
பிரம்ம ஞானம் தேடும் பாதை கஷ்டமானது; எல்லோராலும் சுலபமாக அடைந்துவிட முடியாது. பாக்கியசாலிக்கு நல்லநேரம் வாய்க்கும்போது, பிரம்மம் தன்னை திடீரென்று வெளிப்படுத்திக்கொள்கிறது. எவன் பற்றறுத்தவனோ, எவன் இறைவனோடு ஐக்கியமாகிவிடுவதைப்பற்றியும் கூடப் பெருமைப்படாதவனோ, அவனே பிரம்ம வித்தைக்கு அதிகாரியாவான்; ஏனெனில் அவன் எதிலும் பற்றில்லாதவன். சிரமமான அப்பியாஸங்களாலும் கடினமான பயிற்சியாலும் உடலை எலும்புக்கூடாகத் தேய்க்க வேண்டும். அதன் பின்னரே குருவின் அருள் என்னும் ஒளியால் விவேகம் மெதுவாக உதயமாகும். எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்தபின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பி விடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக்கூட ஊன்றமுடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil