click here; samadhi mandhir bajan

ஸமர்த்த ஸாயீயின் தரிசனம் சுவாமியின் மனத்தை உருக்கியது. அன்பு, விழிகளைக் கண்ணீரால் நிரப்பியது. பொங்கிவந்த உணர்ச்சி தொண்டையை அடைத்தது.
சித்தம் மகிழ்ந்தது. கண்கள் உல்லாசத்தால் மலர்ந்தன. பாபாவின் பாததூளியில் ஸ்நானம் செய்வதற்கு மனம் துடித்தது.
அந்த அழகிய திருவுருவத்தைப் பார்த்த சுவாமியின் இதயமும் கண்களும் நிலைக்குத்தி நின்றன. மோஹத்தால் ஆட்கொள்ளப்பட்டு பாபாவையே பார்த்துக்கொண் டிருந்தார்.
குதர்க்கம் மனத்தை விட்டு ஒழிந்தது. தரிசனம் தந்த ஆனந்தத்தால் இதயம் பொங்கிவழிந்தது. பாபாவின் ஸகுணரூபம் கண்களில் பதிந்தது. புவா (சுவாமி) ஆனந்தக்கடலில் மிதந்தார்
கண்களால் மஹானுபாவரைப் பார்த்த சோமதேவ சுவாமி பெருங்களிப்பு அடைந்தார். தம்முள்ளேயே மூழ்கி பரமசாந்தி நிலையை எய்தினார். அவ்விடத்திலேயே வாழ்நாள் முழுவதும் வசிக்கலாம் என்றும் நினைத்தார்.
தரிசனம் ஒன்றே விகற்பங்களை அகற்றியது. புத்தி அசைவற்று நின்றது. வேற்றுமை உணர்வு விலகியது. ஐக்கிய உணர்வு மேலோங்கியது.
வார்த்தைகள் வெளிவர மறுத்ததால், வாய் மௌனம் சாதித்தது. கண்கள் இமைக்க மறந்தன. அகத்திலும் புறத்திலும் பிரபஞ்சப் பேருணர்வு நிரம்பி வழிந்தது. விளக்கமுடியாத ஓர் அமைதி அவரை விழுங்கியது
ஆரம்பத்தில், கொடியைக் கண்டு அவர் திரும்பிவிட முயன்றார். ஆனால், பிறகோ, பிரேமையால் விளைந்த கண்ணீரால் விழிகள் நிரம்பின. அஷ்டபா(BHA)வம் அவரை ஆட்கொண்டது. பாபாவின் மீதான பிரேமையில் மூழ்கினார்.
"எவ்விடத்தில் உன் மனம் பூரணமாக ஒருமைப்படுகிறதோ, அவ்விடமே உன் இடம் என அறிவாயாக !" தம் குருவின் இந்த உபதேசம் அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. புவா பிரேமையால் தாக்குண்டார்.
- சோமதேவ சுவாமியின் ஸாயீதரிசன அனுபவம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil