Tuesday, November 28, 2017

எல்லா பாவங்களும் ஒழிய பாபாவின் பாதங்களை வழிபடுங்கள்


குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக. உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார். ஆகவே, எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள். எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...