Friday, December 29, 2017

பாபா உங்கள் வீட்டில் வாசம் செய்கிறார்.

Image may contain: 1 person, smiling

சாய்பாபா,  தாம் தமது கல்லறைக்குள்ளிருந்தும் கூடச் செயல் புரிவார்  என்று, நமக்கு உறுதியளித்திருந்தார். பகவான் ரமண மஹரிஷி கூறியபடி, ஆத்மானுபூதியடைந்த  மஹானான  ஒரு சத்குருவிடம் கொள்ளும் தொடர்பு, அவரது பூத உடல் மறைந்த பின்னும் தொடர்கிறது. இன்று, இந்நாட்டில் சாயிபாபா பக்தி இவ்வளுவு தூரம் பரவி இருக்கிறதென்றால், அதற்குப் பேசியும் நடமாடியும் வரும் அவரது கல்லறையின் செயலே காரணம். 


பாபாவின் பக்தர் பந்காராவின் அனுபவம்.

திரு. பங்காரா என்ற டெல்லிவாசி, எல்லா மகான்களிடமும் பக்தி செலுத்தும் பண்பைப் பெற்றிருந்தார். ஆனால் மிகவும் பழைய பழக்க வழக்கங்களில் ஊறிய அவரது மனைவிக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. 1956ஆம் ஆண்டு அவருக்குச் சாய்பாபாவின் படமுள்ள ஒரு காலண்டர் கிடைத்தது. பாபாவின் மேல் விசேஷ பக்தி என்று எதுவும் இல்லாமல், அதை அவர்கள் தங்கள் படுக்கை அறையில் மாட்டி வைத்தனர். ஒருநாள் அவர் படுக்கை அறையிலிருந்து வெளியே வரும்போது, காலண்டரில் இருந்த மகானை வணங்கி, அவரது பாதங்களைத் தொடும்படி திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட்டது. அதைப்பற்றி தம் மனைவியிடம் தெரிவித்தால், வீணாக விவாதம் வளரும் என்று அஞ்சியவராக, அவர் அதைத் தம் மனைவியிடம் தெரிவிக்கவில்லை. மறுநாள் காலை, அந்தப் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அவரது மனைவி, தான் வீட்டில் இருந்த படங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, படுக்கை அறையிலிருந்து ஒரு மர்மமான குரல், "குழந்தாய், எனக்குத்  தவறாமல் மாலை அணிவிப்பாய், உனக்கு நன்மை உண்டாகும் " என்று கூறுவதைக் கேட்டதாகவும் , இருமுறை இச்சொற்களைக் கேட்ட அவள், தன்னை அறியாமலேயே, அதன்படி செய்ததாகவும் கூறினாள். திரு.பந்காராவின் நண்பர் ஒருவர், அவரது அனுபவங்களைக் கேட்டு, பாபாவின் படத்துக்குச் சட்டம் (FRAME) இட்டு, ஒரு வியாழக்கிழமையன்று, அவர்களது பூஜையறையில் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ய, அவரது மனைவி அதற்கு நாள்தோறும் மாலையிடுவது வழக்கமாயிற்று.
                                ஒரு நாள் பாபாவின் படத்திலிருந்து, அவளது ஆசை என்ன என்று கேட்கும் குரலை அவள் கேட்டாள். தன்  கணவன் நலமாயிருக்க வேண்டும் என்ற தன் முதல் ஆசையையும், பின்னர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்ற இரண்டாவது ஆசையையும் தெரியபடுத்தினாள். சாயியின் பூஜை தொடங்கிய ஒரு வாரத்தில் வீட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டது.  திரு.பந்காராவிற்கு ஊதிய உயர்வும் கிடைத்தது. 1957ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்  திரு.பந்காராவுக்கு ஒரு மகன் பிறந்தான்.  
 பங்காரா குடும்பத்தினருக்கு எந்தவிதப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் பாபாவிடம் பிரார்த்தனை செய்தவுடன்,பொருத்தமான தீர்வு அவர்கள் மனதில் உதிக்கும். பாபாவின் அருளால் அவர்கள் எண்ணியதெல்லாம் நிறைவேறி வந்தது.
எங்கெல்லாம் பாபாவின் படம் இருக்கிறதோ, அங்கே பாபா வாசம் செய்கிறார்.
பாபாவை நேரிலே தரிசிப்பதற்கும் அவரின் படத்தை தரிசிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...