
சிலருக்கு பாபாவின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கிறது ( ஷீரடியிலோ அல்லது வேறு பாபாவின் ஆலயங்களிலோ). ஆனால் பாபாவின் மீது அதிகமான அன்பு வைத்தும் பாபாவின் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமைவதில்லை. பாபா என்னை ஒதுக்கி வைத்திருக்கிறாரா?
பாபாவின் குழந்தைகளான நம்மை எப்போதும் அவரது கண்காணிப்பிலேயே வைத்துள்ளார். எப்போது ஒதுக்கி வைத்ததில்லை. பாபாவின் கோவிலுக்கு செல்ல முடியாததற்கு வருத்தமும் பட தேவையில்லை. தன்னை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் ! இச்செயல்களின் நோக்கம் இதுவே... எல்லாமே பாபாவின் செயல்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil