பாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின் கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில் பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான் அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, "நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை? " என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil