Wednesday, February 28, 2018

அன்னதானம்

No automatic alt text available.

உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழுபூச்சியோ, எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய்  வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம்  விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.  "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 27, 2018

நன்மை அடைவீர்கள்

Image may contain: 1 person, food

சிரத்தையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும் உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் ஞானிகளி(பாபாவி)டமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள்.  சுத்தமான பா(BHA)வம் உடையவரே நன்மை அடைவர். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 26, 2018

ஸமர்த்த ஸாயீ

Image may contain: 1 person
ஸமர்த்த ஸாயீ சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெழுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 25, 2018

தியானம் செய்யவேண்டும்


Image may contain: indoor

இரவுபகலாக ஸாயீயை தியானம் செய்யவேண்டும். ஸாயீயைத் தவிர வேறெந்த எண்ணமும் மனத்தில் நுழைந்துவிடாதவாறு விழிப்புடன் இருக்கவேண்டும். இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அழிக்கப்படட்டும். எதிர்காலத்தின் எல்லை தள்ளிவைக்கப்படட்டும். இவை இரண்டுக்குமிடையே இருக்கும் நிகழ்காலம் குருவின் பாதங்களில் நிரந்தரமாக லயிக்கட்டும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 24, 2018

உங்களுக்கு நலம் உண்டாகட்டும்

Image may contain: 1 person

நானா (பாபாவின் பக்தர்) ; பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை (குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா? இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார். அது  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

நானா: அப்படி என்றால், ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை 
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா: இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது. என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு, என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 23, 2018

உண்மையான பக்தரின் கோரிக்கை

Image may contain: 1 person

ஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை. அசையாத தளராத நம்பிக்கையும், பொறுமையும் கொண்டு பாபாவின் பதிலுக்காக காத்திருத்தல் வேண்டும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 22, 2018

குருவினுடைய திறமை

Image may contain: 1 person, sitting

நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப்  பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 21, 2018

முன்னர் செய்த நல்வினை

Image may contain: one or more people

முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நாம், பாபாவின் பாதத்தடியில் உட்காருவதற்கும், அவருடைய ஆசிர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றோம். பாபாவின் உயர்வையும், தனித்தன்மைச் சிறப்பையும், போதுமான அளவிற்கு எவரும் விளக்க இயலாது. அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கபடுகிறான்.  - ஸ்ரீ சாய் சத்சரித்திரம். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 20, 2018

குருவருள்

Image may contain: 1 person, smiling, closeup

உடலும் மனமும் ஐம்புலன்களும் புத்தியும் காட்டமுடியாத மகத்தான ஆத்மசொரூபத்தை குருவருள் காட்டும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 19, 2018

செய்ய வேண்டியதை நன்கு செய்து முடித்தார்

No automatic alt text available.

பாபா சில நேரங்களில் தனது பக்தர்களை பாசம் ததும்ப நோக்கினார். சில சந்தர்பங்களில் அவர்கள் மீது கற்கள் விட்டெறிந்தார். சில சமயங்களில் அவர்களை கடிந்து கொண்டார். சில சந்தர்பங்களில் அவர்களை அன்புடன் அரவணைத்தார். ஆனால் தமது பக்தர்களுக்காக செய்ய வேண்டியதை நன்கு செய்து முடித்தார். - ஸ்ரீ சாயி சத் சரித்திரம் .http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 18, 2018

யாரும் இறப்பதில்லை

Image may contain: one or more people

யாரும் இறப்பதில்லை, நிச்சயமாக சாயி பாபா போன்ற, தன்னைக் கண்டறிந்த ஒரு மகாத்மா இறப்பதில்லை. பௌதீக உடலை விட்டு விடும்போது ஆத்மா ஞானிகள் அல்லது ஜீவன் முக்தர்கள், விதேக முக்தர்கள் அல்லது நிராகரபரப்பிரம்மம்  என் அழைக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் சரீரங்களை விட்டபின் பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகாமல் சூட்சும சரீரத்துடன் திகழ்ந்து, மனித சகத்திற்கு நன்மை பயத்தல் என்ற தெய்வீக சங்கல்பத்துடன் ஒத்துழைக்கின்றனர். இந்த சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்கும் போது  நினைத்த மாத்திரத்தில் அவர்கள் சரீரத்துடன் தோன்றி மறைய முடியும். இவர்கள் அபாந்தராத்மாக்கள் ஆவர். சாயி பாபா இப்போது ஒரு அபாந்தராத்மா. தமது பௌதீக உடலை விடுவதற்கு முன், தாம் தமது சதை எலும்புகளாலான போர்வையை விடப்போவதைக் கண்டு பக்தர்கள் பயப்படவோ, வருந்தவோ வேண்டாமென்றும், எந்த ஒரு பக்தன் எந்த இடத்திலும், எந்த ஒரு தருணத்திலும் தம்மை நினைத்தால், தாம் அங்கே தோன்றி அவனை கவனித்துக் கொள்வதாகவும் பாபா கூறினார். பாபா கூறியது எவ்வளவு சத்தியமானது என்பதை எண்ணற்ற பக்தர்கள் கண்டிருக்கின்றனர். தீவிர பக்தர்கள் இன்றும் பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து தங்களுடைய சொந்த அனுபவங்கள் வாயிலாகவே பாபா கூறியது எவ்வளவு சத்தியமானது  என்பதைக் காணலாம்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 17, 2018

கடந்த பிறவிகளின் புண்ய பலன்

Image may contain: 1 person, smiling

கர்ம சூத்திரம் எல்லோருக்கும் பொருந்தும். வியாதிகளும், துயரங்களும், கர்மாவின்படியே பிராப்தித்தாலும் சில முறை கர்மா, அதிர்ஷ்டத்தை தந்து மகான்களிடம் கொண்டு செல்லும். ஒன்று மட்டும் வாஸ்தவம். கடந்த பிறவிகளின் புண்ய பலன் இருந்தாலொழிய பாபாவின் தரிசன பாக்கியம் கிடைக்காது. விதியின் லீலா விலாசங்களை நம்மால் கூற இயலுமா? பாபாவின் லீலைகள் அற்புதமானவை. எந்த நேரத்தில் பாபாவின்  தரிசனம் கிடைத்ததோ, அந்த நேரமே வாழ்க்கையின் பொன்னான நேரம். பாபாவை தரிசிக்க போகிறோம் என்பதை ஜீவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த ஜீவர்கள் தன்னை தரிசிப்பார்கள் என்று பாபா நன்கு அறிவார். ஏன்? காலத்தின் ஓட்டம் அவரின்  கண் விழிகளுக்கு நன்றாகத் தென்படும். காலத்தைக் கட்டுபடுத்துபவரும் அவரே. காலம் பாபாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். தன்னை பூஜிப்பவர்களுக்கும் , தியானிப்பவர்களுக்கும்,   ஸ்மரிப்பவர்களுக்கும் கர்மாவை தாங்கும் சக்தியை அளிப்பதாகவும், அவரே மறைமுகமாக அதை அனுபவிப்பதுமாக பாபா கூறியுள்ளார்.

"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.
 கர்மா, எனது பக்தர்களிடம் சக்தியற்ற நிலையில் இருக்கும். ஆகையால்    மிக்க விஸ்வாசத்துடன் என்னையே நினைத்துக் கொண்டிருங்கள். காலத்தின் போக்கு கர்மா பற்றிய சிந்தனையின்றி இருங்கள். நான் இருக்கிறேன்! நம்புங்கள்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 16, 2018

தெய்வீக அவதாரம்

No automatic alt text available.

குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரகசியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது. எப்போதோ வாழ்ந்த மகான் அல்ல அவர். தன்னை தவிர வேறெதிலும் நாட்டமில்லாமல், தன்னிடம் மட்டுமே பூரண சரணாகதி அடைந்த பக்தர்களுடன் எப்போதும் இருக்கின்ற தெய்வீக அவதாரம் அவர். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 15, 2018

சாயி என்ற பரம்பொருள்

Image may contain: 1 person


பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 14, 2018

கடுமையான பரீக்ஷை

Image may contain: food


சில சமயம் பாபா தனது பக்தர்களை எல்லைவரை இழுத்துவிடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்துவிடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசமளிக்கிறார். - ஸ்ரீ சாயி இராமாயணம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 13, 2018

குருபாதங்களின் சக்தி

நான்கு புருஷார்த்தங்களில் (அறம், பொருள், இன்பம், மோட்சம்) கடைநிலை மோட்சம். ஆயினும் அதுவும் குருபாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது. அத்தகைய குருவின் பாததீர்த்ததை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும். குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால், சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும், நடக்காததெல்லாம் நடக்கும். அரைக்கணத்தில் உம்மை அக்கறை சேர்ப்பார்.

Image may contain: 1 person, smiling, closeup

"இந்த பாதங்கள் புராதனமானவை. உம்முடைய கவலைகள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம்  பூரணமான நம்பிக்கை வையும். சீக்கிரமே நீர் பேறுபெற்றவர் ஆவீர்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

                                                               

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 12, 2018

போதுமென்ற மனத்துடன் குருபுத்திரனாக வாழுங்கள்

No automatic alt text available.

விதிக்கப்பட்ட, விதிக்கபடாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம்  தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்? அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்? போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேடலில் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான் - ஸ்ரீ சாயி இராமாயணம் .  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 11, 2018

நம்முடைய மனமே நமக்கு விரோதி

Image may contain: 1 person

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும். நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும். இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார். எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 9, 2018

பணம், ஆரோக்கியம், குழந்தைகள்

Image may contain: 1 person

என்னிடம் வரும் எல்லா மனிதர்களும் பணம், ஆரோக்கியம், குழந்தைகள் இவைகளையே கேட்கிறார்கள். நான் என் பக்தர்களுக்குக் கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்த மேன்மையான ஆத்மீக அனுபவத்தைத் தவிர, வேறு எதுவும் வேண்டாமென்று கேட்கும் மனிதன் கிடைப்பதே அரிது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 7, 2018

அனைத்து வசதிகளையும் எல்லாவகையான வளங்களையும் உனக்கு அளிக்கும்

Image may contain: 1 person, text

ஸ்ரீ குருவுக்கு பயபக்தியுடன் கவனமாக அளிக்கப்படும் அனைத்தும் நினைத்துப் பார்க்க இயலாத இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு விதையாக இருக்கும். காலப் போக்கில் அந்த விதையானது விருக்ஷமாகி தேவையான அனைத்து வசதிகளையும் எல்லாவகையான வளங்களையும் பக்தருக்கு அளிக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 6, 2018

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படிக்க இந்த லிங்க்'ஐ க்ளிக் செய்யவும்.

Image result for sai satcharitra


குரு வழிபாடு என்பது தானாக நிகழ்வது அல்ல. ஏதோ இந்த பிறப்பில் நடந்தது என்றும் கூற முடியாது. பல ஜென்ம தேடல், பூர்வ புண்ணியங்களின் குவியல்கள் மூட்டை மூட்டையாக இருந்தவருக்கே அது வாய்க்கும். அப்படிப்பட்ட குருபக்தியை மேலும் வலுப்படுத்த மிகச்சிறந்த சாதனை யாதெனில், குருவின் சரிதத்தை தினமும் பாராயணம் செய்வது. பாபாவின் மீது அதீத அன்பு கொள்ளும் பக்தர்கள், தினமும் ஒரு அத்தியாயம் , அல்லது ஒரு பக்கம், அல்லது ஒரு வரியாவது ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்.. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படிக்க கீழே உள்ள லிங்க்'ஐ  க்ளிக் செய்யவும். 

https://drive.google.com/folderview?id=0B7G8udmBMXCMMzliMmU2NTEtOGM1OS00YzgwLWE5NjEtODA0YzE4NDM4MDAw&usp=sharing


எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது. சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 5, 2018

சாயி நாமம் சொல்லுங்கள்

Image may contain: 1 person

மாயை மிகவும் பலமானது. ஆனால் இறைநாமமோ அதைவிட சக்தி வாய்ந்தது. இறை நாமம் ஒன்றே உய்யும் வழி. மாயையை வெல்ல இறைவனிடம் விஸ்வாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 2, 2018

சாய்பாபா வழிநடத்துகிறார்

No automatic alt text available.

சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 1, 2018

அசைக்க முடியாத நம்பிக்கை


Image may contain: 1 person
நடக்கப் போவதை தடுக்க முடியாதென்றால்,பாபாவிடம் போவதால் பிரயோஜனம் என்ன? தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால் சாய்பாபா என்று ஒருவரை எதற்காக வைத்துக்கொள்ளவேண்டும்? சீரடிக்கு போவதால் என்ன லாபம்?கர்மவினையை பாபாவால் என்ன செய்துவிட முடியும்?

சாய்பாபாவின் பதில்;"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்".
பாபாவிடம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...