
எனக்கு ஸாயீ தரிசன பாக்கியம் கிடைத்துவிட்டது; என்னுடைய சந்தேகங்கள் நிவிர்த்தியாயின; ஸாயீயின் புனிதமான சங்கம் கிடைத்தது; நான் பரமானந்தம் அடைந்தேன்.
ஸாயீயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜன்மங்களாக நான் சேமித்த பாவங்களை அழித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை எனக்களிக்கும் என்னும் நம்பிக்கையை வேர்விடச் செய்தது.
ஸாயீ ஒரு மஹான்; மஹாயோகீச்வரர்; பரமஹம்ஸர்; ஞானிகளில் சிரேஷ்டமானவர். மானஸஸரோவர் போன்ற ஸாயீயின் பொற்கமலப் பாதங்கள், காக்கையான என்னையும் அன்னபக்ஷியாக மாற்றும்; மாபெரும் பாக்கியத்தால் அவர் பாதம் கண்டேன்!
பாவங்களையும் இடர்களையும் இன்னல்களையும் நாசம் செய்யும் ஸாயீயினுடைய தரிசனமும் புனிதமான சங்கமும் என்னைத் தூய்மைப்படுத்திவிட்டன.
ஸாயீ மஹராஜரை நான் சந்தித்தது பல ஜன்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தின் பலனே! ஸாயீயின் உருவம் நம் பார்வையில் பரவியவுடனே சகல சிருஷ்டிகளும் ஸாயீ ரூபமாகத்தான் தெரிகின்றன.
- அன்னாஸாஹேப் தபோல்கர்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil