
பாபாவுக்கு நீங்கள் எதை அனுப்பினாலும், யார் மூலம் அனுப்பினாலும், அது மனம் கனிந்த அன்போடு அனுப்பப்பட்டால், அச்சிறிய நைவேத்தியத்தைக் கொண்டுசென்றவர் மறந்துவிட்டாலும், பாபா தவறாது அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.
அது சோளரொட்டியோ, பாஜியோ, பால்கோவாவோ எவ்வளவு எளிய தின்பண்டமாக இருந்தாலும் சரி, பக்தி பா(BHA)வத்துடன் அளிக்கப்பட்டதைப் பார்த்தபோது, பாபாவின் இதயத்தில் அன்பு பொங்கி வழிந்தது.
எந்த பக்தராவது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை மறந்துவிட்டால், ஸாயீயே அவரைக் கடமையின் பாதையில் வழிநடத்தினார்.
பாபாவினுடைய போதனைமுறை இனிமையானது; மென்மையானது. அதைக் கேட்டு கடமையை மறந்துபோன பக்தர் தாமே விழிப்படைந்துவிடுவார். அதைத் தாங்களே அனுபவித்தவர்கள் மஹாபாக்கியசாலிகள். அவர்களுடைய ஆனந்தத்தை விவரிக்க இயலாது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil