
வாழ்க்கையில் "குருபக்தியே பிரதானம்" என்று எடுத்துக்காட்டும் ஸாயீயின் கதைகள் மிகப் புனிதமானது; நமக்கு போதனையளிப்பது. கவனமாகக் கேட்பவர்கள் உலக சுக நாட்டங்கள் படிப்படியாகக் குறைவதை உணர்வார்கள்.
எவ்வளவுக்கெவ்வளவு கதை கேட்பவர்களின் நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு "ஸாயீயின் பொக்கிஷம்" அவர்களுக்குத் திறக்கும். குதர்க்கிகளுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கும் இந்த லாபம் கிடைக்காது. "அன்பார்ந்த, நம்பிக்கையுள்ள பக்தனே" இதை அனுபவிக்க முடியும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil