
சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்படுத்துகிறார்கள். பக்தியின் நுட்பநயம் வாய்ந்த அவாக்களை (விருப்பங்களை) நிறைவேற்றி வைக்கிறார்கள். இது செய்யப்படும்போது புலன் உணர்வுப் பொருள்களில் நமக்குள்ள ஆசை மறைந்துவிடுகிறது. விவேகம் (பகுத்துணர்தல்), வைராக்கியம் (பற்றறுத்தல்) என்னும் இரட்டைக் கனிகள் நமது கைகளுக்கு கிட்டுகின்றன. ஞானமென்பது தூக்கத்தில்கூட துளிர்விடுகின்றது.
ஸத்குருவின் தொடர்பைப் பெறும்போதும், அவர்களுக்கு சேவை செய்யும்போதும், அவர்களின் அன்பைப் பெறும்போதும், இவைகள் அனைத்தினையும் நாம் எய்துகிறோம். தமது அடியவர்களின் அவாக்களைப் பூர்த்தி செய்யும் ஆண்டவன் நமது உதவிக்கு வருகிறார். நமது தொல்லைகளையும் கஷ்டங்களையும் நீக்கி நம்மை மகிழ்வெய்தச் செய்கிறார்.
ஆண்டவனாகவே கருதப்படும் ஸத்குருவின் உதவியே இம்முன்னேற்றத்திற்கு முழுவதுமான காரணமாகும்.
எனவே நாம் எப்பொழுதும் ஸத்குருவைப் பின்பற்றியே இருந்து அவர்தம் கதைகளை செவிமடுத்து அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கே சேவை செய்யவேண்டும்.
- ஸ்ரீ ஸாயி சத்சரித்திரம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil