Tuesday, August 21, 2018

பாபாவின் அவதார நோக்கம்

Image may contain: one or more people


"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன?  அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா?"


தமது திட்டங்களையும்,  லட்சியத்தையும் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு பாபா ஒருபொழுதும் செருக்கு கொண்டவரல்ல.  ஆயினும்,  சில சந்தர்ப்பங்களில் அவர் தமது வாழ்க்கையின் லட்சியத்தை வெளியிட்டுள்ளார்.

தியாசாபிகல் சொஸைட்டியைச் சார்ந்த ஒரு மாது பாபாவின் சக்திகள் பற்றி சில ஐயப்பாடுகளை எழுப்பினார்.

அப்பொழுது பாபா, தாம் ஒரு பிராம்மணன், வெண்மையான பிராம்மணன்,  தூய்மையான பிராம்மணன் என்றும்,  "லட்சக் கணக்கிலான மக்களை சன்மார்க்கத்தில் நடத்திச்சென்று அவர்கள் பிறவியின் லட்சியத்தை,   அதாவது,  பகவானின் பாத கமலங்களை அடையச் செய்வேன் என்றும் (தத்விஷ்ணோ : பரமம் பதம்) உறுதிபடக் கூறினார்."

மேலும்,  "தம்மிடம் தீவிரமான நம்பிக்கையுடன் அண்டிய பக்தர்களின் ஆன்மாக்களை பல பல பிறவிகளாகத் தம் பொறுப்பில் கொணர்ந்து அவர்களது இகபர நலன்களைப் பேணிக்காத்து வருவதாகவும் பாபா கூறியுள்ளார்."



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...