
ஒரு மஹானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கேற்றவாறு பலவிதமான எண்ணங்களுடனும் நோக்கங்களுடனும் மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்கமுடியாது.
சிலர் பக்தியுடனும் விசுவாசத்துடனும் செல்கின்றனர். சிலர் ஞானியினுடைய சக்தியை சோதனை செய்யச் செல்கின்றனர். சிலர் தங்களுடைய மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால்தான் அவர் ஞானி என்று நினைக்கின்றனர்!
சிலர் நீண்ட ஆயுளை வேண்டுகின்றனர். சிலர் பொன், செல்வம், ஸம்பத்துகள், சொத்து - இவற்றை வேண்டுகின்றனர். வேறு சிலர் புத்திரனையும் பௌத்திரனையும் (பேரனையும்) வேண்டுவர். சிலர் குன்றாத செல்வாக்கையும் பதவியையும் வேண்டுவர்.
ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கேலி செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்குத் தங்கிவிட்டனர்.
சிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். பாபாவிடம் நேரடியான அனுபவம் பெற்று, தங்களின் அஹங்காரத்தை விலக்கிவிட்டு பாபாவின் மேல் நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வார்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil