
ஸாயீயின் அற்புதமான லீலைகளை நான் கேட்டவுடன் என் மனம் ஆனந்தவெள்ளமாகியது; அன்பு பொங்கி வழிந்தது. அவ்வெள்ளமே கரைபுரண்டு இக்காவியம் (ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம்) ஆகிறது.
ஆகவே, நான் என்னுடைய முழுத்திறமையுடன் ஸாயீயின் அருள் வெளிப்பாடுகளை விவரிக்க வேண்டும் என்றெண்ணினேன். இவ்விவரணம் "பக்தர்களுக்கு போதனையாகவும் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும் அமையும்."
ஆதலின், நான் இக் கதைகளை ஆரம்பிக்கும் வாயிலாக, இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் சுகமளிக்கும் புனிதமான ஸாயீயின் சரித்திரத்தை எழுதுவதை மேற்கொண்டுவிட்டேன்.
ஒரு மஹானின் வாழ்க்கைச் சரித்திரம் "அறவழியில் வாழ்வதற்குண்டான பாதையாகும்;" நியாய சாஸ்திரமோ தர்க்க சாஸ்திரமோ அன்று. ஆகவே, "ஒரு மஹானின் அருளுக்குப் பாத்திரமாகும் யோக்கியதை உள்ளவர்களுக்கு," எதிர்பாராததாகவோ அயலாகவோ எதுவும் இச் சரித்திரத்தில் இருக்காது.
ஸாயீயின் பக்தர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான காதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலி !"
- ஹேமாட்பந்த்
http://www.shirdisaibabasayings.comhttp://www.facebook.com/shirdisaibabasayingsintamil