Friday, June 30, 2017

எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம்ரிணானுபந்தம் அல்லது வேறு காரணங்களுக்காக பாபா, ஆயிரக்கணக்கானோரை  தம்மிடம் தருவித்துக் கொள்கிறார். அவர்களை அவ்வாறு தம்மிடம் வரச்செய்து பின்னர் அவர்களை தம்மை விடாமல் பிடித்துக் கொண்டு அவரிடமிருந்து மேன்மேலும் பலன்கள் பெறச் செய்வதன் பொருட்டு, பாபா தமது அசாதாரண சக்திகளை உபயோகித்து பலவித நலன்களை அருளுகிறார்.

பாபாவுடன் தொடர்பு கொண்டவர்களாலும் , அவருடைய மாகாசமாதிக்குப் பின் அவரைப் பற்றி சிந்திப்பவர்களாலும் பெரும்பாலும் பாபா ஒரு ஆசானாகக் கருதப்படவில்லை. பாபா ஒரு ஆசான் என்பது இப்போது அதிக அளவில் உணரப்படுகிறது. அப்படிக் கூறுவதும் சரியாகாது. அவர் ஒரு ஆசான் மட்டுமே அல்ல. அவர் ஒரு பயிற்சியாளர். அதற்கும் மேலாக, அண்டிவரும் பக்தனின் ஸ்வரூபத்தையே நல்ல முறையில் உருவாக்கும் பொறுப்பை ஏற்பவர். அதையும் விட அதிகமாகவும் கூறலாம். அவரிடம் தஞ்சம் புகுந்துவிட்டவர்களின் முன்னேற்றத்துக்கு, லௌகீகமாகவும் ஆன்மீக ரீதியாகவும், தேவையான எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம். அதற்கும் மேலாக, பாபா ஒரு ஆசானோ, பயிற்சியாளரோ மட்டுமல்ல. அவரே ஒரு பள்ளி அல்லது கலாசாலை, ஏன் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புத் திட்டங்கள் அடங்கிய ஒரு பல்கலைக்கழகமே ஆவார். இவ்வாறாக முடிவில்லாது சிந்தித்தும் பார்க்க முடியாத நிலைகளுக்கு கொண்டு செல்லத் தக்கவர். ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்ற முறையில் இருந்து, ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட முறையில் தக்கதான விசேஷ கல்வி முறைகளை அளிப்பவர். ( பாபா என்ற ) ஒருவரே ஆசானாகவும், பயிற்சியாளராகவும், போதிப்பவராகவும், மேற்பார்வையாளராகவும், வெகு தொலைவிலுள்ள இடங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பவராகவும் இருக்கக்கூடிய விசேஷமான சக்தி இதற்கு முன் காணப்படாதது, கேள்விப்படாது.

                                               * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 29, 2017

விரும்பினவும் நன்மைகளும் விளையும்ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணம் சித்தத்தை தூய்மைப்படுத்தி ஆன்மீக நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும் விரட்டியடிக்கப்படும். விரும்பினவும் நன்மைகளும் விளையும். பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் ( நம்பிக்கையுடன் பாராயணம் செய்தால் ) அனுபவிக்கலாம். பக்தியுடன் பாராயணம் செய்வதால், உங்களுடைய அபூர்வமான இச்சைங்களுங்கூடப் பூர்த்திசெய்யப்படும். கடைசியில் நீங்கள் எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் எளிதில் கிடைக்காத ஸாயுஜ்ய முக்திநிலையை ( பாபாவுடன் ஒன்றிவிடுதல் ) அடைவீர்கள். அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும். சாய் பக்தர்கள் தினம் ஒரு அத்தியாமாவது பாராயணம் செய்யவேண்டும். தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது பாபாவுக்காக ஒதுக்கி சாயி நாமஜபம் ( சாயி, சாயி, சாயி என்று சொன்னாலே போதும் ....வேறு விசேஷமான மந்திரங்கள்  தேவையில்லை ) செய்தும் ஒரு அத்தியாயம்  பாராயணம் செய்யுங்கள். நிச்சயம் பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து பாராயணத்தை கேட்பார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 27, 2017

சாயி நாமஜெபம் ஒன்றே போதும்

 " சமாதியிலிருந்தும் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹாசமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில், நீ எங்கிருந்தாலும், நான் உன்னுடன் இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன்.  பயணம் செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை".
சாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும். இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும். விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 24, 2017

பாபாவை நம்புங்கள்

இதோ பார், உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள்.  ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

குருவின் ஆணை


தனத்தையும், தானியத்தையும், வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணை ஆகிவிடாது. குருவின் ஆணையை (பொறுமை, நம்பிக்கை)  நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 23, 2017

நீ என்ன செய்தாலும் அதை நான் அறிவேன்


"நீ என்ன செய்தாலும் அதை  நான் அறிவேன்.  உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.
அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 22, 2017

பாபா தரிசனம் தருவார்

பாபாவை நேருக்குநேராக  தரிசனம் செய்தவர் சிலர். காட்சியாக தரிசனம் பெற்றவர் பலர். வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை, நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 21, 2017

இரவும் பகலும் பாபா உன்னுடன் இருக்கிறார்.(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட், அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன். சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர், சிலருக்கு புத்திரர்கள். அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை! நானும் பொறுத்து பொறுத்து போகிறேன்; ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.

திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள். எங்கள் கதி என்னாவது?

பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா?என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது; அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.

சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா?

பாபா: ஆம், உங்களுக்கு அது கிட்டும்.

சிறுவன்: பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்
எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.

பாபா: இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.

சிறுவன்: பாபா, ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?

பாபா: ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா? மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம். இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து, ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 20, 2017

இன்னல்களும் ஏழ்மையும்


"குருமூர்த்தியிடம்  திடமான  பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் இன்னல்களும் ஏழ்மையும் இருக்காது."   - ஸ்ரீ குருச்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 19, 2017

பாபாவை விட்டு விலகமுடியாது


என்னுடையவனான ஒருவனை என்னை விட்டு விலகிச் செல்லும்படி விடமாட்டேன் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 17, 2017

புத்திரபாக்கியம்


ஹர்தாவைச்  சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச்  சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால்  அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு  செல்லவில்லை. 1911-ம்  ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு  பாபாவிடம் வந்தார்.
பாபா : என்ன! திமிறு  ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின்  படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.

பாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 16, 2017

பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்

      

வீரபத்ரனின் கேள்வி: "பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்"


பாபா பதில்: "உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்". (பாபாவின் நல்வாக்கு) பின்னர் நடந்தது. வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.      


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 15, 2017

பாபாவிடம் சரணடையுங்கள்நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது?. பாபாவிடம் சரணடைவது ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 14, 2017

கவலையே வேண்டாம், பாபா உன்னுடன் இருக்கிறார்."உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை. உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 13, 2017

பாபாவின் மறுஅவதாரம்


பாபாவை நன்கு புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணரவேண்டும். பாபா எங்கே போய்விட்டார் ? பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும். எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! தாமோதர் ராசனேயிடம் , " என்னை எண்ணிய மாத்திரத்தில், நான் வந்து விடுகிறேன் " என்றும், ஸ்ரீமதி தார்கட் அம்மையாரிடம் "தாயே! நான் எங்கும் போகவில்லை. என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்" என்றும், " என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்" என்றும் கூறிய நம் தேவனுக்கு வாரிசு என்றோ, அவருடைய மறு அவதாரமென்றோ யாராவது கூறிக் கொள்வது எங்ஙனம் தகும்?  தம்முடைய வாரிசு என்று பாபா எவரையும் குறிப்பிடவில்லை.
" பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது. கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதைபோன்றே பாபாவின் பீடமும் ! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆபாந்தராத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 12, 2017

நன்மையே நிகழும்


பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர்களுக்கு எப்போதும் நன்மையே நிகழும். எவர் அதில் தோஷமும், குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவர், நன்மை பயக்கும் செயலா/தீமைபயக்கும் செயலா என்பது பற்றிய எண்ணத்தை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார். பாபாவின் ஆணைக்கு அவர் அடிமை; சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை. பாபாவின் வசனத்தை (சாய் சத்சரித்ரா) தவிர எதிலும் நல்லதா / கெட்டாத என்ற ஆராய்ச்சியும் அவர்களுக்கு இல்லை.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 11, 2017

ஒவ்வொரு நிமிடமும் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்.

என் பக்தர்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். அவர்கள் எந்த வேலையாக சென்றாலும், அவர்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 10, 2017

பாபாவை வழிபடும் சிறந்த முறை

சில சமயம் நான் ஒரு  நாய் ;சில சமயம் நான் ஒரு பன்றி; சில சமயம் நான் ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு பூனை; சில சமயம்  ஓர் எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர்வாழ் பிராணி- பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவிவருகிறேன். உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும். பேதபுத்தியை விட்டுவிடும். அதுவே என்னை   வழிபடும் சிறந்த முறையாகும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 9, 2017

அல்லா

 "அல்லா  உனக்கு தாராளமாக அளிப்பார்.  உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்"-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 8, 2017

சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்


 "இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்".
                                                                                  -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா உயிருடன் இருந்த காலத்தில் ஒருவர் பாபா இறந்துவிட்டால் அத்துடன் அவர் ஆற்றிவரும் பணியும் அவரது செல்வாக்கும் மறைந்து விடும் என்று அஞ்சியபோது, "என்னுடைய சமாதியிலிருந்து தடிகள் கொண்டு அடிப்பேன்" (மராத்தியில் ஹூன் தண்டே ஹநீன்), அதாவது அவருடைய உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா பதில் கூறினார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 7, 2017

இறைவனின் அவதாரமே


பாபாவை பக்தியுடன் வணங்கும் பலரும், பாபாவை குரு என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள். பாபாவே  இறைவன் என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. குரு என்பவர் தெய்வத்துக்கு சமமானவர். எனவே பாபாவிடம் தெய்வீகத்தன்மை இருக்கிறது என்பது பலரது நம்பிக்கை. உண்மையில் இறைவனின் பல அவதாரங்களில் பாபாவும் ஒருவரே.
எந்த சூழ்நிலையிலும் மாறா நம்பிக்கையோடு பாபாவை நீங்கள் வணங்கினால், பாபா  தாம் இறைவனின் ஒரு அவதாரமே என்று வெளிப்படுத்துவார்.

ஸ்ரீ  சாயி எப்போதும் ஒரு சாதாரண பக்கிரி போலவும், இறைவனின் சேவகர் போலவுமே நடந்து கொண்டார். ஆனால், பல சமயங்களில், அவர் பேரருளைப் பெற யார் தகுதியானவர்களோ, அம்மாதிரியான ஒரு சில அடியவர்களுக்கு மட்டுமே தான் இறைவனே என்பதை வெளிபடுத்திக் கொண்டார். பாபா ஒரு அவதாரம் என்பதற்கான குணாதிசயங்கள், 'சர்வ வல்லமை', 'சர்வ வியாபித்துவம்' ( எங்கும் நிறைதன்மை ), 'சர்வ ஞானம்' (எல்லாம் அறியும் தன்மை ) ஆகியவைகளாகும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தின் மீதும் அவருக்கு முழு கட்டுப்பாடு இருந்தது.

ஸ்ரீ சாயிநாத்தின்  வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தகமான 'ஸ்ரீ சாய் சத் சரித்திரா' வில் விவரித்துள்ளபடி அவர் மழையையும், நெருப்பையும் எப்படி தன் கட்டுக்குள் அடக்கி ஆண்டார் என்பதையும் நாம் அறிவோம். எனவே சந்தேகமே வேண்டாம், ஸ்ரீ சாய்பாபா இறைவனின் அவதாரமே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 6, 2017

ஷிர்டி சாய்பாபா


பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார். பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும். நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார். வேறெதிலும் நாட்டமில்லாமல், பாபாவிடம் மட்டுமே தீவிர நம்பிக்கை ( சரணாகதி ) கொண்ட பக்தனின் காரியங்கள் யாவும் பாபாவால் பொம்மலாட்டத்தை போல் முன் நின்று நடத்த படுகின்றன. அத்தகைய பக்தர்கள் எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. லௌகீக தேவைகளுக்காகவே (வேலை, திருமணம், சம்பள உயர்வு குழந்தை பேறு போன்றவை )  பாபாவிடம்  செல்கிறோம். சில சமயங்களில் அது போன்ற வேண்டுதல்கள் நடக்காமல் போகலாம். உண்மையில் பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே அளிப்பார். இது போன்ற சமயங்களில் மிகவும் நம்பிக்கையோடு பொறுமை காத்து எல்லாம் பாபாவின் விருப்பம் என்று விட்டுவிடுங்கள்.  அமைதியாக என்னிடம் இரு, மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நாம் கோரிக்கை வைத்தாலும், வைக்காவிட்டாலும், பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மை என்பதை நன்கு அறிவார்.                                                                
                                                                                              - தொடரும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 5, 2017

வேறு வழிபாடு வேண்டாம்உங்கள் குருவிடம் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 4, 2017

பாபா நமது அருகிலேயே இருக்கிறார்


பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 3, 2017

குழந்தை பாக்கியம்


பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது. ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு  உண்டாகும் என் பாபா ஆசி வழங்கினால், அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி. ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் ஒரு பாபி அல்லது பாபகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும், பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம். பிராரப்த கர்மா அல்லது ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்துவருகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 2, 2017

பாபா உன்னுடன் இருப்பார்.

சிருஷ்டியின் எந்த மூலைக்கு  வேண்டுமானாலும் செல்லுங்கள்.கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள். எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 1, 2017

இறந்தவளைப் பிழைப்பித்ததுD.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல்   இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின்  ஒரு நாள் விடிகாலை இறந்து போனால்.  பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் " என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...