனக்கு மூத்தவனான மாற்றுச்சகோதரன் ஒருவனுடன் நான் ஷிர்டிக்குச் சென்றேன். எங்களிடம் 100 ருபாய் இருந்தது. பாபா தட்சிணையாக கேட்டார். முதலில் ரூ. 10 பின்னர் ரூ.15 இப்படியாக கேட்டு என் சகோதரன் சட்டைப் பையில் ரூ.25 மட்டுமே எஞ்சியிருந்தது. உடனே பாபாவுக்கு மேலும் கொடுப்பதற்காகவும், எங்கள் திரும்பும் பயணச் செலவுக்காகவும் தேவையான பணம் அனுப்பும்படி அகமத் நகரிலுள்ள எங்கள் வீட்டிற்கு கடிதம் எழுதினோம். அன்று மாலை பாபா என் சகோதரனிடம் ரூ.25 தரும்படி கேட்டார். அவன் "கொண்டுவந்த பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் ஊருக்கு திரும்பிச்செல்லவே பணம் தேவை" என பதிலளித்தான். பாபா உடனே பதிலடி கொடுத்தார்! "ஏன் இந்த பொய்ப் பேச்சு! உன் பையின் மூலையில் ரூ.25 இருக்கிறது. நீ ஊருக்கு எழுதியுள்ளபடி நாளை மணியார்டர் மூலம் பணம் வந்துவிடும். கவலை வேண்டாம்!" என் சகோதரன் உடனே ரூ.25 அளித்துவிட்டான்.

"எனக்கு ஒன்று அளிப்பவருக்கு, நான் இரண்டு அளிப்பேன். இரண்டு அளிப்பவருக்கு ஐந்து, ஐந்து அளிப்பவருக்கு பத்து கொடுப்பேன்" என பாபா சொல்வது வழக்கம். ஒருவன் பகவானுக்கு அளிப்பதை அவர் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறார் எனும் வெளிப்படையான பொருளைத்தவிர, ஒரு கூடகமான (மறைந்து நிற்கும்) பொருளும் இதில் அடங்கியுள்ளது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 3, 2017

குரு பரம்பரை

                                     

ஒவ்வொரு சாய் பக்தரும் அறியவேண்டிய விஷயம் தத்த  குரு பரம்பரை.

 குரு பரம்பரை


ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர்பிரம்மா விஷ்ணு சிவனின்  அவதாரம ஸ்ரீ  தத்தாத்ரேயர்.  குருவிற்க்கெல்லாம் குருவானவர்எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார். குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார்.  தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களில் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளே ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக பிறப்பை எடுத்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஸ்ரீ தத்தர் வழி வந்த குருமார்களை உள்ளடங்கியதே தத்த பரம்பரைநமது சத்குரு  ஸ்ரீ சாய்பாபா குரு பரம்பரையின் கடைசி குரு ஆவார்.

குரு பரம்பரையில் உள்ள ஒவ்வொரு குருமார்களை பற்றியும் இந்த பதிவில்  காண்போம்.

1.ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபா. (1300 A .D )


ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம்தந்தை ஸ்ரீ அப்பளராஜா ஷர்மா,தாய் 
பதிவிரதை சுமதிக்கு மூன்றாவது மகனாக ஆந்திர மாநிலம்கோதாவரியில் உள்ள 
பித்தாபுரத்தில்  பிறந்தார்தனது பாதங்களில்சங்கு சக்கர முத்திரைகளை 
கொண்டந்தாலேயே இப்பெயரால்அழைக்கப்பட்டார்.

2. ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்.(AD 1378 to 1459)


கலியுகத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின்  இரண்டாவது  அவதாரமாகும்.
தந்தை ஸ்ரீ மாதவ்,தாய் அம்பா பவானிக்கு மகாராஷ்டிர மாநிலம்கரஞ்சபூரில் 
பிறந்தார்இவர் பிறந்தவுடன் அழுவதற்கு மாறாக 'ஓம் 'என்னும் பிரணவ 
மந்திரத்தை உச்சரித்தவர்.

3.மாணிக் பிரபு.1817 A .D


தந்தை ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடேதாய் ஸ்ரீ பய தேவி,தொடர்ந்து16 வருடங்கள் குருச்சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக,குரு தத்தாத்ரயரே நேரில் காட்சி அளித்து தானே அவர்களுக்குமகனாக பிறப்பதாக உறுதியளித்து , 
மகாராஷ்டிராமாநிலம்கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில்பிறந்தார்தனது 48 வது  வயதில் ஜீவசமாதி அடைந்தார்.

4.அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.1900 AD.

ஸ்ரீ தத்தரின் 4 வது அத்தியாயம்இவரின்  பிறப்பு தாய் தந்தை பற்றியகுறிப்புகள் 
இல்லைகுருச்சரித்திரத்தில் 2 வது அவதாரம் ஸ்ரீ  ந்ரசிம்மசரஸ்வதி அவர்கள் 
1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதிஅடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் கழித்து ஒருமரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது 
தவநிலையில்இருந்த ஸ்ரீ  ந்ருசிம்ம  சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாக 
விழுந்ததுஅங்கிருந்து எழுந்த அந்த தெய்வீக புருஷரே ஸ்ரீ தத்தரின்அடுத்த அவதாரமாக  ஸ்ரீ சுவாமி சமர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்.

5.சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்பாபா.


ஸ்ரீ தத்தரின் கடைசி அவதாரமேஸ்ரீ ஷிர்டி சாய்பாபாஇவரை பற்றியோஇவரது 
லீலைகளை பற்றியோ வார்த்தைகளால் யவராலும்  விளக்க இயலாது. எனினும் அவரின் 11 உபதேச மொழிகளை இங்கு பதிவு செய்கிறோம்.

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 2, 2017

நன்மைக்கே..

                         


கடவுள் ஒருவர் தான் நம்மை காப்பவர். அவரைத்தவிர வேறு யாரும் இல்லை. அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும். கடவுள் அனைவரிடத்திலும் இருக்கிறார். அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திர சாராம்சம்]


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...