Wednesday, September 6, 2017

பாபாவே தீர்மானித்துக் கொள்ளட்டுமே



பாபா பக்தர்களின் ஒவ்வொரு செயலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாபாவாலேயே கவனிக்கப்பட்டும், உருவாக்கப்பட்டும் வருகிறது... பாபா தன்னிடம்  பூரண சரணாகதி அடைந்த பக்தர்களிடம், "உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை. உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்" என்று கூறியுள்ளார். பிரார்த்தனை நல்லதே..அது பக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டால், தன்  பக்தனுக்கு எது நன்மையோ, அதை மட்டுமே பாபா அளித்துள்ளார். பிரார்த்தனைகளை விடுத்து பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார். நமக்கு எது தேவை, எது நல்லது என்பது பாபாவுக்குத் தெரியாதா? ஆகவே நமக்கு எதை அளிக்கவேண்டும், எதை அளிக்கக்கூடாது என்பதை பாபாவே தீர்மானித்துக் கொள்ளட்டுமே !. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்

பாபாவின் பக்தரான ராவ் பகதூர் ஹரி விநாயக் ஸதேயின் அனுபவம் ; பாபா யாருக்கும் உபதேசம் அளித்ததில்லை. ஆகவே எனக்கு மந்திரோபதேசம் வேண்டுமென நான் அவ...