Sunday, October 21, 2018

கோடி ஜன்மங்களின் புண்ணியம்

Image may contain: 1 person, smiling




ஞானிகளை அடைவதற்குண்டான மார்க்கங்கள் இரண்டு. ஒன்று பக்தி, இரண்டாவது ஞானம். ஆனால், ஞானமார்க்கத்தில் ஆயாசம் (களைப்பு) விண்ணளவு; பக்தி மார்க்கத்தின் முயற்சிகள் சுலபமானவை. 

பக்தி மார்க்கம் அவ்வளவு சுலபமெனில், ஏன் எல்லாரும் அந்த வழியில் நடப்பதில்லை? ஏனெனில், அதற்குப் பெரும்பாக்கியம் தேவைப்படுகிறது. அது இருந்தால்தான் அவ்வழியில் நடக்கமுடியும். 

கோடி ஜன்மங்களின் புண்ணியம் ஒன்றுசேரும்போதுதான் ஞானிகளின் அருகே செல்லமுடியும். ஞானிகளைச் சென்றடையும் பாக்கியம் கிடைப்பவர்களுக்குத்தான் பக்தி மலரும். 

நமக்குத் தெரிந்ததெல்லாம் உலகியல்வாழ்வுதான். நம்முடைய பற்றுகளும் அதன்மீதே. அதி­ருந்து விடுபடும் வழியை அறியோம். மனத்தின் இயல்பு இவ்வாறிருக்கும்போது பக்தி எப்படி உண்டாகும்? 

நம்முடைய பக்தி எவ்வளவோ, அவ்வளவே நாம் அடையும் பேறுகளும். இந்த விதி எக் காலத்துக்கும் பொருந்தும்; இதன்படியே எல்லாம் நடக்கும்; இதைப்பற்றி எள்ளளவும் மனமயக்கம் வேண்டா. 

இரவுபகலாகப் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக நாம் ஸாயீயைச் சுற்றிக் குழுமியுள்ளோம். ஆகவே, நமக்குக் கிடைப்பனவும் அவையாகத்தான் இருக்கும் அதேசமயம், பரமார்த்தத்தை (வீடுபேறு) நாடுபவர்களுக்குப் பரமார்த்தம் கிடைக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்

பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...