
1886ம் ஆண்டில் ஒரு சமயம் பாபா மகாசமாதி அடைந்துவிட தீர்மானித்தார்.
தமது பக்தர் மகல்சாபதியிடம் அவர் தாம் ஆண்டவனிடம் செல்வதாகவும், தாம் ஒருவேளை திரும்பி வராமலும் இருக்கக்கூடும் என்றும், அவரது உடல் மூன்று தினங்கள் பத்திரமாக பாதுகாக்கப்படவேண்டும் என்றும், மூன்று தினங்களில் அவர் திரும்பி வரவும் சாத்தியமுண்டு எனவும் கூறினார்.
அதன்பின்னர் அவர் (பாபா) அவர் மூச்சை உள்ளே அடக்கி சமாதி நிலையை அடைந்தார். உடலில் நீலம் பாய்ச்சிவிட்டது. அவரது உடலை உயிரற்ற பிரேதமாகக் கருதி, பிரேதப் பரிசோதனைக்கு தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், மூன்றாவது தினத்தில் பாபாவுக்கு சுயநினைவு திரும்பியது ; குடலசைவு ஏற்பட்டது ; மூச்சு விடல் ஆரம்பித்தது. சில நொடிகளில் எப்போதும் போல் பூரண ஜீவனுடன் பாபா பேசவும், நடமாடவும் துவங்கிவிட்டார்.
பாபா மீண்டும் உயிருடன் உலகிற்குத் திரும்பியது தமது அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற சங்கல்பத்தால்தான் என்பது தெளிவாகிறது.

'புலிப்பாணி சித்தர்'
இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு:ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார்.
பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது.
போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது.
இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil