Friday, August 17, 2018

விபத்துக்களும் இன்னல்களும் விலகும்

Image may contain: 1 person, smiling, closeup

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன்வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில்தான் இருக்கவேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த சாயி பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கை (பக்தியை) பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார். பாபா-வின் திருவாய் முலம் உதிர்ந்த கதைகளை கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்கமுடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும்.   


'பட்டினத்தார்' Related image
முன்னொருகாலத்தில் சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவனுருளால் ஒரு மகன் பிறந்தார்.  திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவரும் சிறந்த சிவபக்தர். கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்த இவர், தனது 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார். இதனிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு சிவனே மகனாக பிறந்தார். குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்தனர். சிவனுக்கு சேவை செய்தே வறுமையில் வாடிய இத்தம்பதியரால், ஒருகட்டத்தில் குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. திருவெண்காடர், சிவசருமர் தம்பதிக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டார் சிவன். சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதேசமயம் திருவெண்காடரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்த அவர், ஒன்றும் செல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.  இதனிடையே வெளியே சென்றிருந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. கோபம் கொண்ட அவர், எருவை வீசியெறிந்தார். அதற்குள், 
""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' 
என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கண்டார். திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது.
 ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,''
 என்று உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், சிவனை வணங்கி முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். 
அதன்பின் சிவத்தல யாத்திரை சென்ற திருவெண்காடர்.  காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் இத்தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது.  இங்கிருந்த சிலரை அழைத்த அவர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
 'தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'.  

 இந்தப் பழமொழிக்குப் பின்னணியாக ஒரு கதை உண்டு.
                  பட்டினத்தார் தம்முடைய மகனாக வந்த மருதவாணர், ஒரு ஓலைமுறியில்
 'காதற்றவூசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று எழுதி, 
உடன் ஒரு காதற்ற ஊசியையும் வைத்துக் கொடுக்கச் செய்தபின்னர் எல்லாவற்ரையும் விட்டுவிட்டு துறவியாக மாறினார்.                  ஆரம்பத்தில் அவர் அதே ஊரில் இருந்துகொண்டு ம்ண்டபங்களில் தங்கியும் வீடுவீடாகப் பிச்சையெடுத்தும் திரிந்தார். 
                 அந்த ஊரில் தனவணிகர்கள் மிகவும் செல்வாக்காக இருந்தனர்.  
அவர்களிடையே பெரும் வணிகராக பல கப்பல்கள், வணிகச்சாத்துக்கள் ஆகியவற்றுடன் பெரும் செல்வந்தராக விளங்கியவர் பட்டினத்தார். அவர் குபேரனுடைய அவதாரம் என்றும் சொல்வர்.                  
அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது அவருடைய உறவினர்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.                  
குறிப்பாக அவருடைய தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை.                
  தங்கையின் வீட்டில் சம்பந்தம் செய்ய வந்தவர்களும்கூட தங்கையின் பிள்ளைக்குத் தாய்மாமனாகிய பட்டினத்தார் பிச்சையெடுப்பதைக் கருத்தில்கொண்டு சம்பந்தத்தையும் தட்டிக் கழித்துவிட்டனர்.
                  ஆகவே பட்டினத்தாரைக் கொன்றுவிட தங்கை திட்டம் போட்டாள்.
                  ஒருநாள், "அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டுப் போ" என்று வீட்டிற்கு அழைத்தாள்.                  அந்த அப்பத்தில் விஷத்தை கலந்துவிட்டாள்.
                  அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் விஷம் கலந்திருப்பது பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது.
                  உடனே, "தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" 
என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின்மீது வீசி எறிந்தார்.  
பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது யாக்கை நிலையாமையை இந்து சமய த்த்துவ ஞானிகள் அடிக்கடி கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல. வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டக்குவதற்கே. விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார். என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையைக நடத்துமாறு செய்வதற்கே. இந்த ஞானம், ஒவ்வொர் சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது. ஏதாவது ஒருசாவு வீட்டுக்குப் போகும்போது “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது. அதையே மயான வைராக்கியம்’ என்பார்கள். “காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்றுபாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப்பாடவில்லை. ‘பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே. நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே. என்று எச்சரிப்பதற்கப் பாடினார். இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன். இந்த உடல் இலவசமாக்க் கொடுத்த பரிசு. தலை வழுக்கை விழுவதோ, ரோம்ம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபக்க் கடிதம். ‘நீ கையெழுத்துப்போட்ட பாத்திரம் காலாவதி யாகிப் போகிறது. கடனைக் கட்டுவதற்குத்தயாராகிக் கொள். உன் உயிரை நான் ஜப்தி செய்யப்போகிறேன். -என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.

 உயிரை ஜப்தி செய்வதற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும், ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள். அந்த அமீனாவுக்கு யமன் என்றும், கூற்றுவன் என்றும் பெயர் கொடுத்தார்கள். உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில், நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன. சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது. அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு வரு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படி யாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத்தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள். மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வரு முன்பே மனிதனை அறிந்துகொள்ளச்செய்வது, இந்து சமய வாதிகளின் நோக்கங்களில் ஒன்றாகும். எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம். 
ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் 
பாவிஎன்று நாம்ம், படையாதே! -மேவியசீர் 
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே! 
செத்தாரைப் போலத் திரி! இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சகமே! 
வைப்பிருக்க வாயில் மனைஇருக்கச் - சொப்பனம்போல் 
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டு 
அப்பைக் க்கிச் செத்துக் கொட்டக் கண்டு! 
ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளப் போலவே 
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! - வன் 
கழுக்கள் த்த்தித்தத் திச்செட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக் 
கத்திக்குத் தித்தின்னக் கண்டு! முதற்சங்கு அமுதூட்டும், 
மெய்குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு 
பூட்டும் - கடைச்சங்கம் ஆம்போ ததுஊதும், அம்மட்டோ? 
இம்மட்டோ? நாம்பூமி வாழ்ந்த நலம்! 
எத்தனைநாள் கூடி எடுத்த சரீரம் இவை! 
அத்தனையும் மண்தின்ப தல்லவோ - வித்தகனார் 
காலைப் படித்து மெள்ளக் கங்குல்பகல் அற்றடித்தே 
மேலைக் குடியிருப்போ மே? இருப்பதுபொய் 
போவது மெய் என்றெண்ணி நெஞ்சே! 
ஒருத்தருகும் தீங்கினை யுன்னாதே- பருத்ததொந்தி 
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேயக்கழுகு 
தம்மதென்று தாமிருக்கும் தான்! -
இவை பட்டினத்தார் பாடல்கள். காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம். “செத்தாரைப் போலே திரி” என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும். அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப்படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது. 
                                                    வாழ்க்கைகு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார். முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது. இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது. மூன்றாவது சங்கு மரணத்திற்குப்பிறகு ஊதப்படுகிறது. அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிளார் பட்டினத்தார். சங்கம் என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும், சங்கம்ம் ஆவதையும் குறிக்கும். ‘முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால்கொடுப்பதைக் குறிக்கிறது. ‘மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கம்மாதைக்குறிக்கிறது. ‘கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கம்மாதைக் குறிக்கிறது. “இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார். ‘இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோம். ‘நாயும், நரியும், பேயும், கழுகும், தாம் ஒரு நாள் இதை   உண்ணப்போகிறோம்’ என்று காத்துக்கொண்டிருக்கின்றனவாம்! நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம்ந எவ்வளவு வருணனைகள்! இந்து உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்க்க் கூடும்? அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம். கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசைதோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம். அதனால்தான் இந்துக்கள், பிற மத்த்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள். 
                                                     இந்த உடம்புகளை தவணை முடிந்துவிட்டது; அது சாம்பலாகி விடுவதுதான்நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்று பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள். புதைக்கப்பட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது. எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்? “காதற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள். இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்? அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள். தங்களைத் தாங்களே சரிபார்த்துக்கொள்ள நமது த்த்துவ ஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை. “அமீனா வாசலில் நிற்கிறான்.” “இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்”

  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...