
ஸாயீயின் பாதகமலங்களில் மனம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டதற்குச் சின்னம் ஒன்றே ஒன்றுதான். பக்தன் பரமசாந்த நிலையை எய்துகிறான் ; நிஜமான பக்தி பொங்கிவழிகிறது.
குருவிடம் செலுத்தப்படும் அன்பு கலந்த பக்தியே அறநெறியாகும். "அனைத்தும் நானே" என்பதே ஞானத்தின் ஸாரம். புலனின்பங்களின்மேல் விருப்பமின்மையே பெரும் வைராக்கியமாம். இந்நிலை எய்திவிட்டால் உலகியல் வாழ்க்கை மறைந்துபோகிறது.
என்னே இந்த குருபக்தியின் மஹிமை ! குவிந்த மனத்துடன் அனுஷ்டானம் (தியானம்) செய்யப்படும்போது , தன் சக்தியுள் பொதிந்து கிடக்கும் சாந்தி, விரக்தி, கீர்த்தி, இம்மூன்றையும் வெளிப்படுத்துகிறது.
அவ்வகை குருபக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ?. அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் பிரயாசை (உழைப்பு) ஏதுமில்லாமலேயே வந்து சேரும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil