Sunday, June 24, 2018

பூர்வஜன்ம புண்ணியம்

Image may contain: food

பூர்வஜன்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின் பலனாகவே நாம் ஓர் அவதார புருஷரைச் (சாயிபாபாவைச்) சந்தித்திருக்கிறோம். சாகும்வரை இழந்துவிடாதவாறு, உங்களுடைய மனமென்னும் பெட்டகத்தில் அவரை வைத்து நன்கு பூட்டிவிடுங்கள்.

பூர்வஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய (பாபாவின்) பொன்னடிகளுக்கு நம்மை இழுத்திருக்கிறது. இதுவே நமக்கு மனத்தில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளி­ருந்து விடுதலையையும் அளிக்கிறது.

வருங்காலத்தில் எவ்வளவு செல்வச் செழிப்பும் சந்தோஷமும் வந்தாலும், ஸ்ரீ ஸமர்த்த ஸாயீயின் புனித சங்கத்தால் தற்காலத்தில் எனக்கு அருளப்படும் சந்தோஷத்திற்கு எதுவுமே இணையாகாது.

தன்னிலேயே மூழ்கி தன்னிலேயே மகிழும் ஸாயீயின் அற்புதமான செயல்பாடுகளை நான் எவ்விதம் முழுமையாக வர்ணிப்பேன்? எவரெவர் அவருடைய பாதங்களிலேயே மூழ்கிய மனத்துடன் இருக்கின்றனரோ, அவரவர் ஸாயீயால் விசுவாசம் நிலைபெறும்படி செய்யப்படுகின்றனர்.

தண்டமும் மான்தோலும் ஏந்திய தவசிகள், ஹரித்துவாரம் போன்ற புனிதத் தலங்களில் வசிப்பவர்கள், ஸந்நியாஸிகள், சாமியார்கள், துறவிகள், உதாஸீகள், இம்மாதிரியாகப் பலவகையான ஸாதுக்கள் பாபாவிடம் வந்தனர். பாபா அவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசி நன்றாகப் பழகினார். "அல்லாமா­லிக்" அவருடைய உதடுகளில் அகண்டமாகத் தவழ்ந்தது, வாதமும் விதண்டையும் அவருக்குப் பிடிக்காது. அவருடைய தண்டம் (ஸட்கா) கைவீச்சுக்குள்ளேயே எப்பொழுதும் இருந்தது.

தவத்தை மேற்கொண்ட அவர், சாந்தமும் தாந்தமும் நிறைந்தவராக இருந்தார். அவருடைய பேச்சில் பூரணமான வேதாந்தம் பொழிந்தது. கடைசிவரை பாபாவினுடைய உண்மையான பண்புகளை எவராலும் எடைபோட முடியவில்லை.

அரசனாயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லாரும் அவரால் எல்லாவிதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டனர். இலக்குமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றே !

நற்செய்கையோ அல்லது துர்ச்செய்கையோ, எல்லாருடைய செய்கைகளும் மற்றும் பக்தருக்கு மட்டுமே தெரிந்த மர்மங்களும் பாபாவுக்குத் தெரிந்திருந்தன. அதைப் பற்றிய சூசகமோ குறிப்போ சொல்­லி பக்தரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார். ஒன்றுமறியாதவர் போன்று நடித்த ஞானக்கடல் அவர். உலகம் தம்மை ஏற்றுக் கொள்வதற்காகவும் புகழுக்காகவும் பாடுபடுவதென்பது அவருக்கு மஹா எரிச்சலூட்டிய விஷயம். இதுவே ஸாயீயின் லக்ஷணம்.

மனித தேஹத்தில் இருந்தாலும் அவருடைய செய்கைகள் தெய்வங்களுடையதைப் போன்று அபூர்வமானவை. பாபா "சிர்டீயில் வாழும்  கண்கண்டதெய்வம்" (பிரத்யக்ஷமான கடவுள்) என்றே அனைத்து மக்களும் பா(BHA)வித்தனர்.

- ஹேமட்பந்த்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்

பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...