Thursday, November 30, 2017

சாப்பிடும் போது என்னை நினைக்கிறாயா ?
சாப்பிடும் போது என்னை நினைக்கிறாயா ? உன் அருகில் நான் இல்லை? எனக்கு ஒரு கவளம் கொடுக்கிறாயா? - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா    (பாபா தனது பக்தரிடம் கூறிய வார்த்தைகள் இவை. இன்றும் பக்தர்கள் பாபாவுக்கு செய்யும் நிவேதனத்தை பாபா நிச்சயம் ஏற்றுக் கொள்கிறார். இதில் சந்தேகமே வேண்டாம் )

ஸ்ரீமதி தார்கட் என்ற மாது , பம்பாய் பாந்தராவில் உள்ள தனது வீட்டில் தினமும் மூன்று முறை பாபாவுக்கு நிவேதனம் செய்து வந்தார்.
1914ம் ஆண்டு மே மாதம், தனது புதல்வனுடன் பாபாவை காண ஷிர்டி வந்தார்...

பாபா : தாயே ! நான் உன் இல்லத்திற்கு ஒவ்வொரு நாளும் மூன்று முறைகள் வர வேண்டியிருக்கிறது.

ஸ்ரீமதி தார்கட் : ஆம், பாபா.

அங்கிருந்த உள்ளூர்வாசியான ஒரு பெண்மணி வியப்புற்றார்; ஏனெனில் தினமும் அவள் பாபா ஷிர்டியிலேயே இருப்பதை பார்த்துள்ளாள். " பாபா, இது என்ன வினோதமான பேச்சு ? " என்று வினவினாள்.

பாபா : நான் பொய் பேசுவதில்லை. தாயே! நான் உன் இல்லத்திற்கு வருகிறேன். நீ நான் புசிக்க பண்டங்களை அளிக்கிறாய். உண்மை அல்லவா?

ஸ்ரீமதி தார்கட் :  ஆம்.

ஷீரடி மாது : உண்மையிலேயே பாபா உங்கள் வீட்டுக்கு வருகிறாரா? அவருக்கு நீங்கள் உணவளிக்கிறீர்களா ?

ஸ்ரீமதி தார்கட் :  ஆம்.

பாபா : ( ஷீரடி பெண்மணியிடம் ) : ஆம், தாயே. நான் தார்கட் வீட்டிற்கு (பாந்தரா,பம்பாய்)  எளிதாக செல்கிறேன். வழியில் ஒரு சுவர். அதன் மீது ஏறி தாண்டினால், பின்னர் ரெயில்வே தண்டவாளம், அதற்கப்பால் தார்கட்டின் வீடு. (பாபா பாந்தராவில் அந்த மாதின் வீட்டிற்கு ஷீரடியிலிருந்து விண்  வழி மார்கத்தை விவரிக்கிறார். )
நான்கு சுவர்களையும், தோண்டப்பட்டுள்ள பள்ளங்களையும் கடந்து பறந்து செல்ல வேண்டியுள்ளது.
    
                                                * ஜெய் சாய்ராம் *  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 29, 2017

வியாதியும் வலியும் பாபாவின் தரிசனத்தால் குணமாகிவிடுகிறது.ஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் ! அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அரிவாள். உங்களுடைய கொடிய வியாதியையும் வலியையும்  அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது. எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.   சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும். - ஸ்ரீ மத் சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 28, 2017

எல்லா பாவங்களும் ஒழிய பாபாவின் பாதங்களை வழிபடுங்கள்


குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக. உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார். ஆகவே, எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள். எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 27, 2017

இரவு முழுவதும் உன்னையே நினைத்திருந்தேன்

பாபா வாழ்ந்த காலத்தில், பக்தர்கள் அவரை தரிசிக்க வரும்போது "நான் எப்பொழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேற்று இரவு முழுவதும் உன்னையே நினைத்திருந்தேன் " போன்ற மொழிகளை கூறுவார். அதாவது தனது பக்தர்களை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் பின் தொடர்கிறார், பாதுகாக்கிறார், காரியங்களை செய்யவும் வைக்கிறார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனது பக்தன் மேல் அப்படியொரு அன்பு. எப்பொழுதும் உன்னையே நினைத்திருக்கும் பாபாவை தினம் ஒரு பத்து நிமிடம் கூட நீ  நினைப்பதில்லை. பாபாவே எல்லாம், அவரிடமே சரணாகதி அடைந்துவிட்டேன் என்று சொல்பவர்கள் கூட அவரது நாமத்தை பத்து நிமிடம் கூட சொல்வதில்லை. பாபாவிடம் நெருங்கிய தொடர்பு வைத்து கொள்வதற்கு  வெறும் பத்து நிமிட சாயி நாம ஜபம் மிக சிறந்த சாதனம். சாயிநாம ஜபத்தின் மூலம்  உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் நிச்சயம் சாயி நாம ஜபம் செய்யவேண்டும்.
 " ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி "


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 26, 2017

உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம்.செல்வமும் சுபிட்சமும் நிலையற்றவை. இவ்வுடல் அழிவிற்கும், மரணத்திற்கும் உட்பட்டது. இதை உணர்ந்து இம்மை மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்று அனைத்தையும் விட்டுவிட்டு உனது கடமையைச் செய். இவ்வாறாகச்செய்து எவன் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகிறானோ அவன் தொல்லைகள் யாவற்றினின்றும் விடுபட்டு பேரானந்தப் பெருநிலை எய்துகிறான். அன்புடனும் பாசத்துடனும் எவன் அவரை நினைத்துத் தியானிக்கிறானோ பரமாத்மா அவனுக்கு ஓடிச் சென்று உதவி புரிகிறார். உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம். எனவே நீ இங்கு வந்துள்ளாய்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 25, 2017

ஆன்மீக வளர்ச்சிவாழ்க்கைக்கு வேண்டிய உணவும் உடையும் எவ்வாறு கிடைக்கும் என்று ஒருகணமும் சிந்திக்க வேண்டாம். ஏனெனில்,அவை முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்றவாறு பிரயத்தனம் செய்யமலேயே கிடைக்கும். இவற்றை சம்பாதிப்பதற்குப் பெருமுயற்சி எடுத்தீர்களானால் அத்தனையும் வீண். அதற்குப் பதிலாக ஆன்மீக வளர்ச்சியில் இரவுபகலாகக் கவனம் செலுத்துங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 24, 2017

சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார்சாய் சத்சரித்திரத்தின் பாதை எளிமையானது;  நேர்மையானது. இது படிக்கப்படும் இடம் எல்லாம் துவாரகாமாயி! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம் செய்வார். எங்கு சாய் சத்சரித்திரம் படிக்கபடுகிறதோ, அங்கு சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடன் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பா(BHA)வங்களுடனும்  அங்கு வாசம் செய்வார். ஆத்மானந்தத்தில் திளைக்கும் சாயியை மனத்திற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜபங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை. அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதியைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். நம்பிக்கையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும்   உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் பாபாவிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள்.  இங்கு காரணவாதமும்  தர்க்கமும் செல்லாது; புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது. உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது. சுத்தமான பக்தி உடையவரே பலன் பெறுவர்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 23, 2017

ஸ்ரீ சாய்பாபாவின் கிருபைகடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான  உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்திர பாராயணம் மற்றும் பல செயல்களும் ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை அடைகின்றன. ஸ்ரீ  சாயியிடமிருந்து  புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் சென்றைடைகின்றன.    http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 22, 2017

துன்பம் ஒரு முடிவை அடைகிறது


ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி படிகளின் மேல் காலடி எடுத்து வைத்த மறு நிமிடமே அவர்கள் துன்பம் ஒரு முடிவை அடைகிறது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 21, 2017

பாபாவிடம் சரணடையுங்கள்எனக்கு தெரிந்தது ஒன்றே, என் குரு போதித்த சத்யம். பற்பல சாதனைகளும், புத்தகங்களும் தேவையில்லை. தேவையானது குருவிடம் பூரண சரண், பூரண பிரேமை.  - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 20, 2017

பாபா நேரிடையாகத் தோன்றினார்பாலாராம் மாங்கர் என்ற பக்தர் தம் மனைவி இறந்துவிடவே மனம் நொந்து ஷீரடி வந்தடைந்து பாபாவின் நிழலிலே தங்கலானார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த பாபா, அவரிடம் பன்னிரண்டு ரூபாய்களைக் கொடுத்து சதாரா ஜில்லாவிலுள்ள மச்சீந்திரகாத் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார். பாபாவை விட்டுப் பிரிந்து செல்ல முதலில் பிரியப்படாவிடினும், பாபா அவ்வூருக்குச் சென்று தியானம்  செய்வது அவருடைய நன்மைக்கே என்று கூறவே மாங்கர் மச்சீந்திரகாத் சென்றார். அங்கே நல்ல இயற்க்கைச் சூழ்நிலையிலே தியானம் செய்து வந்தபோது அவர் ஒரு காட்சியை கண்டார். பாபா அவர் முன்பு நேரிடையாகத் தோன்றினார். தான் ஏன் இவ்வூருக்கு அனுப்பப்பட்டார் என மாங்கர் கேட்க, பாபா,  "ஷீரடியில் உன் மனதில் பல எண்ணங்களும் கவலைகளும் எழுந்து மனம் நிலையற்றிருந்தது. நான் மூன்றரை முழு உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருப்பதாக நீ எண்ணியிருந்தாய். நான் ஷீரடியில் மட்டும் தான் இருக்கிறேனா, அல்லது பக்தர்கள் நினைத்த விடங்களிலெல்லாம் இருக்கிறேனா, என்பதைக் கண்டுகொள். இதற்காகவே இவ்வூருக்கு உன்னை அனுப்பினேன்" என்று கூறியருளி மறைந்தார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 19, 2017

நூறு மடங்கு திருப்பியளிப்பேன்"என்னைத் தம்முடைய ஜீவப்பிராணனைவிட அதிகமாக எவர் நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும். அப்பேர்ப்பட்டவருக்கு, அவர் ஒரு குணம் (மடங்கு) கொடுத்தால் நான் நூறு குணம் (மடங்கு) திருப்பியளிப்பேன்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாhttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 18, 2017

அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம்1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.

1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா (ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்).http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 17, 2017

பாபாவிற்கு மிகவும் பிடித்தமான வழிபாடுபாபா எவர் காதிலும் எந்த மந்திரத்தையும் ஓதவில்லை. எவ்வித பூஜை வழிபாட்டு முறைகளையும் அவர் எதிர்பார்ப்பதுமில்லை. "சாயி,சாயி" என்று நீங்கள் கூறிக்கொண்டிருப்பதே  பாபாவிற்கு மிகவும் பிடித்தமான மிகச்சிறந்த வழிபாடு ஆகும். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 16, 2017

பாபாவே உன்னை காக்கும் தெய்வம்"நாஹம் தேஹோ நமே ம்ருத்யு : ஸர்போகும் பச்ய மாம்ஸதா 
பக்தோ மாம்ஸ்மரதே யந்ரதத்ர திஷ்டாமி  ரக்ஷிதம்". 

சாயி கூறுகிறார், நான் உடல் இல்லை. நான் இறப்பதில்லை. நானே எல்லாம். எப்பொழுதும் என்னை பாருங்கள். எங்கெல்லாம் பக்தன் என்னை நினைக்கிறானோ, அங்கெல்லாம் அவனைக் காப்பாற்ற நான் அங்கு நிற்பேன். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 15, 2017

என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்பக்தர்: பாபா,என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

பாபா: உலகில் ஆயிரக் கணக்கானவர்கள் உள்ளனர்.அவர்கள் எல்லோரையும் வரச் சொல்கிறேனா?உம்மை மட்டும் தருவிக்க ஏதாவது
விசேஷ காரணங்கள் இருக்க வேண்டாமா?

பக்தர்: இருக்கலாம்.ஆனால் எதையும் என்னால் காண முடியவில்லை.

பாபா: நீயும் நானும் பல ஜன்மங்களில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்திருக்கிறோம்.உமக்கு அது தெரியாது;ஆனால் நான் அறிவேன்.ஆகையால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது இங்கே {ஷிர்டி}வந்து போய்க் கொண்டிரும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 14, 2017

பாபா உங்களுடன் பேசுவார்.பக்தன் பாட்டிசைக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பார். வெல்லம் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பதைப் போன்று, நாமஸ்மரணை செய்பவரின் வீட்டிலேயே பாபா  இருப்பார். ஆன்மீக விஷயத்தில் நாளை என்பதை மறந்து இந்த வினாடியிலிருந்தே நாமஸ்மரணை செய்யத் தொடங்குங்கள். தினம் ஒரு பத்து நிமிடம் சாயி நாமத்தை சொன்னாலே போதுமானது. சாயி நாமமே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. சாயி பக்தர்கள் பெரும்பாலோனோர் பாபா தன்னிடம் நேரடியாக பேசமாட்டார், வேறு ஒருவர் மூலமே பேசுவார் அல்லது பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பார்  என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் தினமும் குறைந்தது 10 நிமிடம் பாபாவின் படத்தின் முன் அமர்ந்து நம்பிக்கையுடன் சாயி நாமத்தை சொல்லி வாருங்கள். உங்கள் பக்திக்கும் நம்பிக்கைக்கும் பலனாக பாபாவே உங்கள் முன் பிரசன்னமாவார், உங்களுடன் பேசுவார். 

  ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....
   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 13, 2017

பாபா இன்றும் நம்முடன் இருக்கிறார்
பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன்றி "தாயே! நான் இறக்கவில்லை. நீ எங்கிருந்தாலும், என்னை நினைத்த மாத்திரத்தில் எந்த ஒரு நேரத்தில் நீ விரும்பினாலும் நான் அங்கே இருப்பேன் (உடலுடன் கூடியோ இல்லாமலோ)" என ஆறுதல் அளித்தார்.  தாமோதர் ராசனே என்ற பக்தருக்கும் பாபா அந்த உறுதிமொழியை அளித்தார். நரசிம்ம ஸ்வாமியை சந்தித்த ராசனே 1918-ல் பாபா மகாசமாதி அடைந்த பின்னரும் அவர் பல தடவைகள் பாபாவை சரீரத்துடன் நடமாடுவதைக் கண்டதாகவும், அந்த சரீரி தம்முடன் பேசியதாகவும் கூறினார். பாபா இன்றும் நம்முடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே அத்தாச்சி. தன்னை நம்பியவர்களுக்கு பாபா என்றும் உயிருடன் இருக்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 12, 2017

எந்தவிதமான ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவதாக பாபா உறுதியளித்துள்ளார்.சாய்பாபா என்கிற மகத்தான தெய்வீக அவதாரத்திடம் நம்பிக்கை வைப்பவன், அவ்வாறு வைத்து விட்டோமே என எந்த கால கட்டத்திலும் வருந்த வேண்டியதில்லை. பின்னோக்கி நடக்க வேண்டியதில்லை. நம்பிக்கை வைத்த ஒருவன் தன் சுபாவத்தில் உயருகிறான் என்பதையும், இந்த படிப்படியான முன்னேற்றம் பாபாவால் உறுதி அளிக்கப்பட்ட  உன்னத பலன்களைப் பெற வழி வகுக்கும் என்பதையும் அனுபவம் காட்டும். சில சமயங்களில் பாபா, தம் பக்தனை எந்த பாதையில் இட்டுச் செல்கிறார் என்பதை மறைத்து விடுவது அவனுடைய நம்பிக்கையை திடப்படுத்தவே. தன்னிடம் தஞ்சம் புகுந்தவனை எந்த திக்கிலிருந்தும் தோன்றும் எந்தவிதமான ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவதாக பாபா உறுதியளித்துள்ளார். ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும் பாபா மீதான நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். பாபாவிடம் லௌகீக பலன்களை எதிர்பார்த்து வந்து கிட்டாமல் ஏமாற்றமடைந்தவர்கள் அவ்வாறு கிட்டாதது அவர்கள் எதிர்கால நன்மையை பாபா கருத்தில் கொண்டதால் தான்.  

 " பல ஜென்ம புண்ணியத்தினால் பாபாவின் தர்பாரில் இணைத்துள்ளோம். இனி நமக்கு கவலை இல்லை. எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் வாழும் நாம், எந்த சூழ்நிலையிலும் உங்கள் மீதான நம்பிக்கை குறையவே கூடாது என்ற ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் பாபா முன் வைப்போம். வேறெந்த வேண்டுதலும் வேண்டாம்."http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 11, 2017

என் சமாதி பேசும்"என் சமாதி பேசும், என் பெயரும் பேசும். என் (உடல்) மண் உங்களுக்கு விடைகள் அளிக்கும்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 10, 2017

சண்டைபோடும் மனோபாவம்"நாம் யாரிடமும் வெறுப்பு கொள்ளக் கூடாது; பொறாமை, விரோதம், எதிர்ப்பு, சண்டைபோடும் மனோபாவம் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்; பிறர் நம்மிடம் வெறுப்பைக் காட்டினால் நாம் நாம ஜபத்தில்  ஈடுபட்டு அவர்களைத் தவிர்க்க வேண்டும்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 9, 2017

எல்லா ஜீவன்களினுள்ளும் என்னைக் காண்
" எல்லா ஜீவன்களினுள்ளும் என்னைக் காண் " - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா உடலுடன் வாழ்ந்த போது தமது பக்தர்களுக்கு தாமே அந்த ஈஸ்வரன், எல்லோரினுள்ளும் அந்தர்யாமியாக இருப்பவர் என பிரகடனப்படுத்தியுளார்.
ஆகவே, அவர் தமது மிகச் சிறந்த பக்தர்கள் முதலில் அவரை தங்கள் இஷ்ட தேவதை அல்லது கடவுளாகக் காணவேண்டுமென்றும் பின்னர் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஜீவனுள்ளும்  தாம் இருப்பதை உணர வேண்டுமென்றும் விரும்பினார்.
தெய்வீகமும் காணற்கரிய சக்தியும் கொண்ட அவதாரமான பாபா பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் தோற்றமளிக்கிறார்; பாபாவைப் பற்றி முழுவதுமாக புரிந்துகொள்ள ஒருவன் ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும்  பாபா இருப்பதை உணர வேண்டும். 

தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஜீவராசியினுள்ளும் சாயிநாதர் இருப்பதை மானசீகமாக உணர்வது என்ற வழிமுறையாக கடைப்பிடிக்க வேண்டுமென பல பக்தர்கள் பாபாவால் போதிக்கப்பட்டனர். உதாரணமாக, ஒரு வாலிபன் ஓரிரவு வெளியே சென்றபோது ஒரு மரத்தடியில் ஒரு பேயைப் பார்த்துவிட்டு, அவசரம் அவசரமாகத் திரும்பி வந்துவிட்டான். மறுநாள் பாபா அவனை அவன் பார்த்தது எதை எனக் கேட்டார். ' நான் ஒரு பேயைப் பார்த்தித்தேன் ' என அவன் பதிலளித்தான். ' இல்லை, அது நானே' என்றார் பாபா. மறுபடியும் அந்த வாலிபன் அவன் பார்த்தது ஒரு பேயைத் தான் எனக் கூறினான். பாபா, 'நீ உன் தாயிடம் சென்று கேள்' என அவனைப் பணித்தார். அவன் அவனுடைய தாயிடம் சென்றான். பாபா (இறைவனே ஆனதால்) ஒவ்வொரு ஜந்துவினுள்ளும், கெட்ட ஆவி, நல்ல ஆவி எதுவாயினும் சரி உள்ளார் என்றும் அதனால் அவர் எல்லாவற்றிலுள்ளும் இருப்பதை நினைவில் வைத்துக் கொண்டு அவன் எதற்கும் பயப்படாமல் இருக்கவேண்டுமென்பது பாபாவின் நோக்கம் என்று கூறினால். 

இதைப் போலவே, 1918-ம் ஆண்டு பாபா தமது உடலைத் திறந்தபோது, லட்சுமி, 'பாபா, எனக்கு தரிசனம் அளிக்கமாட்டீர்களா?' என பிரார்த்தனை செய்தால், பிறகு இருட்டில் மசூதியிலிருந்து வெளியே வந்தாள். வழியில் ஒரு பாம்பு, உடனே அவள், 'பாபா, தாங்கள் இந்த பாம்பின் உருவில் வந்தால் நான் என்ன செய்வது?' எனக் கேட்டாள். பயங்கரமான பாம்பைப் பார்த்த போது கூட அவளால் அந்த பாம்பின் வடிவில் பாபாவைக் கண்டு பிரார்த்தனை செய்ய செய்ய முடிந்தது. இதையே தனது பக்தர்களுக்கு பாபா போதித்தார்.

மேலும், தனது பக்தர் காசிநாத்திற்கு (உபாஸனி மஹராஜ்) எல்லா ஜீவன்களிலும் தாம் இருப்பதை உணர்த்திய சம்பவத்தை பார்ப்போம்;

ஒரு தினம் பாபாவின் பக்தரான காசிநாதர் ( உபாஸனி மஹராஜ் ) கந்தோபா ஆலயத்தில் ஆகாரம் தயார் செய்து கொண்டிருந்தபோது ஒரு கருப்பு நாய் அதை ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. தயார் செய்த ஆகாரத்தை பாபாவுக்கு சமர்ப்பித்து விட்டுப் பின்னர் பிரசாதமாக எடுத்துக் கொள்ள, காசிநாதர் மசூதியை நோக்கிச் செல்லலானார்.

அப்போது அந்நாய் அவருடன் சற்று தூரம் பின் தொடர்ந்து வந்து பின் மறைந்தது. பகவானுக்கு நிவேதனம் செய்யும் முன்பு ஒரு ஈன ஜந்துவான நாய்க்கு ஆகாரமளிப்பது சாஸ்திர விரோதம் என்று அவர் கருதினார்.

பட்டப் பகல் வெய்யிலில் மசூதியை அடைந்த அவரை,

பாபா ; எதற்காக இங்கு வந்தாய் ?

காசிநாதர் ; தங்களுக்கு நைவேத்தியம் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

பாபா : நீ என் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டும்? நான் அங்கேயேதானே இருந்தேன் !

காசிநாதர் ; அங்கு ஒரு கருப்பு நாயைத் தவிர, வேறொருவரையும் பார்க்கவில்லையே ...

பாபா : அந்த கருப்பு நாய் நானே. நீ அங்கு உணவு அளிக்க மறுத்தமையால், இங்கும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மனம் நொந்து திரும்பிய காசிநாதர் மறுதினம் அத்தவறு நடக்காமலிருக்க வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டார். மறுதினம் ஆகாரம் தயார் செய்து கொண்டிருக்கும் போதே அந்த நாய் எங்காவது தென்படுகிறதாவென்று பார்த்தார். காணவில்லை. ஆனால் நோய்வாய்ப்பட்டு மெலிந்த சூத்திரன் ஒருவன் அங்கே சுவற்றில் சாய்ந்து கொண்டு அவர் ஆகாரம் தயார் செய்வதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

வைதீக பிராம்மணரான அவர் தாம் சமைக்கும் ஆகாரத்தை சூத்திரன் ஒருவன் பார்ப்பதால் திருஷ்டி தோஷம் வந்துவிடும் எனக் கருதி அவனை அங்கிருந்து விரட்டவே, அவன் போய்விட்டான்.

ஆகாரத்தை எடுத்துக் கொண்டு பாபாவின் முன் சென்றார் காசிநாதர்....

பாபா ( மிகுந்த கோபத்துடன் ) :  நேற்றும் எனக்கு உணவளிக்கவில்லை. இன்றும் விரட்டிவிட்டாய் .

காசிநாதர் : ஆ ! தாங்களா அந்த நோய்வாய்ப்பட்ட சூத்திரன் ?

பாபா : ஆம் ! எல்லாவற்றினுள்ளும், அவற்றைக் கடந்தும் வியாபித்து நிற்கிறேன்.

" இங்கு நீங்கள் பார்க்கும்  மூன்று முழ சரீரம் தான் சாயி  என்று நினைத்துவிடாதீர்கள்.எனது உண்மையான பக்தன் எல்லா இடங்களிலும் எனது இருப்பை உணர்வான்.எல்லா உயிர்களிலும் என்னை காண்பான்.-    ஸ்ரீ ஷீரடி சாய்பாபா "
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 8, 2017

பாபாவின் அதீத சக்திமும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்.  அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை. மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார். பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார். பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை  சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 7, 2017

இனி துன்பங்கள் இருக்காதுநீ உண்மையான குருபக்தன் . ஆகையால் குருச்சரித்திரத்தை கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மழை வருவதற்கு முன்பு ஜில்லென்ற காற்று வீசும். அதேபோல் குருவின் கருணை பெறுவதற்கு முன்பு அவர் கதையை கேட்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குரு கிருபையை பெற்றவர்களுக்கு துன்பங்கள் இருக்காது. சத்குருவை பூஜிப்பவர்கள் கண்டிப்பாக குருவின் அருளைப் பெற்று வாழ்வார்கள். ஆகையால் நீயும் குருவை நம்பிக்கையுடன் உறுதியான பக்தியுடன் சேவித்து சுகமுடன் வாழ்வாய் .- ஸ்ரீ குரு சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 6, 2017

பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள்பாபா பக்தர்களின் ஒவ்வொரு செயலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாபாவாலேயே கவனிக்கப்பட்டும், உருவாக்கப்பட்டும் வருகிறது... பாபா தன்னிடம்  பூரண சரணாகதி அடைந்த பக்தர்களிடம், "உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை. உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்" என்று கூறியுள்ளார். பிரார்த்தனை நல்லதே..அது பக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டால், தன்  பக்தனுக்கு எது நன்மையோ, அதை மட்டுமே பாபா அளித்துள்ளார். பிரார்த்தனைகளை விடுத்து பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள், மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார். பூரண சரணாகதி அதாவது பாபாவே சகலமும் சர்வமும் பரப்பிரம்மமும் அவரே என்று உணர்ந்த நிலை. 

''குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை தெரியும். அப்படி சேவிக்கும்  பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும். சிந்தாமணி நாம் வேண்டியதை தான் கொடுக்கும். ஆனால், குருவின் அருளோ நமக்கு என்னென்ன தேவையோ,எது நன்மைகளோ அவை எல்லாம் நாம் கேட்காமலேயே கொடுக்கும்.- ஸ்ரீ குரு சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...