
ஸாயீயினுடைய சரித்திரம் ஆழங்காணமுடியாதது; பூரணமாகவும் திருப்தியளிக்கும் வகையிலும் எடுத்துரைக்கமுடியாதது.
துன்பத்தில் உழலும் மக்களுக்கு சாந்தி அளிக்கக்கூடிய, பாபாவின் அபூர்வமான கதைகள் எண்ணற்றவை. உண்மையான பக்தர்களுக்கு மேலும் மேலும் கேட்கவேண்டுமென்ற ஆர்வத்தையூட்டி, திடமான சித்தத்தை நல்குகின்றன.
பாபா சொன்ன கதைகள் பலவிதமானவை; சில உலகியல் ஞானம் அளிப்பவை; சில அனைவருக்கும் பொதுவான அனுபவம்; சில அவருடைய புதிரான செயல்களைப் புரியவைப்பவை.
தெய்வீகமானவையும் கணக்கற்றவையுமான வேதகாலத்துக் கதைகள் எவ்வாறு பிரபலமோ, அவ்வாறே பாபா சொன்ன அநேக அர்த்தபுஷ்டியுள்ளவையும் மதுரமானவையுமான கதைகள் பிரபலம்.
மன ஒருமையுடன் கேட்கப்படும்போது பசியும் தாகமும் மறந்துபோகும்; மற்ற இன்பங்களைத் துரும்பாக்கிவிட்டு ஆழமான அமைதி செங்கோலோச்சும்.
சிலர் பிரம்மத்தோடு ஐக்கியமாவதை நாடுவர்; சிலர் அஷ்டாங்கயோகத்தில் தேர்ச்சியைத் தேடுவர்; மேலும் சிலர் ஸமாதி நிலையின் முழுமையான சுகத்தை நாடுவர்; இந்தக் கதைகளைக் கேட்டால் அவர்களனைவருக்கும் நாடியதும் தேடியதும் கிட்டும்.
இக் கதைகளைக் கேட்பவர்கள் கர்மபந்தத்திருந்து விடுவிக்கப்படுகிறார்கள்; புத்தியும் பிரகாசம் அடைகிறது; ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி அனைவரும் சுகம் பெறுகிறார்கள்.
இக் கதைகளின் சில வார்த்தைகள் தற்செயலாகக் காதில் விழுந்தாலே அந்த ஜீவனுடைய துரதிருஷ்டம் உடனே பின்வாங்குகிறது. இவ்வாறிருக்கையில், நம்பிக்கையுள்ள எளிய பக்தர் பயபக்தியுடன் கதை முழுவதையும் கேட்டால், நிச்சயமாக இவ் வுலகவாழ்வெனும் ஸமுத்திரத்தைக் கடந்துவிடுவார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil