அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே பாபாவை வழிபட வேண்டும். சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே. அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். நாம் ஒன்றும் அறியாத குழந்தைகள். கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிறாரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள். நடப்பதெல்லாம் பாபாவின் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும். எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள். 'நீரே கதி' என்று அவரை சரணம் அடையுங்கள்; நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள்.
பாபாவிடம் பக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ? அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் உழைப்பு ஏதுமில்லாமலேயே வந்து சேரும். யாரை பாபா அரவணைக்கிறாரோ, அவர் தம்முடைய வீட்டிலிருந்தாலும் சரி, ஏதோ தீவிலிருந்தாலும் சரி, சர்வ நிச்சயமாக சாயி அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார். பக்தர் எங்கே சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும், சாயி அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத வகையில் தரிசனம் அளிக்கிறார்.
ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின் அவதாரமே ஸ்ரீ தத்தர். குருவிற்க்கெல்லாம் குருவானவர். எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார்.
குரு பரம்பரை என்பது தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார். இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாக பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார். தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார்.
ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர் ஆவார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி வெளிஉலகிற்கு தெரிந்துள்ள விபரங்கள் மிக குறைந்த அளவே ஆகும்.
கி.பி. 1320 ஆண்டு ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி சுமதி மஹா ராணிக்கும் மூன்றாவது குழந்தையாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் தான் பிரபஞ்சத்திலிருக்கும் ஸ்தாவர, ஜங்கம வஸ்துக்கள் அனைத்திற்கும் மூல காரணம். அவர் ஒரு ஆலமரம் போன்றவர். அவரது துணை, அம்ச/பின்ன அவதாரங்கள் அந்த மரத்தின் கிளைகள் போன்றவையாகும். ஆலமரத்தின் வேர்கள் கிளைகளிலிருந்து தலைகீழாக தோன்றினாலும் தாய் மரமே எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். தேவர்கள் முதல் பூத பிசாசுகள் வரை உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவரே அடைக்கலம் கொடுப்பவர். புகலிடம் கொடுப்பவர். அனைத்து சக்திகளும் அவரிடமிருந்தே தோன்றி அவரையே தஞ்சம் புகுகின்றன.
அநேக ஜென்மங்களில் செய்த பாவங்கள் ஒழிந்த பிறகு புண்ணியங்கள் பலன் கொடுக்கத் துவங்கும் பொழுது தான் ஒருவருக்கு தத்தரிடம் பக்தி பிறக்கும். தத்தரிடம் பரிபூரண பக்தி ஏற்படும்பொழுது ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தரிசனம், தொட்டு ஆசிர்வதித்தல், பேசுதல் இவற்றால் அருட்ச் செல்வத்தை எந்த வயதிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெறலாம்.
ஸ்ரீ ஸ்ரீபாதர் சத் புருஷர்களுக்கு எளிதாக கிடைக்ககூடிய தங்கச் சுரங்கம். பாவம் செய்பவர்களுக்கோ, தர்மத்தை மீரியவர்களுக்கோ அவர் ஒரு யமதர்மராஜா மாதிரி. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் பெயரைச் சொன்னாலேயே, நாம் உறுதியாக அவரது அருளைப் பெறலாம். நாம் அனைத்து துன்பங்களிலிருந்தும் இழப்பிலிருந்தும் விடுதலை பெறலாம்.
ஸ்ரீ பாதரின் பக்தர்களுக்கு ' முடியாத காரியம் ' என்று ஒன்று இல்லவே இல்லை. நெற்றியில் எழுதியுள்ளத் தலை எழுத்தை மாற்றி எழுதும் வலிமை வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லை. அனால் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீபாதர், தன் பக்தனின் துன்பத்தைக் கண்டு மனம் இறங்கி பிரம்மாவை அவன் தலை எழுத்தை அழித்துவிட்டுப் புதிய தலையெழுத்தை எழுதுமாறு உத்தரவிடுவார்....
."இன்று என பக்தன் இறக்க வேண்டிய நாளாகும். நான் அவனது ஆயுளை மேலும் இருபது ஆண்டுகள் நீட்டித்துள்ளேன். இந்த முடிவை அவனுடைய பக்தியின் காரணமாக அளிக்கிறேன் ."- ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர்.
ஸ்ரீ பாதரின் சத்திய வார்த்தைகள் சில...
* நானே அனைத்து ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் வடிவம் ஆவேன்.
* என் செயல்கள் யாவும் உங்கள் குணம் சத்கர்மா, பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அமையும். என்னை முழுமையாக சரணடைந்த பக்தனை நான் ஒருபோதும் கை விடமாட்டேன். வெகுதூரத்தில் வசிக்கும் என் பக்தனையும் என் ஷேத்திரத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விடுவேன். ரிஷி மூலம் நதி மூலம் கேட்கக் கூடாது.
* நான் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். என் தத்துவம் மட்டுமே கோடான கோடி அண்டங்களில் வியாபித்து உள்ளது. திசைகளே எனக்கு ஆடைகள். நான் ஒரு திகம்பரர். எவனொருவன் உடல் மனம் சொல் தூய்மையுடன் " தத்த திகம்பரா! ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப திகம்பரா! நரசிம்ம சரஸ்வதி திகம்பரா ! " என்று கூறுகிறானோ அங்கு நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.
* எவனொருவன் நான் பிறந்த புனிதமான வீட்டில் தங்குகிறானோ அவன் நிச்சயமாக பரிசுத்தனாக மாறிவிடுவான். அவனின் முன்னோர்கள் புண்ணிய லோகங்களை அடைவார்கள் .
* பல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின் விளைவாகவே ஒருவன் பீடிகாபுர அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான்.
என்னுடைய சக்தியைத் தெரிந்துக்கொள்ள முதலில் நீங்கள் ஆன்மீகத் தேடுதலில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதன் பின்னரே என் சக்தி, இரக்கம், கருணை, அன்பு, பாதுகாப்பு, நான் பாவங்களிலிருந்து மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
* நீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில் இருக்கிறீர்கள். நான் நினைத்தால் ஆண்டியையும் அரசனாக்குவேன். அரசனை ஆண்டியாக்குவேன். என்னை நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன். நான் 'தேவை' என முடிவு செய்து விட்டால் மண்ணையும் விண்ணாக்குவேன். விண்ணையும் மண்ணாக்குவேன்.
* என்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப் பிடித்து பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். என்னுடைய விருப்பம் இன்றி எவரும் என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது. அவர் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் மிகப் பெரிய யோகியாக இருந்தாலும் சரி. இது உறுதியான சத்தியமாகும். நான் மட்டுமே யார் எப்பொழுது எத்தனைப் பேராக எந்த மாதிரி பயணம் செய்து என்னை தரிசிக்க வரவேண்டும் என்பதை முடிவு செய்வேன்.அது என் விருப்பமே.
* இந்தப் பிரபஞ்சப் படைப்பில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கூலிக்காரன்தான். நான் தான் முதலாளி. நான் மகிழ்ச்சியடைந்தால் உங்களுக்கு உரியதைவிட மிக மிக அதிகமாகவே தருவேன். நான் கோபம் அடைந்தால் எவ்வளவு குறைத்துக்கொண்டு மிதத்தை மட்டும் தான் தருவேன்.
மனமுருகி நான் பாவங்களிலிருந்து விடுபட்டவன் என உணர்ந்து, என்னை அடைக்கலம் அடைந்து என்னை அன்புடன் , தத்த திகம்பரா ! ஸ்ரீபாத வல்லப திகம்பரா ! என்ற அழைத்தால் அந்தச் க்ஷ்ணத்திலிருந்தே உங்களது பாவங்களை எரித்துப் பொசுக்கி உங்களை புண்ணியவான் ஆக்குவேன்.
* நான் என்னுடைய பக்தர்களுக்கு தாசானுதாசன் ஆவேன். என்னை தன் மனதில் சிறை பிடிப்பவனே மிக மிகச் சிறந்த சக்ரவர்த்தி ஆவான். அப்படிப்பட்ட பக்தனுக்கு மூவுலகங்களையும் ஆளும் ஸ்ரீ பரமேஸ்வரனே கூட வேலைக்காரன் போலச் சேவை செய்வார்.
* நான் ஒருவனே அனைத்து தர்மங்கள் மதங்கள் தத்துவங்கள் அனைத்திலும் சுயமாகப் பிராகாசிப்பவனாவேன். அனைத்து தெய்வங்களிலும் தெய்வீக சக்திகளிலும் நுணுக்கமாகப் பிரகாசிப்பவன் நானேயாவேன். நான் ஒருவனே உங்கள் அனைவரின் வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் அந்தந்த உருவங்களின் மூலம் பெற்றுக் கொள்பவன் ஆவேன். நான் ஒருவனே தான் அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.
* என் புனித வரலாற்றை (ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்ராம்ருதம் ) படித்தால் ஆசைகள் நிறைவேறும். எல்லாத் தடைகளும் விலகும். இந்த சரித்ராம்ருதத்தை ஒரு சராசரிப் புத்தகம் என்று நினைத்துக் கொள்ளாதே. இது ஒரு தெய்வீகச் சைத்தன்யத்தின் உயிருள்ள சக்திப் பிராவகம் ஆகும். நீ பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும்போது அந்த எழுத்துகளின் வலிமையானது என்னுடைய மானசீக சைத்தன்யத்திற்குள் பாயும். உனக்கு தெரியாமலேயே உனக்கு என்னுடன் ஒரு தொடர்பு எற்பட்டுவிடுவதால் உன்னுடைய நியாயமான கோரிக்கைகள், பிரார்த்தனைகள் ஆசைகள் அனைத்தும் என்னுடைய கருணையால் நிறைவேற்றப் பட்டுவிடும். இந்த புத்தகத்தை பூஜை ஆறையில் வைத்திருந்தால் துரதிர்ஷ்டமும் தீய சக்திகளும் அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டுவிடும்.
ஷீரடி சாயி அவதரித்தல்
ஹனுமனுக்கும் ஸ்ரீபாதருக்கும் நடந்த உரையாடல்;
ஸ்ரீபாதர் ; நீ கோடி கோடியாக இராம நாமாக்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். ஆகையால் நீ காலத்தைக் கடந்தவன். நீ ' காலத்மகன்' ஆகிவிட்டாய். நீ ஒரு முறை கலியுகத்தில் அவதாரம் செய்ய வேண்டும். புலன்கள் ஆசையை அடக்க வல்லவனாய் இருப்பதால் ' சாயி' என்ற பெயரால் நீ புகழ்பெற்று விளங்குவாய்.
ஹனுமன் ; பிரபோ ! உடல் ரீதியாகவோ நான் உங்களுக்கு ஒரு சேவகன் தான். உயிர் சக்தியின் அடிப்படையால் நான் உங்களின் ஒரு பகுதியே ஆவேன். ஆத்மாவின் நோக்கில் நானே நீயாவேன். ஆகையால் நான் எந்த ரூபத்தில் அவதரிக்க வேண்டும் என்று கூறுங்கள்.
ஸ்ரீ பாதர் ; சிவனின் மூலத்திலிருந்து நீ தோன்றியிருந்தாலும் நீ இராம பக்தனாகிவிட்டாய். அரபு மொழியில் "அல்" என்றல் சக்தி என்று பொருள்.ஆஹா என்றால் சாக்த, சக்தியை தாங்குபவன் என்று பொருள். ஆகையால் " அல்லாஹ்" என்பதன் பொருள் சிவனும் சக்தியும் சேர்ந்த ரூபமாகும். ஆகையால் இனிமேல் என்னை சிவ சக்தியாக " அல்லாஹ் " என்று பெயரை கூறுவதன் மூலம் பிற நாட்டவரும் ஏற்று கொள்ளும் வகையில் அழைத்து பூஜிப்பாயக.
ஹனுமன் ; நான் எடுக்கவிருக்கும் அம்சாவதரமானது இடைவிடாது எப்பொழுதும் மூலதத்துவமாகிய உம்முடன் தொடர்பு கொண்டும் அந்த பழைய மூல தத்துவம் பெற்றிருக்கும் அனைத்து வளங்களையும் சக்தியையும் பெற்றிருப்பதாகவும் இருக்கவேண்டும் என்று வேண்டினார்.
அதற்கு ஸ்ரீ பாதர். " என் அருமை ஹனுமனே! நீ மிகவும் புத்திசாலி . என்னுடைய அனைத்து சக்திகளும் என்னுடைய அனைத்து வகையான சிறப்புகளும் உன்னுள்ளும் விளங்கட்டும். நான் கதலி வனத்தில் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதியின் உடலில் மறைந்து 300 ஆண்டுகளுக்கு யோகா சமாதியில் இருப்பேன். பின்னர் நான் சுவாமி சமர்த்தர் என்ற பெயரில் ப்ரஞாபூரில் அவதரிப்பேன்.என்னுடைய பூத உடலை நீக்கும் சமயம் வரும்போது நான் உன்னுள் " சாயி"யாக அவதரிப்பேன். என் அவதாரம் உன்னுள் உள்ளதாக பகிரங்கமாக அறிவிப்பேன். நீ என்னுடைய சர்வ சமர்த்த சத்குரு அவதாரமாகப் புகழ் பெருவை என்று கூறினார்.
பின்னர் ஹனுமன் பணிவுடன் " பிரபுவே ! உடல் ரீதியான நிலையிலிருந்து பார்க்கும் போது நான் உங்கள் சேவகன். ஆகையால் நான் ' அல்லா மாலிக்' என பெயர் சொல்லிக் கொண்டு திரிவேன் . உங்களுடைய பேரொளியின் ஒரு பொறியைக் கொண்ட குரு ரூபமாக நான் விளங்குவேன். ஆனால் அது சாக்ஷாத் ஸ்ரீ பாதர் அல்ல. நம்மிருவரிடத்தில் இந்த வேறுபாடு தேவைதானா ? தயை கூர்ந்து என்னை ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபமாக உருமாற்றம் செய்து மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் ஸ்ரீபாதர், கால புருஷனை தன் முன் வருமாறு உத்தரவிட்டார். " கால புருஷரே! இந்த ஹனுமனை நான் என்னுடன் ஐக்கியமாக்கி கொள்ள விரும்புகிறேன். அவருக்கு ' நாத்' என்ற பட்டத்தையும் அளிக்கிறேன். ஆகையால் இவர் " சாயி நாதர்" என்ற பெயராலேயே அழைக்கப்படுவார். ஹனுமனில் உள்ள சைதன்ய அறிவானது ஏற்றபடி உருமாற்றமடைந்து சாக்ஷாத் தத்தாத்ரேய ஸ்வரூபமாக மாற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
மேலும் ஹனுமனிடம், உன் மனதை எப்பொழுதும் என் நினைவிலேயே ஒன்றி வைத்திருப்பாயாக ! உனக்கு குருவாக ' கோபால்ராவ்' என்பவர் அளிக்கப்படுவார். அவர் ஒரு வெங்கடேஸ்வர பக்தராக ' வெங்குசா ' என்று அழைக்கபடுவார் என்றார்.
ஸ்ரீ ஸ்ரீபாதர் தன் பக்தர்களுக்கு அளித்த பன்னிரண்டு வாக்குறுதிகள் .
1. என் வாழ்க்கை சத்சரித்திரத்தை பக்தியுடன் படிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.
2. மனம், சொல், செயல் இவற்றால் என்னை பக்தியுடன் சரண் அடைந்தவனை நான் கண் இமை கண்ணைக் காப்பது போலக் காப்பேன்.
3. தினமும் மதியம் பீடிகாபுரத்தில் நான் பிக்ஷை எடுப்பேன். என் வருகை ரகசியமானது.
4. என்னை இடைவிடாது தியானிப்பவர்களின் அனைத்து கர்மக் குவியல்களையும் எரித்து சாம்பலாக்கிவிடுவேன். பல்வேறு ஜென்மங்களில் சேர்த்து வைத்திருந்த கர்மாக்களையும் எரித்துப் பொசுக்கிவிடுவேன்.
5. " ஓ ! ராமச்சந்திரா! சாப்பாடு போடு!" என்று பிக்ஷை கேட்பவருக்கு உணவு அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
6. நான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ! ஸ்ரீ மஹாலக்ஷ்மி அனைத்து சொவ்பாக்யங்களுடன் என் பக்தர்கள் வீட்டில் பிரகாசமாக ஜொலிப்பாள்.
7. உங்கள் மனம் தூய்மையாக இருந்தால் என் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.
8. எந்த ஒரு கடவுளை வழிபட்டாலும், எந்த ஒரு சத்குருவின் வலி நடந்தாலும் எனக்கு சம்மதமே.
9. உங்களின் அனைத்து பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ,என்னை வந்தடையும். என்னுடைய அருளானது உங்களுக்கு நீங்கள் வழிபடும் தெய்வம் வழியாகவோ, உங்களுடைய சத்குருவின் வழியாகவோ உங்களை வந்தடையும்.
10. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் இந்த பெயருக்கும் உருவத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர் அல்ல. என்னுடைய தெய்வீக விஸ்வ ரூபத்தை அனைத்து தெய்வங்களின் உருவமாகவும் என் உடல் பகுதிகளை அனைத்து சக்திகளாகவும் ஆன்மீக யோக சாதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
11. என்னுடையது அவதாரம் முழுமையான யோக அவதாரமாகும். மிகச் சிறந்த யோகிகளும், சித்தர்களும் என் மீது இடைவிடாது தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.
12. என்னுடைய ஆதரவை நாடினால் நான் உங்களுக்கு தர்மத்தின் வழியையும் கர்மத்தின் வழியையும் போதிப்பேன். உங்களை எப்பொழுதும் வீழ்ச்சியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுகிறேன்.
ஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே !
திகம்பரா திகம்பரா ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
( இந்த மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும் ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும் அழிந்து போய்விடும்)
குரு தாமாக உனது குரு ஆகிவிடுவதில்லை.நீயே அவரை குருவாக மதிக்கவேண்டும். அதாவது அவரிடம் விசுவாசம் வைக்க வேண்டும். ஒரு ஓட்டாஞ்சில்லை எடுத்து வைத்துக் கொண்டு அதை உனது குருவாக பாவித்து வா. அப்போது உன் இலக்கு அல்லது குறிக்கோள் கிட்டிவிடுகிறதா இல்லையா என்று பார். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
நமக்கென நிர்ணயக்கப்பட்ட கடமையை செய்வோம். நமது உடல், வாக்கு, உயிர் முழுவதையும் எல்லாவற்றையும் வியாபித்து நிற்கும் தன்மையுடைய பாபாவிடம் அர்ப்பணம் செய்யவேண்டும். அவரிடம் விசுவாசம் வைப்பது இப்போது அவசியமாகிறது..
"உங்கள் ஆசைகளைத் துறந்தால் தான் தெய்வீகத்தைப் பின்பற்ற முடியும்" என்ற கடினமான கொள்கையை முன்வைத்துக்கொண்டிருந்த போது, சாயி அதற்கு முற்றிலும் மாறாகத் தான் பக்தர்களிடம் "உங்கள் அனைத்து ஆசைகளுடன் என்னிடம் வாருங்கள்; உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வாருங்கள்; உங்கள் பாரங்களை என் மீது சுமத்துங்கள். நான் அவற்றைச் சுமந்து அவற்றிலிருந்து உங்களை விடுவிக்கிறேன்" என்று பாபா சொன்னார்.
ஸ்ரீ நரசிம்ம சரசுவதி அஷ்டகம் இந்து கோடி தேஜ கிர்ண சிந்து பக்தவத்சலம் நந்தனாத்ரி சூனுதத்த இந்திராட்ச ஸ்ரீகுரும் கந்த மால்ய அக்ஷதாதி வ்ருந்த தேவ வந்திதம் வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம் மோஹ பாச அந்தகார சாயதூர பாஸ்கரம் ஆஹிதாக்ஷ பாஹீஸ்ரீய வல்லபேச நாயகம் ஸேவ்ய பக்த வ்ருந்த வரத பூயோ பூயோ நமாம்யஹம் வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம் சித்தஜாதவர்கஷ்டக மத்தவார்ணாங்குசம் ஸத்வஸார சோபிதாத்ம தத்தஸ்ரீயாவல்லபம் உத்தமாவதார பூத கர்த்ரு பக்தவத்சலம் வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம் வ்யோம வாயுதேஜ ஆப பூமி கர்த்ருமீச்வரம் காமக்ரோத மோஹரஹித ஸோம சூர்யலோசனம் காமிதார்த்த தாத்ருபக்த காமதேனு ஸ்ரீகுரும் வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம் புண்டரீக ஆயதாக்ஷ குண்டலேந்து தேஜஸம் சண்டதுரித கண்டனார்த்த தண்டதாரி ஸ்ரீகுரும் மண்டலீக மௌலி மார்தாண்ட பாசிதானனம் வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம் வேத சாஸ்திர ஸ்துத்ய பாதமாதிமூர்த்தி ஸ்ரீகுரும் நாத பிந்து கலாதீத கல்பபாத ஸேவ்யயம் ஸேவ்ய பக்த வ்ருந்த வரத பூயோ பூயோ நமாம்யஹம் வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம் அஷ்டயோக தத்வ நிஷ்ட துஷ்டஞான வாரிதிம் கிருஷ்ணவேணி தீரவாஸ பஞ்சநதி ஸங்கமம் கஷ்ட தைன்யதூர பக்த துஷ்டகாம்யதாயாகம் வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம் நரஸிம்ஹ ஸரஸ்வதீச அஷ்டகம்ச ய: படேத் கோர சம்ஸார சிந்து தாரணாக்ய ஸாதனம் ஸார ஞான தீர்க்க ஆயு ஆரோக்யாதி ஸம்பதம் சாருவர்க காம்ய லாப நித்யமேவய: படேத்
எப்பொழுதும் இந்த நரசிம்ம சரசுவதி அஷ்டகத்தை எவனொருவன் படிப்பானோ அவனுக்கு ஞானமும், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் , எல்லா செல்வங்களும் நான்கு விதமான புருஷார்த்தங்களும் பெற்று சம்ஸாரமென்ற கடலைத் தாண்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.
குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம்,ஸ்தவனமஞ்சரி (TAMIL PDF FILES) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் saibabasayings@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file அனுப்பபடும்.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர.
குரு சாக்ஷாத் பர பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம:
குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.
ஸ்ரீ குரு சரித்திரத்தை நம்பிக்கையுடன் படிப்பவர்களின் துயரங்கள் அனைத்தும் விலகும். இது நம் ஸ்ரீ நரசிம்ம சரசுவதி சுவாமிகளின் சாத்தியவாக்கு. சப்தாக பாராயணம் ( 7 நாட்களுக்குள் புத்தகத்தை படித்து முடித்தல்) செய்வதன் மூலம் எல்லா விதமான நேர்மையான கோரிக்கைகளும் நிறைவேறும்.
ஸ்ரீ குருச்சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்...
"பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்."
" வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்." கேள்வி : சில வருடங்களாக நான் பாபாவையே வணங்கி, பாபாவின் பாதங்களையே தியானித்து .வருகிறேன். சமீபத்தில் வேறு ஒரு தெய்வத்தை / குருவை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதிலிருந்து அந்த குருவின் திருவடிகளையே பரவசத்துடன் நான் தியானிக்கத் துவங்கிவிட்டதை உணர்கிறேன். என்னுடைய கேள்வி இது தான். " நான் என்னுடைய நம்பிக்கையை மாற்றிக் கொண்டிருக்கிறேனா.? பதில் : வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது.என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ? உங்கள் நம்பிக்கை பாதிக்கப்படவில்லை. உங்களுக்கு எது மிகவும் சிறந்தது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளும் வகையில் நம்பிக்கையின் வெவ்வேறு அம்சங்களைத்தான் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். பாபாவின் திருவாய் மொழியை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் . "வருவது வரட்டும், விட்டு விடாதே. என்னையே உறுதியாகப் பற்றிக்கொண்டு எப்போதும் நிதானத்துடனும், சதாகாலமும் என்னுடன் ஒன்றியும் இருப்பாய்" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
" பாபா மஹா சமாதியடைந்த பின்பு கூட, நம்பிக்கையோடு முழு மனதுடன் செய்யப்படும் தமது அன்பான பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறார். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்களை காப்பாற்ற முன் வருகிறார். அவர்களுடைய கனவுகளிலும், காட்சிகளிலும் தோன்றி பூர்த்தி செய்கிறார் "
பாபாவின் மிகப்பெரும் பக்தர் பக்த நாராயணராவ். பாபாவின் வாழ்நாளில் ஷீரடிக்கு அவர் இரண்டுமுறை விஜயம் செய்து பாபாவின் தரிசனத்தைப் பெரும் நல் அதிர்ஷ்டம் பெற்றிருந்தார்.
பாபா 1918-ல் மஹா சமாதியடைந்தார். இதற்குப்பின் ஒரு வருடத்திற்குள் நாராயணராவ் நோயாளியாகி படுத்தார். மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட எவ்வித சிகிச்சைகளும் உரியநிவாரணத்தை தரவில்லை.
பாபா சமாதியாகி 3 ஆண்டுகளுக்கு பின் நாராயண ராவ் ஷீரடிக்கு விஜயம் செய்ய விரும்பினார். டாக்டர்கள் கொடுத்த மருந்துகள் அவருக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை. எனவே அவர் பிரார்த்தனை செய்துகொள்ளவும் கஷ்டத்திலிருந்து விடுபடவும் ஷீரடிக்கு போக விழைந்தார்.
ஆனால் எப்படியோ, அவரால் ஷீரடிக்கு செல்ல இயலவில்லை, இரவும் பகலும் பாபாவை அவர் தியானம் செய்ய ஆரம்பித்தார்.
ஒருநாள் இரவு பாபா அவரது கனவில் தோன்றினார். ஒரு குகையிலிருந்து வருவது போன்று காட்சி கொடுத்து கீழ்கண்ட மொழிகளை கூறி ஆறுதல் நல்கினார். " நாளைய தினத்திலிருந்து நீ முன்னேற்றமடைவாய். ஒரு வாரத்துக்குள் நீ எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவாய்".
சரிநுட்பமாக ஒரு வாரத்தில் கனவில் பாபா உறுதி கூறியபடி நாராயணராவ் தனது வியாதியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
"ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் "- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
பாபா தமது உடலில் இருந்த போதும், உண்மையில் அவர் உடலில் கட்டுண்டு இருக்கவில்லை. அவர் எல்லா இடங்களிலும் எல்லா உருவிலும் இருந்தார். பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார். ஆனால் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில்தான். இன்றும்கூட அவர் மீண்டும் தமது பக்தர்களுக்கு முன் தோன்ற முடியும் ; தோன்றுகிறார்.
பாபாவை பக்தியுடன் வணங்கும் பலரும், பாபாவை குரு என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள். பாபாவே இறைவன் என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. குரு என்பவர் தெய்வத்துக்கு சமமானவர். எனவே பாபாவிடம் தெய்வீகத்தன்மை இருக்கிறது என்பது பலரது நம்பிக்கை. உண்மையில் இறைவனின் பல அவதாரங்களில் பாபாவும் ஒருவரே.
எந்த சூழ்நிலையிலும் மாறா நம்பிக்கையோடு பாபாவை நீங்கள் வணங்கினால், பாபா தாம் இறைவனின் ஒரு அவதாரமே என்று வெளிப்படுத்துவார்.
ஸ்ரீ சாயி எப்போதும் ஒரு சாதாரண பக்கிரி போலவும், இறைவனின் சேவகர் போலவுமே நடந்து கொண்டார். ஆனால், பல சமயங்களில், அவர் பேரருளைப் பெற யார் தகுதியானவர்களோ, அம்மாதிரியான ஒரு சில அடியவர்களுக்கு மட்டுமே தான் இறைவனே என்பதை வெளிபடுத்திக் கொண்டார். பாபா ஒரு அவதாரம் என்பதற்கான குணாதிசயங்கள், 'சர்வ வல்லமை', 'சர்வ வியாபித்துவம்' ( எங்கும் நிறைதன்மை ), 'சர்வ ஞானம்' (எல்லாம் அறியும் தன்மை ) ஆகியவைகளாகும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தின் மீதும் அவருக்கு முழு கட்டுப்பாடு இருந்தது.
ஸ்ரீ சாயிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தகமான 'ஸ்ரீ சாய் சத் சரித்திரா' வில் விவரித்துள்ளபடி அவர் மழையையும், நெருப்பையும் எப்படி தன் கட்டுக்குள் அடக்கி ஆண்டார் என்பதையும் நாம் அறிவோம். எனவே சந்தேகமே வேண்டாம், ஸ்ரீ சாய்பாபா இறைவனின் அவதாரமே.
என் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கிறேன். அவனை விழவிடவே மாட்டேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
"என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."
மகல்சாபதி, எப்பொழுதும் பாபாவின் அண்மையிலேயே இருந்த பக்தர். மசூதியிலும், சாவடியிலும் ஒரு நாள் விட்டு மறுநாள் என மாறி மாறி பாபா இரவுகளைக் கழிப்பார்; இரண்டு இடங்களுக்குமே மகல்சாபதி பாபாவுடன் சென்று அவருடனேயே உறங்குவார். சதா சாயிபாதங்களிலேயே மூழ்கியிருந்த மகல்சாபதி, சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். சாயி அவரை சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.
தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை சாயி பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மகல்சாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.
ஒருசமயம், ஹம்ஸராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர், மகல்சாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். ஆனால், "சாயியின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மிகப்பணிவாக பணத்தைத் திருப்பி கொடுத்துவிட்டார்.ஆகவே ஹம்சராஜ் சாயியை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால் மகல்சாபதியை ஒரு பைசாவைக்கூடத் தொட சாயி அனுமதிக்கவில்லை. சாயி சொன்னார், "என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்" என்று...
அனுதினமும் பாபா, ஒருவருக்கு ரூ.15, மேலும் ஒருவருக்கு ரூ.10 என அளித்துவந்தார். பல முறைகள் பாபா மகல்சாபதியிடம், "இந்த மூன்று ரூபாயைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு பெற்றுக் கொண்டேயிருங்கள். நான் உங்களை வசதி படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். ஆனால் எப்போதுமே மகல்சாபதி மறுத்து வந்தார். அவருடைய பதில் இதுதான்; "எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் தங்கள் பாதங்களுக்கு பூஜை செய்வது ஒன்றையே விரும்புகிறேன்." தானங்கள் பெறுவதைத் தவிர்த்து, கிடைத்ததை வைத்து திருப்தியடைவதை லௌகீகமான செல்வத்தைப் பெறுவதையும் தக்கவைத்துக் கொள்வதையும் விட உயர்வானதாகக் கருதினார்.
பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார். பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும். நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார். வேறெதிலும் நாட்டமில்லாமல், பாபாவிடம் மட்டுமே தீவிர நம்பிக்கை ( சரணாகதி ) கொண்ட பக்தனின் காரியங்கள் யாவும் பாபாவால் பொம்மலாட்டத்தை போல் முன் நின்று நடத்த படுகின்றன. அத்தகைய பக்தர்கள் எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. லௌகீக தேவைகளுக்காகவே (வேலை, திருமணம், சம்பள உயர்வு குழந்தை பேறு போன்றவை ) பாபாவிடம் செல்கிறோம். சில சமயங்களில் அது போன்ற வேண்டுதல்கள் நடக்காமல் போகலாம். உண்மையில் பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே அளிப்பார். இது போன்ற சமயங்களில் மிகவும் நம்பிக்கையோடு பொறுமை காத்து எல்லாம் பாபாவின் விருப்பம் என்று விட்டுவிடுங்கள். அமைதியாக என்னிடம் இரு, மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நாம் கோரிக்கை வைத்தாலும், வைக்காவிட்டாலும், பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மை என்பதை நன்கு அறிவார். http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
" ஸ்ரீ சாயிபாபாவின் அருள் கிருபையைப் பெற சிறந்த ஞானம், பேரறிவு தேவை இல்லை. மறுபக்கத்தில் ஞானம் என்ற பெருமிதம், கர்வம் நம்மை அவரிடமிருந்து கண்ணுக்கெட்டாத தூரத்தில் தள்ளிவைத்துவிடும்."
என் பக்தன் ஷீரடியிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால் இருப்பினும், அவனுடைய உடலை விட்டுப் பிரிந்த கணமே அவனது ஆன்மா எம்மை வந்தடையும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
ஒரு ஆத்மாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டால், அதை ஒன்றன் பின் ஒன்றாகப் பல பிறவிகளிலும் தாம் பின் தொடர்வதாகவும், அவசியத்திற்கேற்ப அடிக்கடி தாமும் பிறவி எடுப்பதாகவும், அந்த ஆன்மா இறுதி இலக்கை, அதாவது பகவத்பாத மூலத்தை, அடையும்வரை கவனிப்பதாகவும் பாபா கூறுகிறார். கடந்த கால பாவச் செயல்களுக்காக யமனும், யம தூதர்களும் அளிக்கும் தண்டனைகளின் கொடுமையும் தமது பக்தர்களை அச்சுறுத்தாது என்கிறார் அவர். சாயியின் பிரபாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும்; யமனும் பாசத்துடன் கூடிய அவனது கிங்கரர்களும் கனவில் கூட அவர்களை நெருங்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய கர்மவினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன ( சாயி தியானத்தின் மூலம் ). http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil