
"இறைவனின் லக்ஷணம் (சிறப்பியல்பு) எவ்வளவு விநோதமானது ! சந்தோஷமாக இருப்பவரால் ஒருகணங்கூட அவர் நினைக்கப்படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது."
"மனிதர் அவ்வாறு இருக்கும்போது, வரிசையாக இன்னல்களைத் தந்து மனிதனைத் தம்மை ஞாபகப்படுத்திக்கொள்ளளும்படி செய்து, துயரத்தில், ''ஓ பகவானே! நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவிவிட்டன? இம்மாதிரி இன்னல்படுவதற்கு நான் எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும்? ''ஓ நாராயணா! என்னைக் காப்பாற்றும்! என்று கதறும்படி செய்கிறார்."
"காலச்சக்கரத்தின் சுழற்சியிலுங்கூட இறைவனின் திட்டம் இருக்கும்போலத் தெரிகிறது. ஆகவே, எவரும் வேறுவிதமான கற்பனைகள் செய்துகொண்டு வீண்பெருமை பேச வேண்டா."
"நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன்; அவனே அழிப்பவன்; அவன் ஒருவனே செயலாளி."
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil