
பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ ! பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ !
இக் கதைகளை பயபக்தியுடன் சொல்பவர்களும் கேட்பவர்களும் பூர்ணசாந்தியையும் விச்ராந்தியையும் அனுபவிப்பார்கள்.
பாபாவின் திருமுகத்திலிருந்து வெளிப்பட்ட இக் கதைகளைக் கேட்டால், பக்தர்கள் உடல் உபாதிகளை மறந்துவிடுவார்கள்; இடைவிடாது தியானம் செய்தால், உலகியல் தளைகளிலிருந்து விடுபடுவார்கள்.
பாபாவின் திருமுகத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தேவாமிருதம் போன்று இனிப்பவை; கேட்டால் பரமானந்தம் விளையும்; நான் எவ்விதம் இவ்வார்த்தைகளின் மதுரத்தை (இனிமையை) விவரிப்பேன்?
வித்துவான் போலவும் பேரொழுக்கமுடையவர் போன்றும் நடிக்காமல், இக்கதைகளை யாராவது ஒருவர் பிரவசனம் செய்தால் (விரிவாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல்) , அவருடைய பாததூளிகளில் விழுந்து புரண்டாலே எனக்கு மோக்ஷம் நெருங்கும் என்பதை உணர்கிறேன்.
இக் கதைகள் சொல்லப்படும் அசாதாரணமான பாணியும் கற்பனை வளத்துடன் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் கேட்பவர்களை மெய்மறக்க வைத்து எல்லாருக்கும் மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும்.
காதுகள் அவருடைய கதைகளைக் கேட்கவும் கண்கள் அவரை தரிசனம் செய்யவும் ஏங்குவதுபோல, மனம் தெய்வீகமான தியானத்தில் மூழ்கி, பிரக்ஞையை இழந்துவிடும்.
அன்பான குருவே என் அன்னை. அவருடைய கதைகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வாய்மொழிச் செய்தியாகப் பரவும் போது, நாம் பயபக்தியுடன் அவற்றைக் காதுகளால் கேட்டுச் சேமித்து வைத்துக்கொள்வோம்.
ஸாயீயின் கதைகளை நாம் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடச்செய்வோம். அன்பெனும் கயிற்றால் கட்டி எத்தனை முடியுமோ அத்தனையையும் சேமிப்போம். பிறகு இப் புதையலைப் பரஸ்பரம் ஸமிருத்தியாகப் (தேவைக்கு மேலாகவே) பகிர்ந்துகொள்வோம்.
- கோவிந்த ரகுநாத தாபோல்கர்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil