
ஸத்குரு செய்யும் உபகாரத்திற்குக் கைம்மாறு செய்துவிட முடியும் என்று நினைப்பவன் முழுமையான அபக்தன் (பக்தியே இல்லாதவன்).
ஏனெனில், இக் கடனைக் கண்ணுக்குத் தெரியும் எப்பொருளையும் கொடுத்துக் கனவிலும் அடைக்க முடியாது.
அகில உலகத்திலும் உள்ள சம்பத்துக்களை குருவுக்கு அர்ப்பணம் செய்து குருவின் உபகாரத்திற்குக் கைம்மாறு செய்துவிடலாம் என்று சிலர் விரும்பலாம்.
மாயையைக் கடந்த உண்மைப்பொருள் வழங்குபவருக்கு, மாயையால் விளைந்த பொருளைக் கொடுத்துக் கடனை என்றாவது அடைக்க முடியுமா?
பரமகுருவுக்கு தேஹத்தை அர்ப்பணம் செய்வோமென்றால்,
அதுவும் கேவலம் அழியக்கூடிய பொருள். ஜீவனை சரணடையச் செய்தாலும், அது இயல்பிலேயே மித்தியம்(பொய்).
ஸத்குரு ஸத்தியவஸ்துவை (உண்மைப்பொருளை) வழங்குபவர். அவருக்கு மித்தியவஸ்துக்களை (பொய்யான பொருள்களை) அர்ப்பணம் செய்து எப்படிப் பிரதியுதவி செய்யமுடியும்? இது இயலாத காரியம் அன்றோ?
ஆதலின், அனன்னியமானதும் பூரணமானதும் சிரத்தையுடன், ஸாஸ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, ஸத்குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து, அவர் செய்த அருட்செயல்களை மனத்தில் இருத்தி அவரை வழிபடுவோமாக !
குரு செய்த அருட்செயல்களை அகண்டமாக (இடைவிடாது) நினைவில் கொள்வதே சிஷ்யனுக்கு அணிகலன். கைம்மாறு செய்ய முயலும் சிஷ்யர்கள் தங்களுடைய சுகத்தை இழப்பர்!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil