Sunday, December 31, 2017

நாயும் பாபாவே

Image may contain: 1 person, smiling

பாபா ஷீரடியில் ஐந்து வீடுகளிலிருந்து தம் உணவை பிச்சை எடுத்தார். அதைக் கொண்டு வந்து மசூதியில் உண்பார். ஷீரடியில் அதிகமாகத் தங்கிவந்த திருமதி ஜி. எஸ். கபர்டே என்னும் பெண்மணி, பாபாவுக்குத் தினமும் மசூதியில் உணவை நைவேத்தியமாக அளித்து வந்தாள்.  ஒருமுறை பாபாவைத் தன் விடுதிக்குச் சாப்பிட வரும்படி அழைத்தாள். சிறுது காலம் இவ்வாறே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரை அழைத்தாள். ஒருநாள் பாபா, அவளது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்தார்; ஆனால் வரவில்லை. மற்றொரு நாளும் அவள் பாபாவை அழைத்தபோது, அவர் வருவதாக உறுதி அளித்தார்.
அன்றைய தினம் அவள் விதவிதமான பதார்த்தங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, அந்த வாசனையால் தூண்டப்பட்ட ஒரு நாய் அங்கு வந்தது. பாபாவுக்காகத் தூய்மையாகத் தயாரிக்கும் பண்டங்களை அது தூய்மைகெடச் செய்து விடுமோ என்று திருமதி கபர்டே பயந்தாள். அதை விரட்டுவதற்குக் கைக்கு எளிதாக எதுவும் கிடைக்காமற் போகவே, அடுப்பிலிருந்து எரிந்து கொண்டிருக்கும் விறகு ஒன்றை எடுத்து நாயின் மேல் ஏறிய ,அது ஓடிவிட்டது. அன்றும்கூடப் பாபா வரவில்லை. எனவே அவள், நைவேத்தியத்தை மசூதிக்கு எடுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தவுடன், பாபா  " நான் உன் வீட்டிற்க்கு வந்த போது, எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டையை என்மேல் எறிந்தாய் " என்றார்.திருமதி கபர்டே அவர் கூறியதன் பொருளை உணர்ந்து, தனது அறியாமைக்காக வருந்தினாள்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 30, 2017

உதி விதியை மாற்றும்


துகாராம் பார்க்கு, இவர் ஷீரடியில் விவசாயம் செய்துவந்தார். 1912-ல்  ஷீரடியிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்குச் சென்று வேலை செய்து சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டார்.
அப்போதுதான் கோதாவரியைச் சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிட்டார்கள். அதனால் வேலை கிடைக்கும் என புறப்பட்டார்.

கோபர்கான்  சாலையில் செல்லும்போது பாபா அவரது கழுத்தில் தன்  கையைப் போட்டு, 'போகதே' என்றார். ஆனால் துகாராம்  பாபாவின் வார்த்தையை கண்டுகொள்ளவில்லை. கரஞ்சிகாவோன் வந்தார். வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது.காய்ச்சல் நிற்கவே இல்லை.

தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர், தற்போது சொந்தகாரர்களை சார்ந்திருக்க வேண்டி வந்தது. பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பிவிட  நினைத்தார்.காய்ச்சல் நிற்கவில்லை. நாற்பத்தைந்து நாட்கள் தொடர்ந்து, உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை  அனுப்பச் சொன்னார். உதியை  இட்டுக் கொண்ட மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்றுவிட்டது. தினமும் குளித்து பின் உதியை நெற்றியில் இட்டுக்கொண்டு, கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் மன உடல் நோய் நிவாரணம் தரும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 29, 2017

பாபா உங்கள் வீட்டில் வாசம் செய்கிறார்.

Image may contain: 1 person, smiling

சாய்பாபா,  தாம் தமது கல்லறைக்குள்ளிருந்தும் கூடச் செயல் புரிவார்  என்று, நமக்கு உறுதியளித்திருந்தார். பகவான் ரமண மஹரிஷி கூறியபடி, ஆத்மானுபூதியடைந்த  மஹானான  ஒரு சத்குருவிடம் கொள்ளும் தொடர்பு, அவரது பூத உடல் மறைந்த பின்னும் தொடர்கிறது. இன்று, இந்நாட்டில் சாயிபாபா பக்தி இவ்வளுவு தூரம் பரவி இருக்கிறதென்றால், அதற்குப் பேசியும் நடமாடியும் வரும் அவரது கல்லறையின் செயலே காரணம். 


பாபாவின் பக்தர் பந்காராவின் அனுபவம்.

திரு. பங்காரா என்ற டெல்லிவாசி, எல்லா மகான்களிடமும் பக்தி செலுத்தும் பண்பைப் பெற்றிருந்தார். ஆனால் மிகவும் பழைய பழக்க வழக்கங்களில் ஊறிய அவரது மனைவிக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. 1956ஆம் ஆண்டு அவருக்குச் சாய்பாபாவின் படமுள்ள ஒரு காலண்டர் கிடைத்தது. பாபாவின் மேல் விசேஷ பக்தி என்று எதுவும் இல்லாமல், அதை அவர்கள் தங்கள் படுக்கை அறையில் மாட்டி வைத்தனர். ஒருநாள் அவர் படுக்கை அறையிலிருந்து வெளியே வரும்போது, காலண்டரில் இருந்த மகானை வணங்கி, அவரது பாதங்களைத் தொடும்படி திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட்டது. அதைப்பற்றி தம் மனைவியிடம் தெரிவித்தால், வீணாக விவாதம் வளரும் என்று அஞ்சியவராக, அவர் அதைத் தம் மனைவியிடம் தெரிவிக்கவில்லை. மறுநாள் காலை, அந்தப் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அவரது மனைவி, தான் வீட்டில் இருந்த படங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, படுக்கை அறையிலிருந்து ஒரு மர்மமான குரல், "குழந்தாய், எனக்குத்  தவறாமல் மாலை அணிவிப்பாய், உனக்கு நன்மை உண்டாகும் " என்று கூறுவதைக் கேட்டதாகவும் , இருமுறை இச்சொற்களைக் கேட்ட அவள், தன்னை அறியாமலேயே, அதன்படி செய்ததாகவும் கூறினாள். திரு.பந்காராவின் நண்பர் ஒருவர், அவரது அனுபவங்களைக் கேட்டு, பாபாவின் படத்துக்குச் சட்டம் (FRAME) இட்டு, ஒரு வியாழக்கிழமையன்று, அவர்களது பூஜையறையில் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ய, அவரது மனைவி அதற்கு நாள்தோறும் மாலையிடுவது வழக்கமாயிற்று.
                                ஒரு நாள் பாபாவின் படத்திலிருந்து, அவளது ஆசை என்ன என்று கேட்கும் குரலை அவள் கேட்டாள். தன்  கணவன் நலமாயிருக்க வேண்டும் என்ற தன் முதல் ஆசையையும், பின்னர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்ற இரண்டாவது ஆசையையும் தெரியபடுத்தினாள். சாயியின் பூஜை தொடங்கிய ஒரு வாரத்தில் வீட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டது.  திரு.பந்காராவிற்கு ஊதிய உயர்வும் கிடைத்தது. 1957ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்  திரு.பந்காராவுக்கு ஒரு மகன் பிறந்தான்.  
 பங்காரா குடும்பத்தினருக்கு எந்தவிதப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் பாபாவிடம் பிரார்த்தனை செய்தவுடன்,பொருத்தமான தீர்வு அவர்கள் மனதில் உதிக்கும். பாபாவின் அருளால் அவர்கள் எண்ணியதெல்லாம் நிறைவேறி வந்தது.
எங்கெல்லாம் பாபாவின் படம் இருக்கிறதோ, அங்கே பாபா வாசம் செய்கிறார்.
பாபாவை நேரிலே தரிசிப்பதற்கும் அவரின் படத்தை தரிசிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 28, 2017

சாய்பாபாவின் தோற்றமும் நடையுடை பாவனை

No automatic alt text available.

சாயிபாபா ஏறக்குறைய ஐந்தரையடி உயரம் இருந்தார். அவர் பருமனுமல்ல, மெலிந்தும் இருக்கவில்லை. அவர் தங்கத்தைப் போன்ற மஞ்சள் நிறமுடையவராயிருந்தார். அவரது கண்கள் நீலநிரமானவை. அவை இருட்டில் கூட ஒளிரும். உண்மையில் அவைகளே பக்தர்களின் வியப்பைத் தூண்டுபவை. ஸ்ரீ சாயி சரனானாந்தாஜி பாபாவைப் பார்த்த சமயத்தில், பாபாவின் சில பற்கள் விழுந்திருந்தன. மற்றவை தூய வெண்மையாய் இருக்கவில்லை. பாபா ஒருபோதும் பல் தேய்த்ததே இல்லை. காலைவேளைகளில் சிறிது நீரைக்கொண்டு வாயைக் கொப்பளிப்பார். அவ்வளவே. அவர் காப்பியோ தேநீரோ அருந்தியதே இல்லை. புகைக்குழாயில் புகை பிடிக்கும் வழக்கத்தை எப்படி ஆரம்பித்தார் என்று அவர் ஒருபோதும் ஒருவரிடமும் கூறியதில்லை.
 பாபா எப்போதும் முரட்டு வெள்ளைத் துணியிலான உடைகளையே அணிந்தார். தமது தலையைச் சுற்றி எதற்க்காக துணியைக் கட்டிக் கொண்டிருந்தார் என்று எவருக்கும் அவர் கூறியதில்லை. அவர் தினந்தோறும் குளித்ததே இல்லை. அவருக்கு தோன்றும்போது குளிப்பார். சில சமயங்களில் ஆறு வாரங்கள் கூட அவர் குளிக்காமல் இருந்திருக்கிறார்.
அவர் போக்கில் விடப்பட்டால், பாபா மிகவும் குறைவாகவே பேசுவார். மிக அவசியமானால்தான் பேசுவார். அவர் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை. மென்மையாக புன்னகை செய்வார். பெரும்பான்மையான நேரம் அவர் கண்களை மூடியவாறு இருப்பார்.
 மிக வியப்பிற்குரிய விஷயம் யாதெனில், பாபா ஒருபோதும் மசூதியிலுள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்ததே இல்லை. அவர் கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்தபோது கூட, சுவரிலிருந்து சில அங்குலங்கள் தள்ளியே அமர்வார். பகல் வேளைகளில் அவர் ஒருபோதும் படுத்ததே இல்லை. ஷீரடியில் உள்ள கோவில்கள் எதற்கும் அவர் சென்றதில்லை.
பாபாவுக்கேயுரிய சில குறிப்பிட்ட செய்கைகள் உண்டு. ஒவ்வொருநாள் காலையிலும் பாபா வேப்பமரத்துக்கு முன்னாலுள்ள குருஸ்தான் என்று அழைக்கப்படும்   இடத்துக்கு நடப்பார். பின்னர் அவர் மசூதிக்கு முன்னாள் நின்று, நான்கு முக்கிய  திசைகளிலும் தமது கைகளைத் திரும்பத் திரும்ப அசைப்பார். கண்ணுக்குத் தெரியாத ஜீவன்களுக்கு ஏதோ சைகை செய்வதுபோல் இருக்கும் அது. பிறகு மசூதியிலுள்ள தமது இருக்கைக்குத் திரும்புவார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 27, 2017

பாபாவே உன்னை அழைத்தார்.

Image may contain: one or more people and closeup

என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 26, 2017

உன்னுடனேயே நான் இருக்கிறேன்"நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப்படவேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" - ஸ்ரீ ஷிர்டி  சாய்பாபா ( பாபா தனது பக்தை சந்திரபாயிடம் கூறியவை {1918} ).http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 25, 2017

பாபாவிடம் இதயப்பூர்வமான சரணாகதி அடையுங்கள்


Image may contain: one or more people

பாபாவிடம் இதயப்பூர்வமான சரணாகதி அடைதலே துயரங்களின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும். வெறும் உடலை மட்டும் பாபாவிடம் இருத்துவதால் லாபம் என்னவாக இருக்க முடியும்?. 
சிந்தனையும் பாபாவை பற்றியதாக இருக்க வேண்டும். அப்போது சுகம் உண்டாகும். நம்பிக்கை ஒன்றின்மீது நிலையாக இருக்கும்போது மிகுதியான பலனடைவீர்கள். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 23, 2017

அன்னதானம் செய்யுங்கள்

Image may contain: food


உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழுபூச்சியோ, எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய்  வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம்  விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.  "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 22, 2017

பாபா உங்களுடன் இருப்பதை உணர்வீர்கள்

Image may contain: one or more people and closeup

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை  அறிந்துக்கொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குணமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு  பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப  பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் ! இச்செயல்களின் நோக்கம் இதுவே.. http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 21, 2017

விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை.

Image may contain: 1 person, closeup


ஒரு தினம் பகல் ஆரத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை.
என் தோழர்களைக் காண்பித்து, "இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு" என பாபா பணித்தார். ஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர்  ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும்வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. "நீ உன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரும்வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும்" என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆர்த்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன். - ஸாந்தாராம் பலவந்த் நாச்னே. 

"நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக்    கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.".
                                                                       - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 20, 2017

எல்லாம் வல்ல சக்தி படைத்த பாபா


Image may contain: one or more people and closeup

எல்லாம் வல்ல சக்தி படைத்த பாபா, தாங்கள் விரும்பியதை எல்லாம் செய்வார்  என்று, பாபாவைப் போன்ற தெய்வீக மனிதரின் பக்தர்கள் தவறாகக் கருத இடமுண்டு. பாபாவின் மேலான அறிவுக்கு, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தைக் காட்டிலும் சிறந்த முடிவுக்கு வரமுடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 1915ஆம் ஆண்டில் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்த ஹார்தவைச் சேர்ந்த தனவந்தரான ஒரு கிழவர், ஒரு பெண்மணியுடன் ஷீரடிக்கு வந்தார். முதல் மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவு படிப்படியாகத் தேறி வந்தது. ஆனால் அதன்பிறகு திடீரென்று உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது முடிவு நெருங்கிவிட்டது போல் தோன்றவே, பேராசிரியர் நார்கேயை உதியை  பெறுவதற்காக அனுப்பினார். பாபா அவரிடம், அந்த மனிதர் உலகத்தை விட்டுச் செல்வதே அவருக்கு நன்மையை அளிக்கும் என்று கூறி, "உதியால்; அவனுக்கு என்ன பயன்? ஆனால் அவர்கள் கேட்டதால் உதியை எடுத்துச் செல்" என்றார். பேராசிரியரிடம் கூறியதையே, ஆனால் மறைபொருள் தரும்வகையில் ஷாமாவிடமும் பாபா கூறினார். "அவர் எப்படி இறக்க முடியும்? காலையில் அவர் மீண்டும் பிழைப்பார்" என்றார்.
                                      அந்த வயதான மனிதர் பிழைத்து விடுவார் என்று இதற்குப் பொருள் கொண்டுவிட்டனர். இரண்டாவது வாக்கியத்தில் மறைந்துள்ள எச்சரிக்கையை ஒருவரும் கவனிக்கவில்லை. அந்த மனிதர் இறந்துவிட்டார். பாபா தங்களுக்கு தவறான நம்பிக்கையை ஊட்டியதாகப் பக்தர்கள் கருதினர். சிறிது காலத்துக்குப்பின் கிழவரின் உறவினர் ஒருவர் கனவில் பாபாவை கண்டார். அவர் இறந்துபோன மனிதருடைய நுரையீரல்களைத் திறந்து காட்டினார். அவை அழுகிய நிலையில் இருந்தன. "இவை அளிக்கும் கொடிய துன்பத்திலிருந்து அவனைக் காத்தேன்" என்றார் பாபா. அதன்பிறகு, இறந்த கிழவரின் உறவினர்கள் மீண்டும் ஷீரடிக்கு வரத் தொடங்கினர்.ஏனெனில் துன்பப்படுபவருக்குத் தகுந்தது என்றும், நலமளிக்கக்கூடியது  என்றும் பாபா கருதினால், பாபா எத்தனையோ பேருக்குக் குணமளித்திருப்பதை  அவர்கள் அறிவர்.ஒருவரைக் குணப்படுத்துவதா வேண்டாமா என்று தீர்மானிக்க அதுவே அளவுகோலே தவிர, மற்ற உறவினர்கள் அந்த நோயாளியின்மேல் வைக்கும் பற்று  அளவுகோல் அன்று. பாபா ஒருவரது இறந்த காலத்தைப் பற்றி நூறு பிறவிகள் வரை அறிவார்;அதனால் அவரது இன்ப துன்பங்களுக்கான   காரணத்தையும் வெகு நுட்பமாக அறிவார். எனவே தமது பக்தர்களுக்கு எது மிகச் சிறந்ததோ, அதையே பாபா அளிப்பார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 19, 2017

குருவை நம்பு.ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை


Image may contain: 1 person

"குருவை நம்பு.ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை" என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று.ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர,அது  பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது.பாபாவின் படம்,அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது.பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக ,பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது,நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும்.நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும்.பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி,அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக,நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும்,அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து,அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும்,தூங்குவதற்கு முன்,நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக,வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும்.பாபா,தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து,அவரது இருப்பை உணர்ந்து,அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி,வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

                                                                             - ஆச்சார்யா  E . பரத்வாஜா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 18, 2017

சாயி சத்சரித்திர பாராயணம் செய்யுங்கள்

Image may contain: 1 person

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்தியவாசம் செய்வாள். சப்தாஹமாகப் ( ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவரின் தரித்திரம் பறந்தோடும். சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்குக் கைவல்ய பதவியை (முக்தியை) அளிப்பவருமான சாயியின் கதையை பக்தர்கள் தினமும் கேட்கவேண்டும். அவருடைய கதைகள் கலியுகத்தின் பாவங்களை அழிக்கும். பக்தியோடும் முழுநம்பிக்கையோடும் சாயிபக்தர்கள் தினமும் சத்சரித்திர பாராயணம் செய்யவேண்டும்.  ஓம் சாயிராம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 17, 2017

பாபாவின் திருவுருவம்

No automatic alt text available.

பாபாவின் திருவுருவத்தை அடிக்கடி பார்க்கவேண்டும், அவரை எப்போதும் நினைக்க அது உதவும், என்ற நோக்கத்துடன் பாபாவை போட்டோ எடுப்பதற்கு பம்பாயிலிருந்து சில  மாணவர்கள் காமரா ஒன்றுடன் வந்திருந்தனர். அவர்களுடைய நோக்கம் நிறைவேற போட்டோ எடுப்பது சரியான வழியல்ல, மாறாக அவர்கள் தம்மைக் காண முடியாதவாறு மறைந்து நிற்கும் சுவரை தகர்த்தெறிய வேண்டும் என பாபா அறிவுரை வழங்கினார். அவ்வாறு தடையான சுவர் அகற்றுபட்டு விட்டால் அவர்களும் பாபாவும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் தெளிவாக பார்த்துக் கொள்ள முடியும். தகர்த்தெறிவது என்பது எதிர்மறையான சாதனை. பாபாவின் சூசகமான பேச்சின் உட்பொருள் என்ன?
அந்த வாலிபர்கள் தாங்கள் என்பது தங்கள் உடல்கள் தான் எனக் கருதியது போல், பாபா என்பதும் பாபாவின் சரீரம் தான் எனக் கருதினர். அந்த மாதிரி அனுமானங்களை விடாமல் பாபாவின் உடலை மட்டும் போட்டோ எடுக்க முயற்சி செய்யும் வரை, தங்களை பற்றியும் பாபாவைப் பற்றியதுமான ஸ்வரூபம் சம்பந்தமான அவர்களது தவறான நோக்கங்களிலிருந்து விடுபட முடியாது. 'ஷீரடியிலுள்ள இவ்வுடலைப் பார்த்துவிட்டு சாயி பாபாவைக் கண்டுவிட்டதாக ஒருவன் எண்ணுவானேயாகில் அவன் எண்ணம் தவறானது. நான் இங்கே இல்லை' என சில சமயங்களில் பாபா கூறுவார். 


தொடரும்......http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 16, 2017

இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியதில்லை

Image may contain: 1 personநானா(பாபாவின் பக்தர்); பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு,இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியதில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை(குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான, பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா?இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார். அது  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால்,ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என் சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா: இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன; ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 15, 2017

உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்

Image may contain: 1 person, smiling

பாபாவின் பக்தரான ராவ் பகதூர் ஹரி விநாயக் ஸதேயின் அனுபவம் ;

பாபா யாருக்கும் உபதேசம் அளித்ததில்லை. ஆகவே எனக்கு மந்திரோபதேசம் வேண்டுமென நான் அவரிடம் வேண்டவில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் மற்ற குருக்களிடம் உபதேசம் பெற நான் அழைக்கப்பட்டேன். பாபா இருக்கும்பொழுது மற்ற குருக்களிடம் இந்த நோக்கத்துடன் நான் சொல்லவேண்டுமா என்ற பிரச்னை எழுந்தது. பாபாவிடம் வேண்டினேன்; பாபா ஒப்புதல் அளிக்கவில்லை.
பாபாவால் முறைப்படி தீக்ஷை அளிக்கப்படவில்லை எனினும் பாபா திசைமாறா கவனத்துடன் நான் அவரையே நம்பியிருக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம். தனது பக்தனின் லௌகீக, ஆன்மீக நலன்கள் யாவற்றையும் கவனித்துக் கொள்ள அவர் சக்தி படைத்தவராகவும், தயாராகவும் இருந்தார்.
குரு பௌர்ணமி தினத்தன்று பாபாவை குருவாக எல்லா பக்தர்களும் கூட்டு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யும்படி என்னை பணித்தார். ஆனால் சிவராத்திரி நள்ளிரவில் அவரை சிவபெருமானாக நான் பூஜிக்க முயன்றபோது, அவர் அதை ஆமோதிக்கவில்லை. பாபா மற்றவர்களிடமிருந்து நான் உபதேசம் பெறுவதை விரும்பவில்லை எனினும் நான் சாதுக்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு அவர்களை உபசரிக்க வேண்டுமென விரும்பினார். 

"எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலவேண்டாம். என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் ஏதுமின்றி உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்".- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 14, 2017

பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பு

Image may contain: 1 person, smiling

சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். அன்றாட அலுவல்களுக்கு இடையே வெறும் பத்து நிமிடம் ஒதுக்குவது பெரும்பாலோருக்கு சவாலான காரியமே.
பாபாவின் படத்தின் முன்னர் அமர்ந்து அவரது நாமத்தை பத்து நிமிடம் சொல்லுங்கள். வேறு எந்த ஒரு சிந்தனையும் இல்லாது பாபாவையே உற்று நோக்கிய வண்ணம் இருங்கள். காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யுங்கள். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கலாம், மனம் அலைபாயும். ஆனால் பயிற்சியும், பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பின் மூலம் இது சாத்தியப்படும். நாளடைவில் பாபாவின் உருவம் எப்போதும் கண்களில் இருக்க, பாபாவின் நாமம் மனதில் ஒளித்துக்கொண்டே இருக்கும். இன்று மிகவும் புனிதமான நாள், எப்போதும் நம்மை காக்கும் தெய்வத்தின் நாம ஜெபத்தை இந்த நன்னாளில் தொடங்குங்கள். பாபாவின் அருள் இருந்தால் மட்டுமே சாயி நாமத்தை சொல்லமுடியும். தொடர்ந்து சாயி நாம ஜபம் செய்பவர்கள் நிச்சயமாக பாபாவால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே ! சந்தேகமே வேண்டாம். 
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 13, 2017

குருவை நம்பு

Image may contain: 1 person, closeup


குருவை பரிபூர்ணமாக நம்பியிருப்பது  ஒன்று மட்டுமே போதுமானது . அது ஒன்றே சாதனை.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 12, 2017

எப்போதும் உன்னை நினைத்திருப்பேன்,ரகுவீர் புரந்தரே, முதன் முதலாக 1909-ல் நான் சாயி பாபாவைப் பற்றி கேள்வியுற்று அவரை தரிசிக்க மனைவி, குழந்தை முற்றும் தாயாருடன் விஜயம் செய்தேன்.. பாபாவை சென்று தரிசித்தபோது, 
பாபா, "ஏழு நூற்றாண்டுகளாக அவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளது என அவர் என் தாயாரிடம் கூறினார், மேலும் 2000 மைல்களுக்கு அப்பால் என் பக்தன் இருப்பினும் நான் அவனை மறக்க மாட்டேன்; எப்போதும் அவனை நினைத்திருப்பேன், அவனில்லாமல் ஒரு துளியும் உண்ண மாட்டேன்" என்றார். -ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்கள் அனுபவங்கள்,பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி. http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 11, 2017

நினைத்தது நடக்கும்இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். -  ஸ்ரீ குரு சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 10, 2017

ஜோதிடம் பார்ப்பது, குறி கேட்பது


"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை. குறிப்பாக காரியம் நடக்குமா நடக்காதா என்று குறி கேட்பதோ , ஜோதிடம் பார்ப்பது போன்றவை பாபா மீது நம்பிக்கை இல்லாததை காட்டும். நம்பிக்கை உள்ள எந்த பக்தனிடமும் பாபா நேரடியாக தொடர்பு கொள்வார். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 9, 2017

சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்


வி.டி.பாவே என்பவர் தத்த சரித்திரத்தை முறையாக பாராயணம் செய்கையில் அவருக்கு ஒரு சமாதி காட்சியளித்தது. அந்த சமாதி சாயி பாபாவினுடையது என்பதை அவர் பின்பு கண்டுகொண்டார். ஆனால் நடமாடும் ஒருவரை குருவாகப் பெறாமல் ஒரு சமாதியை மட்டுமே குருவாகப் பெற்றது அவருக்கு திருப்தியளிக்கவில்லை. ஆகவே அவர் கேட்காம்பெட் ஸ்ரீ நாராயண மகாராஜிடம் செல்ல, அவர் ஒரு கனவு மூலம் பாவேயை மீண்டும் சீரடிக்கு சாயிபாபாவிடமே திருப்பி அனுப்பிவிட்டார். பாபாவின்  உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும்  (இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்). நம்பிக்கையுள்ள பக்தன்,  எல்லா இடத்திலும், பாபாவை காண்கிறான். ஸ்தூல உடலில் பாபா இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.
         
                                               * ஜெய் சாயிராம் *http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 8, 2017

பாபா நம்முடனேயே இருக்கிறார்பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை. பாபா, எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நம்முடனேயே இருக்கிறார். தொடர் நாமஜபம், சாயியை பற்றியே படித்தல், அவர் செய்த லீலைகளை நினைவு கூர்தல் போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருப்பதன் மூலம் பாபாவின் இருப்பை நாம் உணர முடியும். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 7, 2017

நான் உங்களை வசதி படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்"என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."


மகல்சாபதி, எப்பொழுதும் பாபாவின் அண்மையிலேயே இருந்த பக்தர். மசூதியிலும், சாவடியிலும் ஒரு நாள் விட்டு மறுநாள் என மாறி மாறி பாபா இரவுகளைக் கழிப்பார்; இரண்டு இடங்களுக்குமே மகல்சாபதி பாபாவுடன் சென்று அவருடனேயே உறங்குவார். சதா சாயிபாதங்களிலேயே மூழ்கியிருந்த மகல்சாபதி, சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். சாயி அவரை சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.
தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை சாயி பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மகல்சாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.

ஒருசமயம், ஹம்ஸராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர், மகல்சாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். ஆனால், "சாயியின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மிகப்பணிவாக பணத்தைத் திருப்பி கொடுத்துவிட்டார்.ஆகவே ஹம்சராஜ் சாயியை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால் மகல்சாபதியை ஒரு பைசாவைக்கூடத் தொட சாயி அனுமதிக்கவில்லை. சாயி சொன்னார், "என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்" என்று...

அனுதினமும் பாபா, ஒருவருக்கு ரூ.15, மேலும் ஒருவருக்கு ரூ.10 என அளித்துவந்தார். பல முறைகள் பாபா மகல்சாபதியிடம், "இந்த மூன்று ரூபாயைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு பெற்றுக் கொண்டேயிருங்கள். நான் உங்களை வசதி படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். ஆனால்  எப்போதுமே மகல்சாபதி மறுத்து வந்தார். அவருடைய பதில் இதுதான்; "எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் தங்கள் பாதங்களுக்கு பூஜை செய்வது ஒன்றையே விரும்புகிறேன்." தானங்கள் பெறுவதைத் தவிர்த்து, கிடைத்ததை வைத்து திருப்தியடைவதை லௌகீகமான செல்வத்தைப் பெறுவதையும் தக்கவைத்துக் கொள்வதையும் விட உயர்வானதாகக் கருதினார்.
   
                                                     * ஜெய் சாய்ராம் *
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 6, 2017

நம்பிக்கையும் விசுவாசமும்குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள், இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...