Sunday, April 30, 2017

பாபா தரிசனம் தர மறுப்பதற்கான நோக்கம்


உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமுள்ள இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குனமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல  சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்! இச்செயல்களின் நோக்கம் இதுவே.-ஸ்ரீ சாயி சத் சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 29, 2017

நம்பிக்கை மற்றும் பொறுமை


ஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது.  இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை" ஆகும்.
லெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால் அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல் நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 28, 2017

சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்


தமது தாயன்பினால் பாபா தமது மறைந்து நிற்கும் நிலையிலிருந்தவாறே, தனது பக்தரை சந்திக்க தயாராகவும், ஆவலுடனுமுள்ள பக்தர்கள், சீடர்கள் இம்மை, ஆன்மீக நலன்கள் பெறுவதற்கான முழு பொறுப்பையும் தொடர்ந்து வகித்துக்கொண்டு வருகின்றார்.

வி .டி.பாவே என்பவர் தத்த சரித்திரத்தை முறையாக பாராயணம் செய்கையில் அவருக்கு ஒரு சமாதி காட்சியளித்தது. அந்த சமாதி சாயி பாபாவினுடையது என்பதை அவர் பின்பு கண்டுகொண்டார். ஆனால் நடமாடும் ஒருவரை குருவாகப் பெறாமல் ஒரு சமாதியை மட்டுமே குருவாகப் பெற்றது அவருக்கு திருப்தியளிக்கவில்லை. ஆகவே அவர் கேட்காம்பெட் ஸ்ரீ நாராயண மகாராஜிடம் செல்ல, அவர் ஒரு கனவு மூலம் பாவேயை மீண்டும் சீரடிக்கு சாயிபாபாவிடமே திருப்பி அனுப்பிவிட்டார். பாபாவின்  உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும்  (இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்). நம்பிக்கையுள்ள பக்தன்,  எல்லா இடத்திலும், பாபாவை காண்கிறான். ஸ்தூல உடலில் பாபா இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.
           
                                               * ஜெய் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 27, 2017

உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட்,அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன்.சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர்,சிலருக்கு புத்திரர்கள்.அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை!நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்;ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.

திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள்.பின் எங்கள் கதி என்னாவது?

பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா?என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது;அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.

சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா?

பாபா:ஆம்,உங்களுக்கு அது கிட்டும்.

சிறுவன்:பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்
எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.

பாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.

சிறுவன்:பாபா,ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?

பாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா?மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 26, 2017

தியானம் செய்யுங்கள்

ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.
முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள்  கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும்.  ஸத்தும் சித்தும் ஆனந்தமும் என்னுடைய சொரூபமென்றெ அறிவீராக . ஆகவே, அதன்மீதே தினமும் தியானம் செய்வீராக. இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின் மீது தியானம் செய்யும். இம்முறையில் ,தியானம் செய்பவர் தூய உன்னதமான உணர்வை அடைவர். இதுவே எல்லா தியானங்களின் முடிவான இலக்காகும். ஏனெனில், நீர் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுவீர் -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 
 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 25, 2017

இறைவனின் அவதாரமே
பாபாவை பக்தியுடன் வணங்கும் பலரும், பாபாவை குரு என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள். பாபாவே  இறைவன் என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. குரு என்பவர் தெய்வத்துக்கு சமமானவர். எனவே பாபாவிடம் தெய்வீகத்தன்மை இருக்கிறது என்பது பலரது நம்பிக்கை. உண்மையில் இறைவனின் பல அவதாரங்களில் பாபாவும் ஒருவரே.
எந்த சூழ்நிலையிலும் மாறா நம்பிக்கையோடு பாபாவை நீங்கள் வணங்கினால், பாபா  தாம் இறைவனின் ஒரு அவதாரமே என்று வெளிப்படுத்துவார்.

ஸ்ரீ  சாயி எப்போதும் ஒரு சாதாரண பக்கிரி போலவும், இறைவனின் சேவகர் போலவுமே நடந்து கொண்டார். ஆனால், பல சமயங்களில், அவர் பேரருளைப் பெற யார் தகுதியானவர்களோ, அம்மாதிரியான ஒரு சில அடியவர்களுக்கு மட்டுமே தான் இறைவனே என்பதை வெளிபடுத்திக் கொண்டார். பாபா ஒரு அவதாரம் என்பதற்கான குணாதிசயங்கள், 'சர்வ வல்லமை', 'சர்வ வியாபித்துவம்' ( எங்கும் நிறைதன்மை ), 'சர்வ ஞானம்' (எல்லாம் அறியும் தன்மை ) ஆகியவைகளாகும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தின் மீதும் அவருக்கு முழு கட்டுப்பாடு இருந்தது.

ஸ்ரீ சாயிநாத்தின்  வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தகமான 'ஸ்ரீ சாய் சத் சரித்திரா' வில் விவரித்துள்ளபடி அவர் மழையையும், நெருப்பையும் எப்படி தன் கட்டுக்குள் அடக்கி ஆண்டார் என்பதையும் நாம் அறிவோம். எனவே சந்தேகமே வேண்டாம், ஸ்ரீ சாய்பாபா இறைவனின் அவதாரமே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 24, 2017

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்

நானா சாகேப் ராஸனே அல்லது தவுலத்ஷா என்கிற தத்தாத்ரேய தாமோதர் ராஸனே
(தாமோதர் ஸாவல்ராம் (அண்ணா) ராஸனே, காசர் அவர்களது புதல்வர், வயது 40, வசிப்பது ரவிவார்பேட், பூனே - மே, 1936
                                     

என் தந்தை சாயிபாபாவின் பழம் பெரும் பக்தர், நானா சாகேப் சந்தோர்க்கர் பாபாவிடம் சென்ற அதே காலத்தில் என் தந்தையும் சென்றார். அப்போது என் தந்தைக்கு குழந்தைகள் இல்லை; புத்திரப்பேறு கிடைக்க ஆசி பெற பாபாவிடம் செல்ல விரும்பினார். சுமார் 1900ம் ஆண்டு ஒரு பக்தர் பாபாவுக்கு ஒரு கூடை மிகச்சிறந்த கோவா மாம்பழங்கள் அனுப்பியிருந்தார். அவற்றுள் ஆறு பழங்களை தனியாக எடுத்துவைத்துவிட்டு எஞ்சியதை அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக பாபா விநியோகம் செய்துவிட்டார். அவர்கள் எஞ்சிய ஆறு பழங்களையும் விநியோகிக்கும்படி கேட்டனர். ஆனால் அவற்றை தாம்யாவுக்காக (அதாவது என் தந்தைக்கு) எடுத்து வைத்திருப்பதாக பாபா கூறிவிட்டார். 'தாம்யா இங்கு இல்லையே?' என்றனர். 'கோபர்காமுக்கு வந்துவிட்டார், விரைவில் இங்கு வருவார்' என பாபா பதிலளித்தார். சிறிது நேரம் கழித்து என் தகப்பனார் அங்கு வந்து பாபாவுக்கு மலர் மாலைகள், ஆடை போன்றவற்றை சமர்ப்பித்தார். அப்போது பாபா "தாம்யா, இந்த பழங்களை இப்போது எடுத்துப்போ. அவற்றை உண்டு சாவாயாக" எனக் கூறினார்.

பாபாவின் இந்த சொற்களை கேட்டு என் தந்தை நடுங்கிப்போய்விட்டார். ஆனால் அங்கிருந்த மஹல்சாபதி பாபாவின் காலடியில் இறப்பதும் ஒருவித அனுக்ரஹமே எனக் கூறினார். இவ்வாறு ஊக்குவிக்கப்பட்ட என் தகப்பனார் பழங்களை உண்ணலாமென நினைத்தார். ஆனால் பாபா,"இந்த பழங்களை நீயே உண்டுவிடாதே, உன் இளைய மனைவியிடம் கொடு. உனக்கு முதலில் 2 பிள்ளைகள் பிறப்பார்கள். முதல்வனுக்கு தவுலத்ஷா என்றும் இரண்டாவது மகனுக்கு தானாஷா என்றும் பெயர் வை" எனக்கூறி என் தந்தைக்கு ஆறுதலளித்தார். அகமத் நகரிலுள்ள தமது வீட்டிற்குத் திரும்பிய என் தந்தை இளைய மனைவியிடம் பழங்களை கொடுத்தார். பிறகு ஒரு குறிப்பேட்டில் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு இட வேண்டிய பெயர்களை குறித்துக்கொண்டார். ஒரு வருடத்திற்குப்பின் நான் பிறந்தேன். பதினைந்து மாதங்கள் நிரம்பியிருந்த என்னை என் தந்தை ஷிர்டியிலுள்ள சாயிபாபாவின் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் பாபாவிடம் "இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?" எனக் கேட்க, பாபா, "நான் உன்னிடம் கூறியதை மறந்து விட்டாயா? உன் குறிப்பேட்டில் முன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்துள்ளாய். குழந்தைக்கு தவுலத்ஷா என்ற பெயரை சூட்டும்படி நான் கூறவில்லையா?" என பதிலளித்தார்.

என்னுடைய ஐந்தாவது வயதில் (1990ம் ஆண்டில்) செளளம் செய்வதற்காக (சிகை வைப்பது - முடி கொடுப்பதற்கு) என்னை ஷீரடிக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு அக்ஷராப்யாசமும் (முதன் முறையாக எழுத பழுகுவது) நடந்தது. சாயிபாபா என் கையை பிடித்து சிலேட்டில் ஹரி எழுத வைத்தார். அதன் பின்னர் ஷிர்டியிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு திருமணம்  நடத்த தீர்மானித்தபோது, நான்கு பெண்கள் பார்க்கப்பட்டனர். எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் முன்னதாக பாபாவை கலந்தாலோசித்து அனுமதி பெறாமல் என் தந்தை முடிவு எடுக்கமாட்டார். அவர்  சாயிபாபாவிடம் சென்று எனக்கு மணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நான்கு பெண்களின் ஜாதகங்களையும் அவர் முன் வைத்தார். அவர்களுள் ஒரு பெண்ணுக்கு ரூ.2500 அல்லது ரூ.3000 வரதட்சிணை அளிப்பதாக முன் வந்திருந்தனர். பாபா நான்கு ஜாதகங்களில் ஏழ்மையான ஒரு பெண்ணின் ஜாதகத்தை எடுத்து என் தந்தையின் கைகளில் கொடுத்தார். அந்த பெண்ணையே நான் மணந்தேன். பண்டரிபுரத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு வருகை தரும்படி பாபாவை என் தந்தை அழைத்தார். ஆனால், "பாபா, நான் உன்னுடனேயே இருக்கிறேன். அஞ்ச வேண்டாம்!" எனப் பகன்றார். மேலும் என் தந்தை திருமணத்திற்கு வரவேண்டுமென பாபாவை வற்புறுத்தினார். ஆனால் பாபாவோ வருவதற்கு மறுத்து, "ஆண்டவனின் சித்தமின்றி என்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை. என் சார்பில் திருமணத்தில் பங்கேற்க சாமாவை அதாவது மாதவராவை அனுப்பி வைக்கிறேன்" எனக் கூறிவிட்டார். பண்டரிபுரத்தில் நிகழ்ந்த திருமணத்தில் சாமா பங்கேற்றார்.

எனக்கு ஒரு இளைய சகோதரன். அவனுக்கு பாபா கூறியபடிய பெயரிடப்பட்டது. மணமாகி எனக்கு இரு பெண்களும் ஒரு பிள்ளையும் பிறந்தனர். ஆனால் அவர்கள் பிறந்து சில மாதங்களிலேயே இறந்தனர். ஆண் குழந்தை 1926ல் மாண்டது. என் மனைவியின் உடல் மிக்க பலவினமாக ஆனது. மிகவும் மனம் தளர்ந்த நான் பாபாவிடம் இவ்வாறு பிராத்தனை செய்தேன். "விரைவிலேயே மாண்டுவிடும் பல குழந்தைகளை அளிப்பதற்கு பதிலாக நீண்ட ஆயிளுடன் கூடிய ஒரு குழந்தையை அளிக்கவேண்டும்." நான் ஷீரடியில் ஓரிரவு உறங்கிக்கொண்டிருந்தேன். பாபா என் கனவில் தோன்றி நான் இறந்துவிட்டதாக வருத்தப்படும் ஆண் குழந்தை மூலா நக்ஷத்திரத்தில் பிறந்தால் பெற்றோர்களுக்கு கெடுதல் விளையும் எனக்கூறினார். கனவில் பாபாவின் மார்பில் சூரியனைப் போன்ற ஒரு ஒளிமிக்க வட்டத்தைக் கண்டேன். அந்த சூரியனுக்குள் இறந்துபோன என் ஆண் சிசுவை மடியில் வைத்துக்கொண்டு பாபா உட்கார்ந்திருக்க, அவர் என்னிடம் கூறுகிறார்: "இந்த ஆபத்தான குழந்தையை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டேன். உனக்கு ஒரு நல்ல குழந்தையை அளிக்கிறேன், பயப்படாதே". இந்த காலத்திற்கு முன் எங்கள் குடும்பம் அகமத்நகரை விட்டு பூனாவில் குடியேறிவிட்டது. நான் வீட்டிற்கு திரும்பியவுடன் இறந்துபோன குழந்தையின் ஜாதகத்தை எடுத்துப்பார்த்தேன். அது மூலா நக்ஷத்திரத்திலேயே பிறந்திருந்தது. பதினைந்தே மாதங்களில் எனக்கு ஒரு மகன் பிறந்து இன்றும் ஆயிளுடன் இருக்கிறான். இது நடந்தது 1918ல்.

சாயிபாபாவிடம் என் விசுவாசம் அதிகரித்தது. பிற மகான்களையும் நான் சாயிபாபாவாகவே காண்கிறேன். அவர்களை பணியும்போது வெளிப்படையாகவோ அல்லது எனக்குள்ளேயோ "சமர்த்த சத்குரு சாயிநாதனுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொள்வேன். 1927ம் ஆண்டில் கேத்காம்பேட்டிற்குச் சென்று நாராயண மகராஜை இந்த வார்த்தைகளை மனத்துள் கூறிக்கொண்டே வணங்கினேன். அவர் என்னிடம் உரைத்தார்: "உனது குரு பரமகுரு. அவர் என்னை விட உயர்ந்த தன்மை படைத்தவர். நீ ஏன் இங்கு வந்தாய்? அங்கே செல். உன் எண்ணம் ஈடேறும்". இது நடந்தது பாபாவால் என் முந்தைய குழந்தை பிறந்தது பற்றி குறிப்பிட்டிருந்ததற்கு முன்னதாக.

1927ல் என் கிரகபலன் சுபகரமாக இல்லை! என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருந்த சீதாராம் உத்தரேச்வரர் (அதாவது சிவபெருமான்) ஆலயத்திற்கு சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு "சாயிபாபாவுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்ப்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருக்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகி தாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் பெயரை உச்சரிக்க அவரிடம் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார்: "நீ ஒரு பெரும் மகானிடம் தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற ஒரு எளிய சாதுவிடம் நீ ஏன் வரவேண்டும்.? என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களை பற்றுகிறோம்". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் ஒரு பகீர் போன்று தோன்றி  "நீ மிகவும் சஞ்சல மடைந்துள்ளாய். எனக்கு பிட்சை கொடு. உனது உடல், மனம் முழுவதையும் பிட்சையாக கொடு". எனக் கூறினார்.

நான்: இந்த பிச்சையை அளித்துவிட்டு பின்னர் என் தந்தையிடம் தெரிவிக்கிறேன்.
பாபா: உன் தந்தையை கலந்தாலோசிக்காமல் நீ எப்படி இதை செய்வாய்?
நான்: என் வாழ்க்கையின் அதிகாரி நானே. என் தந்தைக்கு இதர புத்திரர்கள் இருக்கிறார்கள்; அவர் ஆட்சேபிக்கமாட்டார். குழந்தைகளை அளித்தவர் தாங்களே; ஆகவே என்னை தங்களுக்கு அர்ப்பணிப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

பின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்களில் தாங்கி தமது சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் நிறைய அன்பு காட்டினார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப் பெற்றேன். விழித்தெழுந்தபோது, நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்; என் மனது உதாசீனம் அல்லது வைராக்கியம் (பற்றின்மை) பெற்றது. முன்புபோல் இப்போது பொருட்கள் என் மனதைக் கவரவோ ஆட்கொள்ளவோ இல்லை. இரண்டு மூன்று மாதங்களில், அதாவது 1928ம் ஆண்டு பங்குனியில் எனக்கு பண்டரிபுரத்தில் ஒரு மகன் பிறந்தான். பதினைந்து மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையும் நானும் ஷீரடிக்குச்  சென்றபோது என் தந்தை எனக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்க அருள்செய்ய வேண்டும் என பாபாவிடம் பிராத்தித்தார். 1931ல் எனக்கு இன்னுமொரு மகன் பிறந்தான்; அவனுக்கு சாயிதாஸ் என பெயர் சுட்டினேன். பிறந்த இரண்டாவது தினத்தில் அவனுக்கு அதிக காய்ச்சல் கண்டது. பாபாவின் ஊதியையும், தீர்த்தத்தையும் கொடுத்து ஒரு தாயத்தில் பாபாவின் துணிக்கந்தைகளிலிருந்து எடுத்த ஒரு துண்டை வைத்து அந்த தாயத்தை குழந்தைக்கு அணிவித்தோம். குழந்தை குணமடைந்தது. ஒரு வயது நிரம்பியவுடன் குழந்தையை ஷிர்டிக்கு எடுத்துச் சென்றோம்.

என் சிறு வயதில், சுமார் ஏழு வயதானபோது, ஷீரடிக்கு சென்ற நான் பாபாவின் பாதத்தை பிடித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே வந்திருந்த குழந்தைகள் யாவருக்கும் பாபா இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார். என் கவனம் இனிப்புகள் மீது திரும்பி பாத சேவையில் சிரத்தை குறைந்தது. என் அருகில் இருந்த என் தாய் "இனிப்புகளை நினைத்துக்கொண்டு பாபாவின் தொண்டை மறந்துவிட்டாயா?" எனக் கூறி என்னை அடித்துவிட்டாள். "ஏன் அம்மா பையனை அடிக்கிறாய்?" எனக் கத்தினார் பாபா. பாபாவுக்கு பணிவிடை செய்வதில் நல்ல ஆவல் எனக்கு உண்டாக அருள்புரிய வேண்டுமென பாபாவிடம் பிராத்தித்தாள். "சிறுவன் எனக்கு சிறப்பாக பணிபுரிவான். மனதில் தூய்மையான ஆசைகள் எழ ஆண்டவன் அருள்புரிவார். அஞ்சவேண்டாம்! அவனை அடிக்காதே!" என பாபா மொழிந்தார். எனக்கு பன்னிரண்டு வயதான போது, எனக்கு மூத்தவனான மாற்றுச்சகோதரன் ஒருவனுடன் நான் ஷிர்டிக்குச் சென்றேன். எங்களிடம் 100 ருபாய் இருந்தது. பாபா தட்சிணையாக கேட்டார். முதலில் ரூ. 10 பின்னர் ரூ.15 இப்படியாக கேட்டு என் சகோதரன் சட்டைப் பையில் ரூ.25 மட்டுமே எஞ்சியிருந்தது. உடனே பாபாவுக்கு மேலும் கொடுப்பதற்காகவும், எங்கள் திரும்பும் பயணச் செலவுக்காகவும் தேவையான பணம் அனுப்பும்படி அகமத் நகரிலுள்ள எங்கள் வீட்டிற்கு கடிதம் எழுதினோம். அன்று மாலை பாபா என் சகோதரனிடம் ரூ.25 தரும்படி கேட்டார். அவன் "கொண்டுவந்த பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் ஊருக்கு திரும்பிச்செல்லவே பணம் தேவை" என பதிலளித்தான். பாபா உடனே பதிலடி கொடுத்தார்! "ஏன் இந்த பொய்ப் பேச்சு! உன் பையின் மூலையில் ரூ.25 இருக்கிறது. நீ ஊருக்கு எழுதியுள்ளபடி நாளை மணியார்டர் மூலம் பணம் வந்துவிடும். கவலை வேண்டாம்!" என் சகோதரன் உடனே ரூ.25 அளித்துவிட்டான்.

"எனக்கு ஒன்று அளிப்பவருக்கு, நான் இரண்டு அளிப்பேன். இரண்டு அளிப்பவருக்கு ஐந்து, ஐந்து அளிப்பவருக்கு பத்து கொடுப்பேன்" என பாபா சொல்வது வழக்கம். ஒருவன் பகவானுக்கு அளிப்பதை அவர் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறார் எனும் வெளிப்படையான பொருளைத்தவிர, ஒரு கூடகமான (மறைந்து நிற்கும்) பொருளும் இதில் அடங்கியுள்ளது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 22, 2017

குருவின் திருவடி


ஒரு பக்தனுக்கு தனது குருவின் திருவடிவே தியானத்திற்கு மூலமாகவும், குருவின் பாதங்களே அனைத்துப் பூஜைகளுக்கும் உரிய மூலப்பொருளாகவும், குருவின் திருவாய் மொழிகளே அனைத்து மந்திரங்களிலும் சிறந்த மூல மந்திரமாகவும், குருவின் திருவருளே முக்திக்கு மூலமாகவும் விளங்குகிறது. - அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனக்கு எல்லாமே பாபாதான்

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும் காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். 

உதாரணத்திற்கு, பாபாவின் நெருங்கிய பக்தரான சாமாவை ஒருமுறை நச்சுப் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. வலி கடுமையாக இருந்தது. விஷம் மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. சாமாவும் பயத்தில் மிரண்டு போயிருந்தார். உடல் முழுவதும் சிவந்து போயிருப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர்களில்  ஒவ்வொருவரும் மருத்துவரிடமும் செல்லவும், விரோபா கோயிலுக்கு (பாம்பு கடித்தவர்களை இக்கோயிலுக்கு  சென்றால், உயிர் பிழைத்து விடுவதாக ஷிர்டி மக்கள் நம்பினர்) செல்ல சொன்ன போதும் சாமா, " எனக்கு எல்லாமே பாபாதான். அவரிடமே நான் செல்ல விரும்புகிறேன். ஒருவேளை எனது உயிர் போவதாக இருந்தாலும் அது எனது ஒரே அடைக்கலமான பாபாவின் மசூதியிலேயே போகட்டும் என்று கூறி அழுதபடி பாபா வாழ்ந்து வந்த மசூதிக்கு (துவாரகாமாயி) ஓடிச் சென்று பாபா பாதத்தில் வீழ்ந்து பணிந்தார் (உயிர் பிழைத்தார்) இதற்குப் பெயர் தான் குருபக்தி.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 20, 2017

கவலைகள் அனைத்தும் தீரும்உங்களுடைய கவலைகள் அனைத்தும் தீரும். பாபாவிடம்  ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார். நீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள். பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள். வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா  நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே. பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஓம் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 19, 2017

பாபா ஒரு பயிற்சியாளர்

ரிணானுபந்தம் அல்லது வேறு காரணங்களுக்காக பாபா, ஆயிரக்கணக்கானோரை  தம்மிடம் தருவித்துக் கொள்கிறார். அவர்களை அவ்வாறு தம்மிடம் வரச்செய்து பின்னர் அவர்களை தம்மை விடாமல் பிடித்துக் கொண்டு அவரிடமிருந்து மேன்மேலும் பலன்கள் பெறச் செய்வதன் பொருட்டு, பாபா தமது அசாதாரண சக்திகளை உபயோகித்து பலவித நலன்களை அருளுகிறார்.

பாபாவுடன் தொடர்பு கொண்டவர்களாலும் , அவருடைய மாகாசமாதிக்குப் பின் அவரைப் பற்றி சிந்திப்பவர்களாலும் பெரும்பாலும் பாபா ஒரு ஆசானாகக் கருதப்படவில்லை. பாபா ஒரு ஆசான் என்பது இப்போது அதிக அளவில் உணரப்படுகிறது. அப்படிக் கூறுவதும் சரியாகாது. அவர் ஒரு ஆசான் மட்டுமே அல்ல. அவர் ஒரு பயிற்சியாளர். அதற்கும் மேலாக, அண்டிவரும் பக்தனின் ஸ்வரூபத்தையே நல்ல முறையில் உருவாக்கும் பொறுப்பை ஏற்பவர். அதையும் விட அதிகமாகவும் கூறலாம். அவரிடம் தஞ்சம் புகுந்துவிட்டவர்களின் முன்னேற்றத்துக்கு, லௌகீகமாகவும் ஆன்மீக ரீதியாகவும், தேவையான எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம். அதற்கும் மேலாக, பாபா ஒரு ஆசானோ, பயிற்சியாளரோ மட்டுமல்ல. அவரே ஒரு பள்ளி அல்லது கலாசாலை, ஏன் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புத் திட்டங்கள் அடங்கிய ஒரு பல்கலைக்கழகமே ஆவார். இவ்வாறாக முடிவில்லாது சிந்தித்தும் பார்க்க முடியாத நிலைகளுக்கு கொண்டு செல்லத் தக்கவர். ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்ற முறையில் இருந்து, ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட முறையில் தக்கதான விசேஷ கல்வி முறைகளை அளிப்பவர். ( பாபா என்ற ) ஒருவரே ஆசானாகவும், பயிற்சியாளராகவும், போதிப்பவராகவும், மேற்பார்வையாளராகவும், வெகு தொலைவிலுள்ள இடங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பவராகவும் இருக்கக்கூடிய விசேஷமான சக்தி இதற்கு முன் காணப்படாதது, கேள்விப்படாது.

                                               * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 17, 2017

எல்லா ஆசைகளும் எப்போதுமே நிறைவேறியதில்லை

காற்றடித்தால் கலைவதைப் போல  பாபா மீதான என் நம்பிக்கை நிலைகுலைந்து போகிறது. இதைத் தடுப்பது எப்படி ? இது மீண்டும் நடக்காமலிருக்க என்ன வழி? 

பாபாவிடம் இன்னும் நெருக்கமாக வரவேண்டும் என்று விரும்புபவர்களுக்கான ஒரே வழி எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரிடம் அசைக்க முடியாத, மாறாத நம்பிக்கை கொள்வது மட்டுமே. ஆனால் சிலர் உலகியல் ஆதாயங்களுக்கான ஆசைகளுடன் பாபாவை நாடி வருகின்றனர். அல்லது இதுபோன்ற எதிர்பார்ப்புகளுடன் தங்களது பக்தியை வெளிபடுத்துகின்றனர். சில சமயங்களில் அவர்களது ஆசைகள் பூர்த்தி அடையாவிட்டாலோ அல்லது அவர்களது முன்வினைகளின் பலனாக கஷ்டப்பட நேர்ந்தாலோ, அவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்குகின்றனர்.
எந்த ஒரு அவதாரம் அல்லது சத்குருவின் காலத்திலும் எல்லா மனிதர்களுடைய எல்லா ஆசைகளும் எப்போதுமே நிறைவேறியதில்லை. பக்தர்கள் இறைவனை அடைய தடையாய்  இருக்கும் எந்தவிதமான ஆசைகளையும் சத்குரு நிறைவேற்றுவதில்லை. இதுபோன்ற ஆசைகள் நிறைவேறாமல் போவதன் பின்னணியிலும் பாபாவே உள்ளார். எனவே இன்பத்திலும், துன்பத்திலும் என இரண்டிலுமே பாபாவைக் காணக்கூடியவர் யாரோ அவரே உண்மையான பக்தராவார். இன்பத்தை மட்டுமே நாடுபவர்கள் பாபாவை விட்டு விலகிச்செல்லவே நேரிடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 16, 2017

ஷீரடிக்கு செல்லும் உங்களுக்கு சில உதவி குறிப்புகள் " பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

 பாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை   எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம்  கிடைக்கும் போதெல்லாம், ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.

பாபா உங்களை அழைத்தால் மட்டுமே உங்களால் ஷீரடிக்கு செல்ல முடியும்.
ஷீரடிக்கு செல்லும் உங்களுக்கு சில உதவி குறிப்புகள்.....                                                                 

எப்படி செல்வது ?


இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில், பேருந்து, மற்றும் கார் மூலமாக ஷீரடிக்குச் செல்லலாம். ஷீரடிக்கு நேரிடையாக வந்து சேரும் வசதியற்ற நகரங்களில் வசிப்பவர்கள் புனே (200 கி.மீ ), கோபர்காவ் (14 கி.மீ ) மன்மாட் (55 கி. மீ ) நாசிக் ( 85 கி.மீ ) மற்றும் ஔரங்கபாத் (132 கி .மீ ) ஆகிய நகரங்களுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து ஷீரடியைப் பேருந்து மற்றும் கார் மூலம் சென்றடையலாம்.

சென்னையிலிருந்து சுமார் 1400 கி.மீ. தொலைவில் உள்ள ஷீரடிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு புதன் கிழமையிலும் காலை 10.00 மணிக்கு ஷீரடி விரைவு ரயில் புறப்பட்டு, வியாழன் காலை 11.30 மணிக்கு ஷீரடியைச் சென்றடைகிறது. அதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஷீரடியிலிருந்து காலை 8.00 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. முன்பதிவு செய்து கொண்டு சென்று வரலாம்.

சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் புனே வரை சென்றால் அங்கிருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஷீரடிக்கு அரை மணிக்கு ஒரு பேருந்து செல்கிறது. அல்லது ரயிலில் தோண்ட் வரை சென்று அங்கிருந்து கோபர்காவுக்கு  ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். நவஜீவன் விரைவு ரயிலிலும் புஷாவல் வரை சென்று அங்கிருந்து மன்மாட் வழியாக ஷீரடிக்குப் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். முன்பதிவு செய்து கொண்டு பயணம் மேற்கொள்வதே சிறந்தது.
இந்திய ரயில்வே சுற்றுலாத்துறை மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ஷீரடிக்குப் பக்தர்களைக் கூட்டிச் சென்று வருகின்றன.GOOGLE இல் SHIRDI SPIRITUAL TOUR என்று தேடினாலே விவரங்கள் கொட்டுகின்றன.

எங்கே தங்குவது ?

ஷீரடியில் உணவு விடுதிகளுடன் கூடிய எண்ணற்ற தங்கும் விடுதிகள் உள்ளன. ( வாடகை ரூ.100/- முதல் ரூ. 2000/- வரை )

இவை மட்டுமல்லாது ஷீரடி சாயிபாபா கோவிலின் ஸ்ரீ சாயி சன்ஸ்தான் டிருஸ்டுக்கு சொந்தமான சாயி ஆஷ்ரம் விடுதியில் 1536 அறைகள் உள்ளன. தவிர குளிர்சாதன வசதியுடன் கூடிய 384 அறைகளும் உள்ளன.

பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள துவாரவதி விடுதியில் 334 அறைகளும், பெரிய குடும்பத்தினர் ஒன்றாகக் கூடி தங்கா வசதி கொண்ட பெரிய அறைகளும் உள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட 80 அறைகளும் உள்ளன. இவையனைத்தும் 24 மணி நேர தண்ணீர் மற்றும் மின்சார வசதி, வண்டிகளை நிறுத்த இட வசதி ஆகியவற்றுடன் அமைந்துள்ளன.

சன்ஸ்தான் டிருஸ்ட் பாபாவை தரிசிக்க வருகை தரும் எளிய பக்தர்களுக்காக, குளியலறை மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய, நால்வர் தங்க முடிகிற எளிமையான அறைகளை நாளொன்றுக்கு ரூ. 50/- வாடகையில் அளிக்கிறது.

தவிர ஐநூறுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட பக்த நிவாஸ், சமாதி மந்திருக்கு தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 24 மணி நேர மின்சாரம், குடிநீர், உணவகம், வண்டிகளை நிறுத்த இடம் ஆகிய வசதிகளும் இங்கு உள்ளன.

https://online.sai.org.in/  என்ற வலைதளத்தில் அறைகள், ஆரத்தி மற்றும் தர்ஷன் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை விடுதியும் உண்டு. அனைத்து வசதிகளும் கொண்ட அறைகள் கிடைக்கும். வாடகை ரூ.1200/- முன்பதிவுக்கு அணுக வேண்டிய முகவரி ;

MAHARASHTRA TOURISM DEVELOPMENT CORPORATION,

PIMPALWADI ROAD,SHIRDI,AHMEDNAGAR DISTRICT,

MAHARSHTRA, INDIA

Tel : 91-11-(02423)-255194, 255195, 255196, 255197.
Email - contactmaharashtratourism@gmail.com

தரிசன நேரம் 

சமாதி மந்திர் காலை 04.00 மணி முதல் இரவு 11.15 மணி வரை திறந்திருக்கும். தினதோறும் அதிகாலை 04.30 மணிக்கு காகட் ஆரத்தி, நண்பகல் 12.00 மணிக்கு மதிய ஆரத்தி, மாலை அஸ்தமன நேரத்தில் தூப் ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு ஸேஜ் ஆரத்தி என நான்கு கால ஆரத்தி நடைபெறும். தவிர சத்யநாராயண பூஜையும் தினமும் நடைபெறுகிறது.

60 வயதைக் கடந்தவர்களுக்கும், அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.


" என் பக்தன் ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு குருவி யின் கால்களுக்கு கயிறு கட்டி இழுப்பது போல். இந்த மசுதி தாயிடம் இழுத்துக்கொண்டு வருவேன். - ஷிர்டி சாய்பாபா "http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 15, 2017

பக்தியும் நம்பிக்கையும்"குருமூர்த்தியிடம்  திடமான  பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் இன்னல்களும் ஏழ்மையும் இருக்காது."   - ஸ்ரீ குருச்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 14, 2017

சந்தேகமோ கேள்வியோ இல்லாமல் நாம் பாபாவை நம்ப வேண்டும்நமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத் தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச் சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான். பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் , பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும். நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றைத் தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாகப் பெறுவார்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 13, 2017

காரியம் கைகூடிய பிறகு கவலைப்படுவதில்லை

எனக்கு என்ன வீடா, வாசலா, குடும்பமா, குழந்தையா? நான் ஏன் தக்க்ஷினை கேட்கவேண்டும்? நான் எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை. கடனைத் திருப்பி கேட்பவள் இந்த மசூதிமாயீ! . கொடுப்பவர் தம் கடனிலிருந்து விடுபடுகிறார். தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறார்கள்; காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. என் பக்தர்கள் எவர் கடன்பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 12, 2017

குரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.
"குருவை நம்பு.ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை" என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று.ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர,அது  பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது.பாபாவின் படம்,அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது.பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக ,பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது,நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும்.நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும்.பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி,அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக,நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும்,அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து,அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும்,தூங்குவதற்கு முன்,நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக,வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும்.பாபா,தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து,அவரது இருப்பை உணர்ந்து,அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி,வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

                                                                             - ஆச்சார்யா  E . பரத்வாஜா.
                  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 10, 2017

தெய்வீக அவதாரம்


குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரகசியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது. எப்போதோ வாழ்ந்த மகான் அல்ல அவர். தன்னை தவிர வேறெதிலும் நாட்டமில்லாமல், தன்னிடம் மட்டுமே பூரண சரணாகதி அடைந்த பக்தர்களுடன் எப்போதும் இருக்கின்ற தெய்வீக அவதாரம் அவர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 9, 2017

தீய பழக்கங்களையும் ஒழுக்கக்கேடான செயல்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்." எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி, எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ, நான் அவனுடைய அடிமை. என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதே போல் இருப்பேன்- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா " 

எந்த உணவையோ பானத்தையோ சாப்பிடுவதற்கு முன்னால், பாபாவை நினைத்து, அவருக்கு சமர்ப்பித்த பிறகே சாப்பிடவேண்டும். பாபாவின் சிலையோ படமோ அருகில் இல்லையென்றாலும், கண்களை மூடி அவரை மனதுள் நினைத்து, அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒருபோதும் தனித்து உண்ணக்கூடாது... ஏனெனில், நாம் ஒருபோதும் தனியாக இல்லை, பாபா எப்போதும் நம்முடனேயே இருக்கிறார். 

மேலும் பாபா  கூறுகிறார் : " நீ சாப்பிடுவதை எல்லாம் பக்கத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்வாயென்று எனக்குத் தெரியும். ஆனால், நீ தனியாக இருக்கும்போது.... அதை என்னுடன் பகிர்ந்து கொள்கிறாயா ? நான் உன்னுடன் இல்லையா ? "

பாபாவின் இந்த வார்த்தைகள் விலைமதிப்பற்றவை. இச்சொற்களின் ஆழத்தைப் புரிந்துகொண்ட எவரும், ஒரு கவளம் உணவையோ அல்லது ஒரு மிடறு தண்ணீரையோ, பாபாவுக்கு அர்ப்பணிக்காமல் சாப்பிடமாட்டார்கள்.

உணவு மட்டுமல்லாமல், புலன் இன்பத்திற்கான நமது செயல்களையும் பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிடவேண்டும். உலக வாழ்வின் எந்தப் பொருளை அனுபவிக்கும் முன்பும், பாபாவின் பெயரை நினைவுகூர வேண்டும். இதுவே அவருக்கு அர்ப்பணிப்பதற்கு ஒப்பானது.இப்படி செய்வதின் மூலம், நமது தீய பழக்கங்களையும் ஒழுக்கக்கேடான செயல்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.

                                                      * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 8, 2017

பாபாவைத் தவிர வேறு கதி இல்லையாருக்கு அனுக்ரஹம் அளிக்க விரும்புகிறானோ, அவனுடைய எல்லா உடைமைகளையும் கைபற்றிவிடுகிறேன் " என்பதே பாபாவின் கொள்கை.

இதைப் பலரால் புரிந்து கொள்ள முடியாது. இந்நிலையில் வைக்கப்பட்ட சாதகன் படிப்படியாக பாபாவைத் தவிர, தனக்கு வேறு கதி எதுவுமில்லை என்பதை உணர்ந்து, திடமான நம்பிக்கையும், விசுவாசத்தையும் பெற்றுவிடுகிறான். இகவுலகில் ஒன்றுமே இல்லை என்ற சூன்ய நிலையே பரலோக சாதனத்திற்கு, அதாவது இறைவனைக் கண்டறிவதற்கு முதற்படி.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 7, 2017

பாபா தமது பக்தர்களுக்கு முன் தோன்றுகிறார்.

"ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.  எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை.  என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் "- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 
பாபா தமது உடலில் இருந்த போதும், உண்மையில் அவர் உடலில் கட்டுண்டு இருக்கவில்லை. அவர் எல்லா இடங்களிலும் எல்லா உருவிலும் இருந்தார். பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார். ஆனால் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில்தான். இன்றும்கூட அவர் மீண்டும் தமது பக்தர்களுக்கு முன் தோன்ற முடியும் ; தோன்றுகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 6, 2017

பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்


நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.

கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!

சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.

"வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா.

பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.

ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 5, 2017

காப்பவரும் ஆழிப்பவரும் குருவே

" யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் ஆழிப்பவரும்  குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்"  -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 4, 2017

எப்போதும் துன்பம் நேராது

"நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன். உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது"- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [மாண்புமிகு மகான்கள்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...