Tuesday, October 31, 2017

சாயி நாமஜெபம் செய்யும் முறை பாபா கூறியபடி
ஓம் சாயி , ஸ்ரீ சாயி , ஜெய ஜெய சாயி 

பாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவர்  நானாசாஹேப் சாந்தோர்கர். நானாவின் அறிவுறுத்தலால், நானாவின் மனைவி தொடர்ந்து சாயி நாமஜபம் செய்துவந்தார். ஒருமுறை அவர் பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்.அப்பொழுது பாபா, " ஓ பாயி , நீ தொடர்ந்து கோதுமையை அரைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், அதற்க்கு பலனேதுமில்லை" என்றார். பாபா இங்கே குறிப்பிட்டது இயந்தரத்தனமாக நாமஜபம் செய்வதை பற்றியே. சாயி நாமஜெபம் செய்யும்பொழுது மிகவும் நம்பிக்கையுடனும், அடிமனத்தின் ஆழத்திலிருந்து மிகந்த அன்புடனும் ஸ்மரணை செய்யவேண்டும். இயந்தரத்தனமாக செய்யப்படும் நாமஜபத்திற்கு பலன் குறைவாகவே இருக்கும்.

"எனது நாமத்தை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சொல்பவர்களின் எல்லா விருப்பங்களையும் நான் நிறைவேற்றுவேன். நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம் உங்களை என்னிடம் சேர்க்கிறது.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 30, 2017

எப்பொழுதும் பாபா உன்னிடம் இருப்பார்.1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாபுஜி சாஸ்திரி என்பவர் ஒருவர், கங்கை நீரை கொண்டுவந்து பாபாவின் திருவடிகளுக்கு அபிஷேகம் செய்து, பிறகு தாஸ நவமிக்காக ஸஜ்ஜன்காட்டுக்கு போக அனுமதி கேட்டார். பாபா 
' நான் இங்கிருக்கிறேன். அங்கும் கூட இருக்கிறேன் ' என்றார். பின்னர் பாபுஜி ஸஜ்ஜன்காடுக்குச் சென்றார். புனித தாஸ நவமியன்று விடிகாலை 5 மணிக்கு பாபுஜியின் முன் பாபா நேரில் தோன்றினார். பாபா எங்கும் உள்ளார். ஒரு குரு, தமது பக்தர்களின் ஆத்மீக, லௌகீக சம்பந்தமான நலன்களைக் காப்பதற்கு, தமது குரு தமக்கு எந்தவிதமான வழிகளைக் கையாண்டாரோ அவற்றையே தாமும் மேற்கொள்வது வழக்கம். சாயிபாபாவின் கூற்றுப்படி, அவருடைய குரு, பாபா எங்கிருந்தாலும் அவருடன் தாம் இருப்பதாக வாக்களித்துள்ளார். சாயிபாபாவும் அம்முறையையே தம் பக்தர்களிடம் கடைபிடித்தார். அவர் கூறியுள்ளார்: " "எப்பொழுது எங்கே நீ என்னை நினைத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்". http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 29, 2017

கஷ்டங்கள் தீர பாபா கூறிய வழிமுறை.பாபா, தனது பூதவுடலை விட்டு பிரியம்போது கூட பட்டினியாய் இருந்த தனது பக்தர்களை வாடாவிற்கு சென்று உணவு உண்ணும்படி கூறினார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனக்காக பக்தர்கள் விரதம் இருப்பதில் விருப்பமில்லை. இதுவே தாயன்பு. தாயும் நீயே, தந்தையும் நீயே, உறவும் நீயே, நட்பும் நீயே என்று பாபாவிற்கு தினமும் ஆரத்தி பாடுகிறோம். அவரே நமக்கு எல்லாம் என்று ஆனபின் அவர்மீது நமது பக்தியை மெய்ப்பிக்க உடலை வருத்தி விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், சாயி சாயி என்று தனது பக்தன் கூறும்போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், சாயி என்று அழைத்தவுடனே ஷிரிடியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனது பக்தன் முன் தோன்றி அவனை காப்பாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார். சாதனைகளிலேயே மிகவும் எளியதும் மிக சிறந்ததுமானது சாயி நாமத்தை உச்சரிப்பதே ஆகும். ஆகவே சாயி பக்தர்கள் தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த சாயி நாமத்தை ( ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி, அல்லது ஓம் சாயிராம் அல்லது சாயி சாயி அல்லது ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ ) சொல்லுங்கள். சாயிபாபா என்ற தெய்வத்தின் மகிமையை வார்த்தைகளால் எவராலும் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அத்தகைய அனுபவத்தை பெற தினமும் பத்து நிமிடம் சாய் நாமத்தை சொல்லிவாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். 

"தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்."http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 28, 2017

தீராத வியாதிகளும் தீரும். - பாபாவே நமது வைத்தியர்
பாபாவை மிஞ்சிய வைத்தியரில்லை. தீர்க்கமுடியாத வியாதிகளும் பாபாவின் தர்பாரில் தீர்க்கப்படும். ஆகவே பாபாவிடம் முழுநம்பிக்கை வையுங்கள். இங்குள்ள பக்கீர் உமது வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவார், கவலையை விடு  என்று பாபா கூறியிருக்கிறார். சாயி தெய்வத்தின் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை. யார் கைவிட்டபோதிலும் பாபா தனது பக்தனை கைவிடமாட்டார். அவரிடம் நம்பிக்கை வைப்பது இப்பொழுது  மிகவும் அவசியமாகிறது. ஓம் சாயிராம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 27, 2017

பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை
"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.


பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 26, 2017

பாபா தன் பக்தனை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.


மனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே. மாயையின் விளையாட்டில் தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவுக்கும் தெரியும். எனவே பாபா எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறு செய்வதைத் தவிர்த்து தடுத்தாட் கொள்ளவே பார்ப்பார். பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் பாபா நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றி விடுவார். " நீங்கள் எங்கேயிருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் நான் அதை முழுமையாக அறிவேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் " என்று பாபா கூறுவது வழக்கம். பாபா சகலமும் அறிந்தவராக இருந்தார் என்பதை ஸ்ரீ சாயி சத்சரித்திரம் காட்டுகிறது. நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாகக் பாபாவிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
சில சமயம் நாம் பாபா காட்டிய வழியைப் பின்பற்ற முடியாமல் போகலாம். அதற்காக பாபா வருத்தபடுவதில்லை. அவர் வெறுப்பு மற்றும் சினம் ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் கருணையே உருவானவர். குருபாதையில் முன்னேற பக்தனுக்கு உள்ள உண்மையான நோக்கத்தை அவர் கண்காணிக்கிறார். மனஉறுதியுடன் திடமாக இருந்து பாபாவிடம் முழுமையாக சரணாகதியடைந்தால், அவனுடைய தவறுகளையும் பொருட்படுத்தாது பாபா தன் பக்தனை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 25, 2017

பாபாவின் குழந்தை
 யாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையுமோ பாபா ஏற்பார். பாபாவே கூறியுள்ளபடி,  " ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை ".  பாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர்? மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வை. பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.                                                               
                                                  * ஜெய் சாய்ராம் *


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 24, 2017

எப்போதும் எல்லா இடங்களிலும்

                                     

என்னை எவன் தீவிரமாக விரும்புகிறானோ அவன் எப்போதும் எல்லா இடங்களிலும் என்னை காண்கிறான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 23, 2017

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமுள்ள இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குனமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல  சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை சிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை தனிமையில் வாழச் செய்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும், உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்! இச்செயல்களின் நோக்கம் இதுவே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 22, 2017

குரு சரித்திர பாராயணம் செய்யவும்"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


பாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன?  குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா? என்று கேட்டார். அதற்க்கு பாபா "ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்" என்று கூறினார்.

( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )

குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

சாய் ராம்,  குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் புத்தகங்களை  படிக்க விரும்பும்   சாயிஅன்பர்கள்  saibabasayings@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file  அனுப்பபடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா கடவுளே
1917 ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாபா பம்பாய் மாது ஒருவரிடம் பேசினார்.

பாபா : தாயே, என்ன வேண்டும் ? கேளுங்கள்.

மாது : பிறப்பு, இறப்பு எனும் சுழலிலிருந்து விடுபடவேண்டும்.

பாபா : ( நகைத்தவாறு ) இவ்வளவு தானா உங்களுக்கு வேண்டும்? என்ன! இறப்பதற்காகவா இங்கே வந்துள்ளீர்கள்?

மாது ( அதிர்ந்தவராக ) : பாபா ! தங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பாபா : நீங்கள் யார் என்பதை எண்ணிப்பாருங்கள்.

மாது : எனக்கு விளங்கவில்லை.

பாபா ( இம்மாதின் கணவரை சுட்டிக்காட்டி ) : அவர் உமக்கு சொல்லுவார்.

பின்னர் அம்மாது தான் கணவருடன் தங்குமிடம் சேர்ந்து, பாபா கூறியதன் பொருள் என்ன என அவரிடம் கேட்டார்.

கணவர் : பாபாவின் சொற்கள் மர்மமானவை. அவர் என்ன பொருளுடன் பேசினார் என்பது எனக்கு தீர்மானமாகத் தெரியாது. ஒருவேளை இம்மாதிரி இருக்கலாம். இறையுணர்வு பெறும் வரை ஜீவன் மீண்டும் மீண்டும் பல முறைகள் பிறவி எடுக்கிறது. பாபா கடவுளே, ஆனால் அவரைக் காணும் ஜனங்கள் பூரண விசுவாசம் கிடைக்கப் பெறாமல் அவரை கடவுள் என அறிவதில்லை. ஆகவே அவர்களுக்கு முக்தியும் கிட்டாது.

ஜீவனும் சிவனும் ஒன்றே என்பதை சாத்திரங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். உன்னை ஒரு ஜீவனாகவே கருதுகிறாய், அல்லவா ?

மாது : ஆம்.

கணவர் : பாபாவும் சாத்திரங்களும் கூறுவது உன்னை சிவம் அல்லது கடவுள் என உணர வேண்டுமென்பது.

மாது : இல்லை, இல்லை. நான் ஒரு அற்பமான பாபியாகிய ஒரு ஜீவனே, உயரிய தெய்வமான சிவனல்ல..

கணவர் : உன் உணர்வு அப்படி இருக்கலாம். ஆனால் தொடர்ந்து உன்னையே கடவுளாக எண்ணி வருவதால், நீ ஒரு அழியும் ஜீவனே என்று உன் மனதில் ஆழ்ந்து பதிந்திருக்கும் நம்பிக்கை அகன்றுவிடும் என்பது பாபாவின் கூற்று. இந்த வழிமுறை தொடர்ந்து, பல பிறவிகளிலும் இருக்கலாம். பின்பற்றப்பட்டும், உறுதிபடுத்தப்பட்டும், மகான்களுடைய தொடர்பினால் உதவப்பட்டும், நீ பிரம்மன் என்ற திடமான நம்பிக்கை உனக்கு ஏற்பட்டு விடும். பாபாவின் சொற்களின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

(தம்பதிகள் மீண்டும் துவாரகாமாயிக்கு திரும்பி வந்தனர்.)

பாபா : தாயே! ( இங்கிருந்தவாறே ) உம் கணவர் உம்மிடம் கூறியதை எல்லாம் நான் கேட்டேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

பாபா அடிக்கடி சொல்லுவார் " நாம் யார்? " இரவும் பகலும் இதை எண்ணிப் பார் என்று....

                                                        * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 21, 2017

ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம்சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமே அன்றி வேறல்ல... சாய் சத்சரித்திரத்தில் இருந்து சில துளிகள்...

* பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே.

*பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் சாக்ஷாத் எப்போதும்  வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே. இதில் சந்தேகமே வேண்டாம்.

* ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பாபா கூறியுள்ளார். ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை பொம்மலாட்டத்தை போன்று தானே நடத்துவதாக கூறியுள்ளார்.

* எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு மானசீகமாகவாவது நிவேதனம் செய்யுங்கள், இது போன்ற பக்தர்களிடம் எப்பொழும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார். பட்டினியாய் இருப்பதை ( விரதம் ) இருப்பதை பாபாஒருபோதும் அங்கிகரிக்கவில்லை.

* நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 20, 2017

சாயி நாமத்தின் சக்தி

                            


                                        "ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"   
சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 19, 2017

குருவை நம்பு
"குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை" என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர, அது  பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது. பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக , பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக, நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை( உதி ) நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி, வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 18, 2017

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சாய் பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். 

                        என்மேல்  நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று ஏதும் கிடையாது. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.   


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 17, 2017

கவலைகள் அனைத்தும் தீரும்

                                                   
    
                                                     
   

உங்களுடைய கவலைகள் அனைத்தும் தீரும். பாபாவிடம்  ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார். நீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள். பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள். வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா  நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே. பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஓம் சாய்ராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 16, 2017

உண்மையான பக்தன் முன் பாபா தோன்றுகிறார்.

சாய்பாபா ஓர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பி போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி  இருக்கிறார். பாபாவின்சஞ்சாரம்  புரிந்துகொள்ளமுடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன! உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன் தோன்றுகிறார் ..-ஸ்ரீ சாயி இராமாயணம். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 15, 2017

பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே

                                                    
                                                   

பாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின்  கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில்  பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான்  அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, "நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை? " என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார். 
  1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்திபடுத்துவதற்காகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின்  மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வரை பாபாவின் திடபக்தராக இருந்தார்.  பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள்  நிலை நாட்டுகிறது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 14, 2017

கவலை கொள்ள தேவையில்லை


"ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை ". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 13, 2017

பாபாவிற்கான பூஜை விரத முறைகள்

                                                     எந்த வித சம்பிரதாயமான பூஜை முறைகளையோ, விரதங்களையோ எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை. எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நம்பிக்கையும் பொறுமையும் தேவைபடுகிறது.

                                                      

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன்  பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.  இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று, மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள், பக்தர்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில் பதில் கூறியுள்ளார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 11, 2017

நிலையற்ற புத்தியுள்ள மனிதன்

                                                        

                                                   
நிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உன்னுடைய  நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள் நான் வழிகாட்டுகிறேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 10, 2017

பக்தர்களின் கஷ்டங்கள்

எனது பக்தனுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் நான் பாதுகாப்பேன். என்னுடைய பக்தர்களின் கஷ்டங்கள் என்னுடையதேயாகும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 9, 2017

சகலமும் குருவே


Image may contain: 1 personஎவனொருவன் குருவே பரமார்த்தமென்றும் சகலமும் அவர்தானென்றும், மும்மூர்த்திகளின் அவதாரமென்றும் அறிந்து அவரை சேவிக்கிறானோ அவனுக்கு எல்லா வளமும் கிடைத்து சுகமாக வாழ்வான். என்றும் குருவை சேவிப்பவர்களுக்கு மும்மூர்த்திகள் வசமாவார்கள். மும்மூர்த்திகளின் அருளினால் மட்டுமே மனிதனுக்கு சத்குரு கிடைப்பார்.- ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 8, 2017

ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்


சிவனையோ, ராமனையோ பூஜிப்பதை விட்டுவிட்டு ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டுமென பக்தர்களுக்கு கேள்வி எழுமானால், அதற்கு அவசியமில்லை என்பதே பதில். ராமனிடமிருந்தோ, தனது வேறு இஷ்ட தெய்வத்திடமிருந்தோ சாயி வேறுபட்டவர் என்றோ, பக்தர்கள் நலன்களை கவனிக்க அந்த தெய்வங்களே போதும் என்றோ ஒருவர் கருதி, அதில் திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படுமானால், சாயி அத்தகைய ஒருவரை தனது கருத்தை மாற்றிக் கொள்ளும்படி ஒருபோதும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. பாபா சம்பிரதாயங்களை மிகவும் மதிப்பவர்; ஒவ்வொருவரும் தனது சமயம், குலம், குரு, இஷ்டதெய்வம், விக்ரகம், மந்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதே பாபாவின் அறிவுரை. தனது இஷ்டதெய்வம், குரு, மந்திரங்கள் முதலியவற்றுடன் உள்ள வழக்கமான தொடர்பு வேண்டிய அளவு பலன்களை அளிக்கவில்லை எனக்கருதி ஒருவர் பாபாவை அணுகி அவருடைய சக்திகள் வேண்டும் பலன்களை அளிக்கும் என நம்பிக்கை வைப்பாரேயாகில், பாபா அவரை தம்மிடம் வரும்படி கூறவோ அல்லது வருவதற்கு அனுமதிக்கவோ செய்வார். பாபா அவரது விசுவாசங்களில்  குறுக்கிடுவதில்லை; பழைய விசுவாசங்களுடன் பாபாவிடம் விசுவாசம் என்பது சேருகிறது. அத்தகைய விசுவாசம் ஆச்சரியகரமான பலன்களை அளித்து மேலும் உறுதியாகிறது. லௌகீக பலன்களை நாடி ஒருவர் வருகிறார், அவரது ஆசைகள் நிறைவேறுகின்றன, அத்துடன் அவரது சிந்தனையும்  மாறுகிறது. பாபாவைப் பற்றி மேலும் மேலும், மிக்க உயர்வாக எண்ணுகிறார். கடைசியில் கடவுள் சூடிக்கொண்ட எண்ணற்ற பெயர்கள், உருவங்கள் ஆகியவற்றில் பாபா என்பதும் ஒன்று என உணர்ந்து முழுமையாக பாபாவிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 7, 2017

அளவற்ற பயனை எய்துவான்


குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. 
கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும். - ஸ்ரீ குருசரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 5, 2017

ஆசிகள் வழங்குவதே என் தொழில்


நான் பர்வர்திகார் ( கடவுள் ). நான் வசிப்பது ஷீரடி மற்றும் எங்கும். என் வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். கங்காபூர், பண்டரிபுரம், மற்ற எல்லா இடங்களிலும் நான் இருக்கிறேன். இவ்வுலகின் ஒவ்வொரு துகளிலும் நான் உள்ளேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 4, 2017

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்


வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ?. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 3, 2017

எல்லாமே பாபா தான் !

                                                       


பாபா : ( ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்ட ஹன்ஸ்ராஜை நோக்கி ) : தயிரையோ அல்லது அமிலம் நிறைந்த பொருட்களையோ புசிக்காதே.

ஆனால், ஹன்ஸ்ராஜ் ஒவ்வொரு இரவும் மறுநாள் பகல் உணவுடன் சேர்த்து புசிப்பதற்காக தயிர் தயாரித்து வந்தார், தினமும் ஒரு பூனை அதை குடித்துவிட்டு சென்று வந்தது. ஒருநாள் அவர்  அந்த பூனையை அடித்துவிட்டார்.

பாபா : ( மற்றவர்களிடம் ஹன்ஸ்ராஜின் முன் ) : வக்கிர புத்தியும், பிடிவாதக்காரனுமான ஒரு ஊபன்டியா ( சொன்னதற்கு மாறாக செய்பவன் ) இருக்கிறான். தயிர் உண்பதை தவிர்க்கும்படி நான் அவனிடம் கூறினேன். ஆனால் அவன் தினமும் தயிர் தயார் செய்து வந்தான். அவன் உயிரை காப்பதற்காக தினமும் நான் ஒரு பூனை உருவில் சென்று தயிரை குடித்து வந்தேன். அவன் என்ன செய்தான் தெரியுமா? என் தோள் பட்டையில் அடித்துவிட்டான். ( பாபாவின் தோள்பட்டையில் ஒரு புது அடிபட்ட தழும்பு இருப்பதை ஹன்ஸ்ராஜ் கண்டார்; ஆனால் அவர் தடி கொண்டு அடித்தது ஒரு பூனையையே ! )


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 2, 2017

பக்தனின் முதிர்ச்சி

                                        அந்தேரியைச் சேர்ந்த பாலாபட் என்பவர் 1909ஆம் ஆண்டு தீபாவளி விழாவன்று பாபாவை தரிசித்தார். இரவு 8 மணிக்குமேல், பாபாவின் முன்னாள் அமர்ந்திருந்த அவர், தனக்கு உபதேசம் தந்து, தனது குருவாக இருக்கும்படி பாபாவைக் கேட்டுக் கொண்டார். அப்போது பாபா,

" ஒருவருக்குக் குரு இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல. எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுக்கிறீர்கள். எதை கொடுக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். ஒரு குரு வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாம் உனக்குள்ளேயே இருக்கிறது. உள்நோக்கிக் கேட்பதற்கு முயற்சி செய்து, உனக்குக் கிடைக்கும் மாற்றத்தின்படி நட. நமது 'ஆத்மா' வைப் பார்க்க வேண்டும். அதுவே நமது சட்டாம்பிள்ளை, நமது குரு ஆகும்" என்றார்.

பாபா எப்போதும் பக்தனின் முதிர்ச்சியை அளவிட்டே, அவனுக்குத் தேவையான போதனையை அளித்துவருகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...