
ஸாயீயின் கதையை சிரத்தையுடனும் குவிந்த மனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்கும்படி கதை கேட்பவர்களை அன்புடன் வேண்டுகிறோம்.
நிலத்தைச் சீர்பட உழுதாகிவிட்டது. விதைகளையும் விதைத்தாகிவிட்டது. ஆயினும், கிருபை நிரம்பிய மேகங்களாகிய நீங்கள் மழையாகப் பொழியாவிட்டால், விதைகள் முளைத்து, விளைச்சல் காண்பது எவ்வாறு?
ஞானியரின் கதைகள் காதில் விழும்போது, பாதகங்கள் விலகும். கதை கேட்பவர்களுக்குப் புண்ணியம் விளையும். ஆஹா அந்த அமோகமான விளைச்சலை அறுவடை செய்து லாபமடையுங்கள்
"ஸாலோக்யம்" போன்ற "நான்குவகை முக்திகளின்மீது" நமக்கு ஆசை ஏதும் இல்லை. ஸாயீயிடம் நிச்சலமான பக்தி நிலவட்டும். அதுவே நாம் அடையக்கூடிய பரம பிராப்தி (சிறப்பான பெரும்பேறு).
அடிப்படையாகச் சிந்தித்தால், நாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர் ஆகவே, விடுதலைக்கும் (முக்திக்கும்) நமக்கும் என்ன சம்பந்தம்? "ஞானிகளின்மீது பக்தி" என்னும் விழிப்புணர்ச்சி ஏற்படட்டும். அதுவே இதயத்தைப் பரிசுத்தமாக்கிவிடும்.
"நான்/நீ" என்னும் எண்ணத்திலிருந்து விடுபடுவோமாக. அதுவே நமக்கு இயல்பான நிலையை அளிக்கும். அதுவே நமக்கு பேதமில்லாத பக்தியையும் அளிக்கும். ஸாயீயிடம் நாம் வேண்டுவது இதையே.
போதியைப் பாராயணம் செய்பவர், படிப்பதற்காகப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, வாசிக்கப்படும் விஷயத்தையும் வாசிக்கும் செய்கையையும் தம்மையும் ஒன்றாகக் காணவேண்டும். இதுவே கதைகேட்பவர்களுக்கு விநயமாக விடுக்கும் வேண்டுகோள்.
நான்கு முக்திநிலைகள்
1. ஸாலோக்யம் - இஷ்ட தெய்வத்தின் உலகத்தில் உறைதல்.
2. ஸாமீப்யம் - இறைவனை அணுகி இருக்கும் நிலை.
3. ஸாரூப்யம் - இறைவனைப் போல் உருப்பெற்றிருத்தல்.
4. ஸாயுஜ்யம் - ஆன்மா இறைவனுடன் ஒன்றும் நிலை
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil