
"உன்னுடைய நல்வாழ்வு இதில்தான் இருக்கிறது; எனக்கும் அவதார நோக்கம் நிறைவேறுகிறது.
பார்! இதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்; இதுவே, என்னுடைய இடைவிடாத மனக்கிலேசமாகவும் இருந்து வருகிறது.
"என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தைச் சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்."
"ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் இக் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்."
"என்னுடைய கீர்த்தனங்களைப் பாடுபவனுக்கு பூரணமான பரமானந்தத்தையும் சாந்தியையும் திருப்தியையும் நான் அருள் செய்வேன். இது ஸத்தியமான வார்த்தை."
''வேறெதிலும் பற்றில்லாமல் என்னையே சரணடைந்து, முழு விசுவாசத்துடன் என் புகழைப் பாடி, என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்."
''எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள்பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படிப் புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்?"
"என்னுடைய கதைகளை மாத்திரம் கேட்டால்கூடப் போதும், வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிருந்தும் விடுவிப்பேன்."
''பக்தியுடன் இக் கதைகளைச் செவிமடுங்கள்; கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபயுங்கள்; பிரதிபத்தபின் தியானம் செய்யுங்கள்; உன்னதமான திருப்தியைப் பெறுவீர்கள்."
''நான்" எனும் பிரக்ஞை மறைந்து, "நானே அவன் (இறைவன்)" என்னும் உணர்வு உதயமாகும். வேறெதிலும் பற்றில்லாத பரிபூரணமான சிரத்தையால், சித்தம் தெய்வீக சக்திகளால் நிறைந்து கனக்கும்.
- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil