Saturday, March 31, 2018

ஆனந்தம் அனுபவிப்பீர்கள்

No automatic alt text available.

பாபாவின் திட்டங்களை யாரால் அறியமுடியும். அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள் !  ஆனால், நீங்கள் அஹங்காரத்தை விடுத்து, அவருடைய காலடியில் புரண்டால், அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 30, 2018

துன்பமெல்லாம் இன்பமாகிறது

Image may contain: 1 person, closeup

குருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ;
மோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன;
துன்பமெல்லாம் இன்பமாகிறது ! 
எந்நேரமும் ஸத்குருவின் பாதங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விடுபடுகின்றன ;
வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன;

- ஸ்ரீமத் ஸாயிராமாயணம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 29, 2018

ஆன்மீக முன்னேற்றம்

Image may contain: 1 person, smiling

பக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வளவுக்கவ்வளவு குரு குதூகலம் அடைகிறார், அந்த பக்தனைக் கொண்டாடுகிறார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 27, 2018

குருவின் மஹிமை

Image may contain: 1 person, smiling

குருவின் மஹிமையைப் பாடுவதாலும் கேட்பதாலும் சித்தம் தூய்மையடைகிறது. நாமஜெபம் செய்துகொண்டே தியானம் செய்தால் ஆனந்தமளிக்கும் அவருடைய உருவம் வெளிப்படும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 26, 2018

இறந்தவளைப் பிழைப்பித்தது

Image may contain: one or more people and people standing


D.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல்   இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின்  ஒரு நாள் விடிகாலை இறந்து போனால்.  பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் " என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 25, 2018

சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள்

No automatic alt text available.


எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா சித்திகளையும் பெறுவீர்கள். மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, 'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 24, 2018

இறைவன் சந்தோஷமடைவார்


முன்ஜன்ம சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டிவிடாதே. யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் இறைவன் சந்தோஷமடைவார். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 23, 2018

பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள்

Image may contain: one or more people and closeup

மிகவும் எளிமையான வழியையே பாபா போதித்தார். அதுவே நம்பிக்கை, பொறுமை. முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். மிகவும் வியாபாரமயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என ஏமாற்று வேலைகள் ஏராளம். சதசத்சரித்திரமே நமது வேதம். அதை நன்கு படித்தீர்களானால் நீங்கள் உணர்வீர்கள், குறிப்பாக,
( 1 ) பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது பாபாவே எல்லாம்  என்று உணர்ந்து கொள்வது. அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்வை அவர் பார்த்துக் கொள்வார்.
( 2 ) பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை. தன்னை நம்பும் பக்தனிடம் பாபா எப்போதும் இருக்கிறார். சந்தேகமே இல்லை.
( 3 ) ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்.
( 4 ) விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை. பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா சொல்கிறார். இப்போது கடைகளில் கிடைக்கும் சாயி விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை, பாபாவிற்கு விருப்பமும் இல்லை.
( 5 ) பாபா கூறியதன் அடிப்படையில் , பக்தர்கள் நமக்கு அருளிய மந்திரம் "சாயி, சாயி " மட்டுமே. இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் பாபா வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி. வேறு மந்திரம் எதுவும் இல்லை.
( 6 ) பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் முயற்சிக்கின்றனர். உண்மை அதுவல்ல.. பாபா மூன்றரை அடி உருவமல்ல, எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.

தொடரும்...... ஓம் சாயிராம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 22, 2018

பாபா உங்கள் முன் தோன்றுவார்

Image may contain: 1 person, food

"பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ளமுடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன! நினைத்தபோது தேவையான இடத்தில் தோன்றுகிறார்." .http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 21, 2018

முன்னேற்றம் நிச்சயமானது

Image may contain: 1 person

பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும்,எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும்  சாயி  நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு  அறிவோம். எவர்,அவர்தம்  பாதாரவிந்தங்களில்  சரணாகதி  அடைகிறார்களோ     
அவர்களின் முன்னேற்றம்  நிச்சயமானது. -ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 10, 2018

நம்முடைய மனமே நமக்கு விரோதி

Image may contain: 1 person

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும்.    
நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 9, 2018

குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு

No automatic alt text available.


'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு  கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார். அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு -ஸ்ரீ குரு சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 8, 2018

விதியின் வலிமை

Image may contain: 1 person, closeup


"விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும், செயல் புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே. நான் தேவனுமல்லேன், ஈஸ்வரனுமல்லேன். நான் 'அனல் ஹக்' குமல்லேன் (கடவுளுமல்லேன்). நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனதில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 5, 2018

ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர்


Image may contain: 1 person, smiling, closeup

தேஹமும் இந்திரியங்களும் பொருந்திய ஓர் அமைப்பு - மூன்றரைமுழ நீளமுள்ள பாரவண்டி - இது மட்டும்தானா நமது சாயீ ? இந்த பிரமையை வேருடன் களைந்தெறியுங்கள். ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர். நம் ஊனக்கண்களுக்கத் தெரியாதபோதிலும், அவர் எங்கும்  நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சமமாக இருந்தபோதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே; நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். அவருடைய இதயத்தில் கனிந்த அன்பை கெட்டியாக பற்றிக்கொல்வோமாக! அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, March 3, 2018

பக்தனின் நன்றியுணர்வு

Image may contain: 1 person, closeup

சாயிநாதருக்கு, இரண்டு கைகளையும் (வணக்கம் செய்பவை)  தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்) ஸ்திரமான நம்பிக்கையையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும்! பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்குப் போதுமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, March 2, 2018

பாபாவின் பாதகமலங்களை வழிபடுங்கள்

No automatic alt text available.

நம்முடைய மனத்தை உலக இன்பங்களிலிருந்து பிரித்து, குருபாதங்களில் கட்டிவிட வேண்டும்.
குருவின் கிருபையையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள். உள்ளுக்குள்ளே எப்பொழுதும் ஸாயிபிரீதி இருக்கட்டும். ஏனெனில் அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 1, 2018

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்

Image may contain: 1 person

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். பாபா யாருக்காவது அனுக்ரஹம் செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பந்தப்பட்ட பக்தர் அதுபற்றிக் கனவிலும் நினைத்திருக்காவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும், சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் கருணாகடாக்ஷம் ஒன்றே போதும் !

பாபாவினுடைய கருணாகடாக்ஷமும் ஆசீர்வாதமும் பிரசாதமும் எல்லாத் துன்பங்களையும் ஒழிக்கின்றன; வேறெதுவும் தேவையில்லை ! - ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம் htt...