Tuesday, May 30, 2017

குரு பக்தியே சிறந்த சாதனம்
"இந்த  ஜனங்கள் புத்தகங்களில் பிரம்மா அல்லது கடவுளைக் காண விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிட்டுவது பிரமா அல்லது மோகமே! குரு பக்தியே சிறந்த சாதனம். வேறு எதுவும்  தேவையில்லை."- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

அதிகமாகப் புத்தகங்களைப் படிப்பதால் மோகமும், அகங்காரமும் வளர்கிறதேயன்றி ஆன்மீக வளர்ச்சி ஏற்படாது என்பது பாபாவின் கூற்று. கல்விச் செருக்கு எத்தனையோ பேர்களை பக்தியில்லாமலாக்கி  விடுகிறதல்லவா? ஆகவே குருபக்தி ஒன்றிருப்பின் மற்ற எல்லாம் தானே வந்து விடுகின்றன என்றார் பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

இறை நாமம்

மாயை மிகவும் பலமானது. ஆனால் இறைநாமமோ அதைவிட சக்தி வாய்ந்தது. இறை நாமம் ஒன்றே உய்யும் வழி. மாயையை வெல்ல இறைவனிடம் விஸ்வாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 29, 2017

சாய்பாபா பூஜை முறைகள்

"எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடோபசார பூஜையோ வேண்டாம். எங்கு பக்தி பா(BHA)வம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன். நம்பிக்கை உள்ள பக்தியால் மட்டுமே எனது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமலேயே கிடைக்கும். எனது பக்தனுக்கு இது ஒரு அற்புதம்." -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா தனக்கு ஷோடோபசார பூஜை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்.

ஷோடோபசார (16 உபசாரங்கள்) பூஜை கீழ்க்கண்டவாறு.

1.ஆவாஹனம் - தெய்வத்தை ஒரு விக்கிரஹத்திலோ, படத்திலோ  எழுந்தருளும்படி  வேண்டிக் கொள்ளுதல்.

2.ஆசனம்- தெய்வத்திற்கு  ஓர் இருக்கை சமர்பித்தல்.

3.பாத்யம்- பாதங்களை அலம்பிக் கொள்வதற்குச்  சுத்தநீர் சமர்பித்தல் 

4அர்க்கியம்- அக்ஷதை, அருகம்புல், மலர்கள் இவற்றுடன் நீர் சேர்த்து அல்லது வெறும் நீர் சமர்ப்பணம் செய்தல்.

5.ஆசமனம்- உள்ளங்கையில் நீரேந்தி மூன்றுமுறை குடிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.

6.ஸ்நானம்-குளிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.

7.வஸ்த்ரம்- உடுத்துக்கொள்வதர்க்கு உடை சமர்ப்பணம் செய்தல்.

8.யக்ஞோபவீதம்- பூணூல் அணிவித்தல்.

9.கந்தம்- அரைத்த சந்தனம் இடுதல்.

10.புஷ்பம்- மலர்களை சமர்பித்தல்.

11.தூபம்- சாம்பிராணிப் புகைச் சூழச் செய்தல்.

12.தீபம்- விளக்கை காட்டுதல்.

13. நைவேத்தியம்- உணவு மற்றும் குடிநீர் சமர்பித்தல்.

14.தக்ஷிணா - தக்ஷிணை சமர்பித்தல்.

15.பிரதக்ஷினம்  - வலம்  வருதல்.

16. மந்திர புஷ்பம்- வேதமந்திரங்களைக் கோஷித்தவாறு இரண்டு கைகளாலும் தெய்வத்தின்மேல் பூமாரி பொழிதல் .  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamilSunday, May 28, 2017

எல்லாமே பாபாவின் ஆசீர்வாதம்

நீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும். இதை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 27, 2017

பாபா பக்தர்களுக்கான மந்திரம்

பாபா எவர் காதிலும் எந்த மந்திரத்தையும் ஓதவில்லை. எவ்வித பூஜை வழிபாட்டு முறைகளையும் அவர் எதிர்பார்ப்பதுமில்லை. "சாயி,சாயி" என்று நீங்கள் கூறிக்கொண்டிருப்பதே  பாபாவிற்கு மிகவும் பிடித்தமான மிகச்சிறந்த வழிபாடு ஆகும். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 26, 2017

பாபாவின் குழந்தை


யாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையுமோ பாபா ஏற்பார்.
பாபாவே கூறியுள்ளபடி,  " ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை ".

பாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர்? மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வை. பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.

                                                                * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 25, 2017

பாபாவுக்கு சமமானவர் எவரும் இல்லை


எவர் எனக்கு சமமானவர் என்று எவரையும் அறியமாட்டாரோ, எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 24, 2017

விரோதி

யாரைப் பற்றியும் அவன் எனக்கு எதிராளி எனக் கூறாதே. யார் யாருடைய 
விரோதி? எவரிடமும் மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்ளாதே. எல்லோரும் ஒன்றுதான்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 23, 2017

தியானம் செய்வீராக


என்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் - இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும்  அடையவேண்டியதும் ஆகும். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.
இப்பிரபஞ்சமென்னும்  மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா உணர்வு என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இத்தனை வீண் பிரயத்தனங்கள்? விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய  நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை. ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோஹமுமாகிய   பந்தங்களை அறுத்தெரியவேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை. ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார். தயை மிகுந்த சாயி, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் தியானத்தின் மஹிமையையும் விவரணம் செய்தார். பகவான் ஸ்ரீ  கிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலகபந்தகளிலிருந்து  விடுபடும் சாதனையாக அதை நியமித்தார். 

பாபா கூறினார், " நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.
ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே ஆன்மீக ஒழுக்கம் ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.. முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும் ; கிடைக்க வேண்டியது கிடைக்கும். இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்திலிருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 22, 2017

காப்பவரும் ஆழிப்பவரும் குருவே

"யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் ஆழிப்பவரும்  குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்"  -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 21, 2017

சக்தி வாய்ந்த முறை


இன்று ஆத்மீகத்துறையில் புகழ்பெற்று விளங்கும் எண்ணற்றவர்களில். எவர் உண்மையில் பரிபூரணமானவர் என்று அறிந்துகொள்வது எளிதல்ல. மற்ற விஷயங்களைப் போலவே இவ்விஷயத்திலும், தம்மைப் பூரணஞானியென்று
கூறிக் கொள்ளும் போலிகள் ஏராளமாயுள்ளனர். இந்தச் சிக்கலிலிருந்து சாதாரண மனிதனைக் காப்பாற்ற, ஆத்மீகத் துறையில் சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கையாண்டனர். முற்காலத்தைச் சேர்ந்த பரிபூரணமான குரு ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தையும் போதனைகளையும் பாராயணம் செய்வதால், சாதகனின் ஆத்மீக சக்தி விழிப்படைந்து, தக்க காலத்தில் கனவின் மூலமாகவோ அல்லது நனவில் ஏற்படும் காட்சியின் மூலமாகவோ, அவரது இயல்புக்கேற்றவரான ஒரு பரிபூரணமான குருவிடம் அவர் செலுத்தப்படுவார். தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை\ ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே  அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிய பெரிய புராணம் என்ற நூலைப் பாராயணம் செய்ததால்,ஊக்கமுள்ள சாதகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையை உணர்ந்த முனிவர் ஒருவரின் முன்னிலையானது, ஒருவரது சொந்த முயற்சிகளைக் காட்டிலும், பதினாயிரம் மடங்கு மேலானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், ஸ்ரீ ரமண மகரிஷியும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்டகாலம் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அத்தகையவர்களுக்கு மஹான்களின் சரிதங்களைப் பாராயணம் செய்வது சிறந்த மாற்றுவழியாகும். ஸ்ரீ ரமண மகரிஷியை அடிக்கடி தரிசித்துவந்த சாதகர் ஒருவர், தாம் ரமண மகரிஷியிடம், " ஐயா, நீங்கள் எங்களை ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்ட காலம் இருக்கும்படிக் கூறுகிறீர்கள். குடும்பப் பொறுப்புகள் உடைய எங்களில் பெரும்பான்மையோருக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை.  நாங்கள் என்ன செய்வது.? " ஏனென்று கேட்டார்.
மகரிஷி, " சத்சங்கம் என்றால் என்றும் அழியாததாகவும்  எங்கும் நிரம்பியதாகவும் இருக்கும் உண்மைப் பொருளோடு  தொடர்பு கொள்வதேயாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அதைப்பற்றி நினைத்திருப்பதே ஆகும். உண்மைப் பொருளை உணர்ந்த ஒருவரது வாழ்க்கையையும் போதனைகளையும் பக்தியுடன் படிப்பதும் சத்சங்கமே " என்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 20, 2017

குரு சரித்திர பாராயணம் செய்யவும்

"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன?  குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா? என்று கேட்டார். அதற்க்கு பாபா "ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்" என்று கூறினார்.

( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )


குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ, அது படிப்பதாலேயே கிட்டும்.

சாய் ராம்,  குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் புத்தகங்களை  படிக்க விரும்பும்   சாயிஅன்பர்கள்  saibabasayings@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file  அனுப்பபடும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 19, 2017

பக்தரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதில்லை


ஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை. குறித்த நேரத்தில் பாபா கஷ்டங்களை போக்கியருள்வார் என்ற திடமான நம்பிக்கை (நிஷ்டை), பொறுமை (ஸபூரி)  இரண்டும் வேண்டும். இப்பிறவியில் மட்டுமல்ல எத்தனை பிறவிகள் பிறவிகள் எடுத்தாலும் தனது பக்தர்களை காப்பதாக பாபா உறுதி பூண்டுள்ளார் என்பதை சாயி பக்தர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 18, 2017

இந்த சரீரம் பாபாவினுடையது.


சேவை செய்வதோ, செய்யாமலிருப்பதோ நமது இஷ்டம் என்ற எண்ணத்துடன் சேவை செய்வது சேவை ஆகாது. இந்த சரீரம் நமது உடமையல்ல, அது பாபாவினுடையது. அவருக்கு பணி புரிவதற்கென்றே  ஏற்பட்டது என்ற மனோபாவத்துடன் செய்யப்படும் பணியே சேவை ஆகும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 17, 2017

நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை


1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.

1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா (ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 16, 2017

பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும்


கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான  உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்ர பாராயணம் மற்றும் பல செயல்களும் ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை அடைகின்றன. ஸ்ரீ  சாயியிடமிருந்து  புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் சென்றைடைகின்றன.     

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 10, 2017

அரசனும் ஆண்டியும்


இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை. துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை. அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 9, 2017

உனது குறிக்கோளை எய்துவாய்

"இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையயும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 8, 2017

நானே உனது தந்தை


எல்லா திசைகளிலும் நான் உன்னை  சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய்? நீ  எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன்? உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.(ஸ்ரீ சாய் சத்சரித்ர சாராம்சம்)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 7, 2017

பலன்கள் விரைவில் கிட்டிவிடும்

பக்தர்களில் பெரும்பான்மையோர் முதலில் லௌகீகமானதும் பின்னர் ஆன்மீகமானதுமான பலன்களையே விரும்புகின்றனர். மனிதன் எடுத்த சரீரம்,அதைச் சார்ந்தவை,அதாவது குடும்பம் போன்றவை.தேக ஆரோக்யத்திற்க்கும், ஒரு அளவு வசதியான வாழ்க்கைத் தேவைக்கும் போதுமான பொருட்களுடன் பராமரிக்கப்பட வேண்டியிருக்கிறது.அதன் பின்னரே ஆன்மீக வாழ்வுக்குத் தேவையானவை.இந்த அவசர உதவி வேண்டும் என கருதுபவர்கள் எல்லோரும் சாயி பாபாவை அணுகலாம்.எந்த அளவுக்கு அவர்கள் வேண்டுகோள் உளமுருக இருக்கிறதோ,பாபாவிடம் எந்த அளவுக்கு அவர்கள் நம்பிக்கை இருக்கிறதோ,அந்த அளவுக்கு பலன்கள்  விரைவில் கிட்டிவிடும்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 6, 2017

முன்ஜென்ம வினை


முன்ஜென்ம வினைகளால் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும். ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதை, பாபாவின் மேல் நம்பிக்கையும், பொறுமையுமுள்ள பக்தன் சுலபமாகத் தவிர்த்து விடலாம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, May 5, 2017

பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே

பாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின்  கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில்  பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான்  அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, "நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை? " என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.  
        1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்திபடுத்துவதற்காகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின்  மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வரை பாபாவின் திடபக்தராக இருந்தார்.  பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள்  நிலை நாட்டுகிறது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 4, 2017

உங்களிடம் பாபா நிச்சயம் பேசுவார்பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி,ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும்..சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார்.அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார்.சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி,கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை , நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை. 
                                                        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 3, 2017

குருவினுடைய திறமை அதியற்புதமானது

நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப்  பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 2, 2017

பயப்படாதேநான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே. எங்கெல்லாம் என்னை நினைக்கிறயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 1, 2017

பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தர் யார் ?வேறெதிலும் ஈடுபடாத  விசுவாசத்துடன், மனம், வாக்கு, உடல், செல்வம், அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார். - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...