
இந்த ஜீவாத்மா (சரீரத்துள் அடங்கிய ஆத்மா) முக்குணங்களுக்கு (ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்கள்) அப்பாற்பட்டதே. ஆயினும், மாயையின் மோஹத்தால், தான் ஸச்சிதானந்த சொரூபம் என்பதை மறந்து, வெறும் தேஹமே என்று நினைத்துக்கொள்கிறது.
இது நேர்ந்தபின், தேஹத்தின்மீது உண்டான அபிமானத்தினால் "நானே செயல்புரிபவன், நானே அனுபவிப்பவன்!" என்ற நம்பிக்கை பெருகுகிறது. ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் துன்பங்களால் வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டுத் தப்பிக்க வழி தெரியாமல் விழிக்கிறது.
குருபாத பக்தியே இந்த ஈனமான நிலையிருந்து விடுபடும் மார்க்கமாகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil