Friday, November 30, 2018

புற்றுநோயை குணப்படுத்திய பாபா

                   ஒரு சமயம் பாபா திடீரென்று தனது பக்தர் மகல்சபதியிடம், "உன் மனைவியின் கழுத்தில் கட்டி ஒன்று வந்துள்ளது. அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். அதனை நான் குணமாக்கித் தருகிறேன்" என்றார்.

மகல்சபதிக்கோ ஒன்றும் புரியவில்லை. தனக்கு தெரியாமல் தன்  மனைவியின் கழுத்தில் கட்டியா ? என்று அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் மனைவி வெளியூரிலுள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். ஒரு வாரம் கழித்து அவர் திரும்பி வந்தவுடன் கட்டியைப் பற்றி பேசலாம் என்று நினைத்துக் கொண்டார்.

இதுபோன்ற தருணத்தில், இரண்டு நாட்கள் கடந்ததும் அவர் மனைவியிடம் இருந்து கடிதம் ஒன்று  மகல்சபதிக்கு வந்தது. அதனைப் படித்து பார்த்தபோது அதிர்ந்து போனார். அதில், "ஊருக்கு வந்த அடுத்த நாள் என்னுடைய கழுத்தில் கட்டி ஒன்று தோன்றியது. மிகவும் வலியையும்  அது கொடுத்தது. மருத்துவரிடம் காண்பித்தபோது அது புற்றுநோய்க் கட்டி என்று கூறிவிட்டார்.  அதனால் நான் பயந்து போனேன். ஆனால் நல்ல வேலையாக இப்போது அது முற்றிலும் குணமாகி விட்டது. எனவே இதற்காகத் தாங்கள் கவலை படத்தேவையில்லை " என்று எழுதப்பட்டிருந்தது.

பாபாவின் கருணையினால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்தபோது, மெய்சிலிர்த்துப் போனார்  மகல்சபதி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 16, 2018

சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

Image may contain: 2 people, closeup

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும் பூஜையும் வழிபாடும் பாபாவிற்கு நேரிடையாக சென்றடைகின்றன. உதாரணமாக இவ்வுண்மை சம்பவங்களை படியுங்கள்.

ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது  இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். "அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது" என்றார்.எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை

வீட்டில் நீங்கள் வழிபடும் பாபாவின் படத்திற்கும் , பாபாவிற்கும்  சிறிதளவும் வித்தியாசம் இல்லை. பாபாவின் படத்திற்கு செய்யும் நமஸ்காரம், பாபாவின் படத்திற்கு அணிவிக்கும் மாலைகள் உண்மையில் பாபாவிற்கு நேரிடையாக அணிவித்ததற்கு சமம்..

பம்பாய் பாந்த்ராவைச்  சேர்ந்த திருமதி டெண்டூல்கர் பாந்த்ராவில் தமது இல்லத்தில் வைத்திருக்கும் பாபாவின் திருவுருவப்படத்திற்கு இரண்டு மாதங்களாக ஒவ்வொரு தினமும் வகுள மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை குவியல், குவியலாக அணிவித்து வந்தார். பின்னர் அவர் ஷீரடிக்கு சென்றார்...

பாபா : காகா! ( ஹரிஸீதாராம் தீக்ஷித் ) இந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஷீரடியில் இருக்கவே இல்லை. இந்த அன்னை என்னை வகுள மலர்களில் மூழ்க வைத்து திணற அடித்து விட்டார்; நான் மிகவும் திக்குமுக்காடிப் போய் நினைவையும் இழந்துவிட்டேன். இப்போது மெதுவாக பழைய  நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

மற்றொரு சம்பவம்....

பாலபுவா சுதார் என்ற பக்தர், முதன்முதலாக பம்பாயிலிருந்து 1917ம் ஆண்டில் ஷீரடிக்கு வந்து பாபாவை வணங்கினார்.

பாபா : (வேறு ஒருவரை நோக்கி) இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்.

பாலபுவா இதற்கு முன்பு பாபாவை சந்தித்ததில்லை. ஆகவே வியப்பு. ஆனால் பம்பாயில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பாபாவின் திருவுருவப் படத்தின் முன் விழுந்து நமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார்... 

                                           * ஜெய் சாயிராம் *
Image may contain: 1 person, table, food and indoorhttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 15, 2018

உங்கள் வீடே துவாரகாமாயீ

Image may contain: 1 person, closeup
"நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப்படவேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" - ஸ்ரீ ஷிர்டி  சாய்பாபா ( பாபா தனது பக்தை சந்திரபாயிடம் கூறியவை {1918} ).
பாபாவின் திருவுருவத்தை அடிக்கடி பார்க்கவேண்டும், அவரை எப்போதும் நினைக்க அது உதவும், என்ற நோக்கத்துடன் பாபாவை போட்டோ எடுப்பதற்கு பம்பாயிலிருந்து சில  மாணவர்கள் காமரா ஒன்றுடன் வந்திருந்தனர். அவர்களுடைய நோக்கம் நிறைவேற போட்டோ எடுப்பது சரியான வழியல்ல, மாறாக அவர்கள் தம்மைக் காண முடியாதவாறு மறைந்து நிற்கும் சுவரை தகர்த்தெறிய வேண்டும் என பாபா அறிவுரை வழங்கினார். அவ்வாறு தடையான சுவர் அகற்றுபட்டு விட்டால் அவர்களும் பாபாவும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் தெளிவாக பார்த்துக் கொள்ள முடியும். தகர்த்தெறிவது என்பது எதிர்மறையான சாதனை. பாபாவின் சூசகமான பேச்சின் உட்பொருள் என்ன?
அந்த வாலிபர்கள் தாங்கள் என்பது தங்கள் உடல்கள் தான் எனக் கருதியது போல், பாபா என்பதும் பாபாவின் சரீரம் தான் எனக் கருதினர். அந்த மாதிரி அனுமானங்களை விடாமல் பாபாவின் உடலை மட்டும் போட்டோ எடுக்க முயற்சி செய்யும் வரை, தங்களை பற்றியும் பாபாவைப் பற்றியதுமான ஸ்வரூபம் சம்பந்தமான அவர்களது தவறான நோக்கங்களிலிருந்து விடுபட முடியாது. 'ஷீரடியிலுள்ள இவ்வுடலைப் பார்த்துவிட்டு சாயி பாபாவைக் கண்டுவிட்டதாக ஒருவன் எண்ணுவானேயாகில் அவன் எண்ணம் தவறானது. நான் இங்கே இல்லை' என சில சமயங்களில் பாபா கூறுவார். 

மேலும் இது போன்று பல நிகழ்வுகளை நம்முடைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறோம். இனியும் பதிவு செய்வோம். ஷீரடியில் மட்டும் தான் பாபா இருக்கிறார் என்ற எண்ணம் வேண்டாம். பாபாவே கூறியுள்ளபடி தன்  பக்தன் உடன் எப்போதும் இருக்கிறார். பாபாவை ஷீரடியிலோ அல்லது வேறு ஒரு கோவிலுக்கோ கட்டுப்படுத்த வேண்டாம். பாபா மீது அன்பு கொண்டிருக்கும் உங்கள் வீடே துவாரகாமாயீ தான். அவர் இன்றி வேறு யார் உங்களை பாதுகாக்க முடியும்? 
                        ------ சாயி -சாயி-சாயி------

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 14, 2018

பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்

Image may contain: one or more people

பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய  நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போதும் அவரை அண்டுபவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு அவை இருக்கும். பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை.  தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக "பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்" என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது  மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 13, 2018

பாபா தன் பக்தர் முன் நேரிடையாகத் தோன்றினார்


பாலாராம் மாங்கர் என்ற பக்தர் தம் மனைவி இறந்துவிடவே மனம் நொந்து ஷீரடி வந்தடைந்து பாபாவின் நிழலிலே தங்கலானார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த பாபா, அவரிடம் பன்னிரண்டு ரூபாய்களைக் கொடுத்து சதாரா ஜில்லாவிலுள்ள மச்சீந்திரகாத் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார். பாபாவை விட்டுப் பிரிந்து செல்ல முதலில் பிரியப்படாவிடினும், பாபா அவ்வூருக்குச் சென்று தியானம்  செய்வது அவருடைய நன்மைக்கே என்று கூறவே மாங்கர் மச்சீந்திரகாத் சென்றார். அங்கே நல்ல இயற்க்கைச் சூழ்நிலையிலே தியானம் செய்து வந்தபோது அவர் ஒரு காட்சியை கண்டார். பாபா அவர் முன்பு நேரிடையாகத் தோன்றினார். தான் ஏன் இவ்வூருக்கு அனுப்பப்பட்டார் என மாங்கர் கேட்க, பாபா,  "ஷீரடியில் உன் மனதில் பல எண்ணங்களும் கவலைகளும் எழுந்து மனம் நிலையற்றிருந்தது. நான் மூன்றரை முழு உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருப்பதாக நீ எண்ணியிருந்தாய். நான் ஷீரடியில் மட்டும் தான் இருக்கிறேனா, அல்லது பக்தர்கள் நினைத்த விடங்களிலெல்லாம் இருக்கிறேனா, என்பதைக் கண்டுகொள். இதற்காகவே இவ்வூருக்கு உன்னை அனுப்பினேன்" என்று கூறியருளி மறைந்தார். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 12, 2018

கடன்கள் தீர, தொழில் வளர.


Image may contain: 1 person, smiling, closeup

கடன்கள் தீர, வேலை கிடைக்க, பிரச்சனைகள் தீர பாபா ஏதாவது பரிகார முறைகளை கூறியுள்ளாரா? பாபா கோவில்களில் சில , மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் அற்புதங்கள் நிகழ்வதாகவும்  கூறுகிறார்கள். எந்தெந்த கோவில்கள் என்று கூறமுடியுமா? 

உண்மையில் பாபாவின் தர்பாரில் பரிகார முறைகள் என்று எதுவுமில்லை. பாபா பரிகார முறைகளை பற்றி கூறியது இல்லை. தன் மீது நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் இருக்கும்படி மட்டுமே பாபா கூறியுள்ளார். ஆமாம்,  வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ பதினாறோ எனக்கு தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். பரிகாரம், யந்திரம் என்று பாபாவின் பெயரில் யாராவது உங்களிடம் கூறுவர்களேயேனால் அது முற்றிலும் ஒரு ஏமாற்றுவேலை. 
உண்மையான பக்தி கொண்டு, பாபா கூறியுள்ளபடி வாழும் பக்தனின் உள்ளமே  பாபாவின் மிகவும் சக்தி வாய்ந்த கோவில். உண்மையான பக்தன் எப்போதும், எல்லா இடங்களிலும் தன்னை காண்பதாக பாபா கூறியுள்ளார். ஆகவே உங்கள் நீங்கள் வெகு தூரம் சென்று பாபாவை தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. தாங்கள் நடத்தும் கோவிலில் இருக்கும் பாபாவே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பரிகார முறைகளை கூறுவதும்  ஒரு வகையில் பணம் பறிக்கும் எண்ணமே அன்றி வேறெதுவுமில்லை. நம்பிக்கையோடு எந்த இடத்தில் பாபாவை நினைத்தாலும், பாபா நமக்கு காட்சி அளிப்பர். 

பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபாவின்  ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை - ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10 

 முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.  பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் !
பாபா கூறியிருக்கிறார், "உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்" என்று. அதாவது, பாபாவின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே பிரதானம்..வியாபாரமயமாகிவிட்ட இந்த உலகத்தில், உங்கள் பிரச்சனைகளை களைய, வேலை கிடைக்க, குழந்தை பிறக்க என சாய்பாபா யந்திரம்,  சாய் பரிகார பூஜைகள்  என்று நிறைய ஏமாற்று வேலைகள் நடப்பதை நாம் காண்கிறோம். சாயியின் தர்பாரில் யந்திரம், பரிகாரம் என்று எதுவுமில்லை. பாபா தன் பக்தர்களிடம், தன்னை மட்டுமே நம்பும்படி கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவது, பாபா மீதான நம்பிக்கை இல்லாமையே காட்டுகிறது. எப்பொழுதும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். தொடர்ந்து இவ்விதமாக எண்ணிவாருங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 11, 2018

பாபாவே எல்லாம்

Image may contain: 1 person, beard

"ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல், ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சுருக்கமானது, வெகு ஆழமான வியாபகமுள்ளது.

"என்னிடமே நிலைத்திருப்பின்" என்ற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. 
இறுதிவரை, எத்தகைய சூழ்நிலையிலும், பாபாவை விட்டு நாம் விலக கூடாது. அவரை மட்டுமே சார்ந்து இருக்கும்பொழுது நமது நம்பிக்கை மேலும் வலுவடையும். இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, பாபாவால் தீர்வு கொடுக்கமுடியாது என்று மட்டும் எண்ணவேண்டாம். நம்பிக்கையை வேறு ஒரு தெய்வத்திடம் மாற்றமும் வேண்டாம். ஏனென்றால். எல்லாவற்றையும் நமது பாபாவே நடத்துகிறார். தனது பக்தனின் முழு பொறுப்புகளை அவரே சுமக்கிறார். பாபா எப்போதும் தன் பக்தனுடனேயே இருக்கிறார். உறுதியான நம்பிக்கையின் மூலம் இதை நீங்கள் உணரலாம், யாருடைய உதவியும் இல்லாமல்.உண்மையில் பாபாவிற்கும் உங்களுக்கும் இடையில் யாருமில்லை. ஒரு தந்தையை போலவோ, குருவை போலவோ, ஒரு நண்பனை போலவோ பா(BHA)வித்து பாபாவை எப்போதும் அணுகுங்கள். எப்பொழுதும் சாயிநாம ஜபம் செய்வதும், சத்சரிதம் படிப்பதும் கூட பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்யவே. நம்பிக்கையே பிரதானம். பாபாவே எல்லாம், சர்வ வியாபி, அவரே இறைவன், அவரை மிஞ்சிய சக்தி வேறொன்றுமில்லை  என்று உணர்ந்த பக்தனுக்கு  எல்லா இடங்களிலும் பாபாவே காட்சி தருவார். அந்த பக்தன் உடல், ஆன்மா பற்றி எந்தவித கவலையும் கொள்ளவேண்டியது இல்லை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 10, 2018

பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுவோம்.ஸாயீ மஹராஜ் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி பெற்றவர் !

''ஓ, நம்முடைய சிற்றறிவு எங்கே; மஹராஜின் பிரபஞ்சப் பேரறிவு எங்கே !  ஸாயீயினுடைய இதயத் தூய்மைதான் என்னே !  நம்முடைய பழைய கற்பனையெல்லாம் எவ்வளவு விபரீதமானது.

 ''ஸாயீ சிலரைத் தழுவிக்கொள்கிறார்; சிலரைக் கையால் தொடுகிறார். சிலருக்கு ஆசுவாசம் (ஆறுதல்) அளிக்கிறார். மேலும் பலரின்மீது தம் கடைக்கண் பார்வையால் கருணை பொழிகிறார்.

''சிலரைப் பார்த்துப் புன்னகை பூக்கிறார். துக்கப்படுபவர்களை சாந்தப்படுத்துகிறார். சிலருக்கு உதீ பிரஸாதம் அளிக்கிறார். இவ்வாறாக, சகலமான மக்களையும் திருப்தி செய்கிறார்.

''உண்மை நிலை இவ்வாறிருக்கும்போது, அவர் நம்மிடம் காட்டும் கோபம்  நம்முடைய ஆரம்பகால நம்பிக்கையற்ற நடத்தையால்தான் என்பது தெளிவுபடும். அது கோபமன்று;  நமக்குப் புகட்டப்படும் ஒரு போதனை;  அதுவே கடைசியில் நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்."

பாபாவின் பாதங்களில் ரமித்து (மகிழ்ந்து) மூழ்கிவிட்டால் ஸாயீயின் கிருபையால் நாம் தூயவராக ஆக்கப்படுவோம். பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுவோம்.

ஸாயீபக்தியின் பிரபாவமும் வீரியமும், பொறாமையையும் தீய இயல்புகளையும் விரட்டியடிக்கட்டும். சாந்தியையும் செல்வச்செழிப்பையும் தைரியத்தையும் ஓங்கி வளரச் செய்யட்டும். ஸாயீ பக்தர்களுக்கு, செய்வதற்கு உரிய செயல்களைச் செய்த மனநிறைவு அளிக்கட்டும்.

பிரபஞ்சம் கந்தர்வர்களாலும் யக்ஷர்களாலும் தேவர்களாலும் அரக்கர்களாலும் மனிதர்களாலும் நகரும் நகராப் பொருள்களாலும் நிரம்பி இருக்கிறது. பிரபஞ்சத்தையே ஆடையாக அணிந்த முழுமுதற்பொருள் எங்கும் நிரம்பியிருப்பினும்,  அது ஓர் உருவத்தை ஏற்றுக்கொள்ளாமல் அருவநிலையிலேயே நிலைத்து நின்றுவிட்டால், உருவமுள்ள மனித இனமாகிய நமக்கு உபகாரம் ஏதுமில்லை

தாத்பர்யம் என்னவென்றால், "மனித உருவமேற்காமல் ஸாயீ விட்டுவிட்டிருந்தால், உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், துஷ்டர்களையும் கெடுமதியாளர்களையும் தண்டித்துச் சீர்திருத்துவதும், பக்தர்களுக்கு அநுக்கிரஹம் செய்வதும் எப்படி?"http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 9, 2018

shirdi saibaba quotes

SHIRDI SAIBABA GHEUNIYA PANCHARTI

பாபாவின் அதீத சக்தி

Image may contain: 1 person

மும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம்.  அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.  எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை. மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.
1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார்.  பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார்.  கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.  முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார். பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார். பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது.  சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 8, 2018

SAIBABA'S REAL PICTURE

எப்போதும் உன்னை நினைத்திருப்பேன்

Image may contain: one or more people

ரகுவீர் புரந்தரே, முதன் முதலாக 1909-ல் நான் சாயி பாபாவைப் பற்றி கேள்வியுற்று அவரை தரிசிக்க மனைவி, குழந்தை முற்றும் தாயாருடன் விஜயம் செய்தேன்.. பாபாவை சென்று தரிசித்தபோது, 
பாபா, "ஏழு நூற்றாண்டுகளாக அவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளது என அவர் என் தாயாரிடம் கூறினார், மேலும் 2000 மைல்களுக்கு அப்பால் என் பக்தன் இருப்பினும் நான் அவனை மறக்க மாட்டேன்; எப்போதும் அவனை நினைத்திருப்பேன், அவனில்லாமல் ஒரு துளியும் உண்ண மாட்டேன்" என்றார். -ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்கள் அனுபவங்கள்,பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி. http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, November 7, 2018

தைரியத்தை இழந்துவிடதே

Image may contain: 1 person, smiling, closeup

"தைரியத்தை இழந்துவிடதே; உன் மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டாம்; சுகமாகிவிடும்; கவலையை விடு. பக்கீர் தயாளகுணமுள்ளவர்; உன்னை ரட்சிப்பார்" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்].http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, November 6, 2018

நம்பிக்கையோடு இருங்கள், பாபா உங்களை காப்பாற்றுவார்.

     இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, sitting

D.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல்   இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின்  ஒரு நாள் விடிகாலை இறந்து போனால்.  பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் " என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, November 5, 2018

பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை

Image may contain: Shirdi Saibaba, sitting

பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, November 4, 2018

சாயிபாபா கடவுளா ?

Image may contain: 1 person, smiling


' சீரடி மாஜே  பண்டரீபுரா , சாயி பாபா ரமாவர ', அதாவது, சீரடியே எனது பண்டரிபுரம், சாயிபாபாவே விட்டல்' என்ற பொருள்கொண்ட, ஆரத்தி பாடல் தினமும் சாயி பாபாவின் ஆரத்தி பாடல் தினமும் சாயிபாபாவின் பூஜையில் பாடப்பட்டு வருகிறது. இதை இயற்றியவர் தாஸ்கணு. பம்பாய் மாகாணம் முழுவதும் சாயியின் பெயர் விரைவாகப் பரவ தாஸ்கணுவின் முயற்சிகளே முக்கிய காரணம். பாபாவே விட்டல்  என்று ஆரத்தி பாடினாலும், கடைசிவரை அவர் பாபாவை தெய்வமே என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. பாபாவிடமும் அவருடைய சக்திகள் மீதும் அவருக்கு பெரும்  மதிப்பு இருந்தும், தமது கவித்திறனைக் கொண்டு பாபாவை 'ரமாவர' அதாவது ஸ்ரீ விஷ்ணுவே, எனப் போற்றி ஒரு பாட்டு இயற்றிய போதும், அவரால் தமது குரு தேவராக ஏற்க முடியவில்லை. உதட்டளவு துதியே செய்ய முடிந்தது. ஆகவே தான், பாபாவை சந்தித்த நீண்ட காலத்திற்குப் பின்னும் உபதேசம் பெரும் நோக்கத்துடன் இஸ்லாம்பூர்கர்  என்ற பிராம்மண குரு ஒருவரை அவர் நாடிச் சென்றார். ( தாஸ்கணு இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை). கணுவின் நலனுக்காக பாபாவின் வியக்கத்தக்க உதவி கிட்டியும், பாபா கடவுள் என்ற அபிப்பிராயம் அவருக்கு ஏற்படவில்லை. பாபா அவருக்கு செய்ததை விட மிகக் குறைந்த அளவு பலன் பெற்றவர்கள் கூட பாபா இறைவனே என்ற பூரண விசுவாசம் பெற்றனர். இந்த தாஸ்கணுவுக்கு பாபா மிகச் சிறந்த நலன்களை அளித்தார்; ஆனால் துரதிருஷ்டவசமாக  ( பாபாவை அணுகும் பல பக்தர்களின் விஷயங்களிலும் நாம் காண்பது போல் ) பாபா இறைவனே என்று உணர முடியாமல் போயிற்று. நம்மில் பலரும் சாயி சாயி என்று பாபா நாமம் சொல்லி வந்தாலும், வீட்டில் பாபா படமும் சிலையும் வைத்திருந்தாலும், பாபாவை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைப்பதில்லை. ஆனால் தீவிர நம்பிக்கை கொண்டு பாபாவை அணுகினால், தானே இறைவன் என்று பாபாவே வெளிப்படுத்துவார். பாபா மும்மூர்த்திகளின் அவதாரம். இதை உணர்ந்தவன் மிகப்பெரும் பாக்கியவான் .

"மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக."
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 3, 2018

பாபா உங்களுடனேயே இருக்கிறார், வேறெங்கும் தேடி அலையவேண்டாம்.

Image may contain: 1 person, smiling, closeup

பல பக்தர்கள் அவர்களுடைய ஏதோ ஒரு விருப்பம் அல்லது மனோரதம் நிறைவேறினால் சீரடி யாத்திரை மேற்கொள்வதாக நேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் பல விஷயங்களில் சாயிபாபா சீரடியையும் தாண்டி எங்கும் நிறைந்தவராகி, அவருக்காக நிர்மாணிக்கப்பட்ட பல ஆலயங்களிலும், பஜனை கூடங்களிலும் அவருடைய சான்னித்யம் நேரிடையாக உணரப்படுகிறது. வீடுகளிலும் கூட பாபாவின் சான்னித்யம்  நேரிடையாக உணரப்படுவதுடன், சில சமயங்களில் அவருடைய காட்சியளிப்பதும் நிகழ்ந்து, அவர் தெய்வீக ஸ்வரூபமானவர், எங்குமுள்ளவர் என்னும் கருத்தை உறுதிப்படுத்திவிடுகிறது. பாபா தன் பக்தன் எங்கிருந்தாலும் அவனுடன் எப்போதும் இருப்பதாகவும், அவன் கீழே விழும் பட்சத்தில் , நான்கு கரங்கள் கொண்டு தாங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

வீட்டில் நீங்கள் வழிபடும் பாபாவின் படத்திற்கும் , பாபாவிற்கும்  சிறிதளவும் வித்தியாசம் இல்லை. பாபாவின் படத்திற்கு செய்யும் நமஸ்காரம், பாபாவின் படத்திற்கு அணிவிக்கும் மாலைகள் உண்மையில் பாபாவிற்கு நேரிடையாக அணிவித்ததற்கு சமம்..

பம்பாய் பாந்த்ராவைச்  சேர்ந்த திருமதி டெண்டூல்கர் பாந்த்ராவில் தமது இல்லத்தில் வைத்திருக்கும் பாபாவின் திருவுருவப்படத்திற்கு இரண்டு மாதங்களாக ஒவ்வொரு தினமும் வகுள மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை குவியல், குவியலாக அணிவித்து வந்தார். பின்னர் அவர் ஷீரடிக்கு சென்றார்...

பாபா : காகா! ( ஹரிஸீதாராம் தீக்ஷித் ) இந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஷீரடியில் இருக்கவே இல்லை. இந்த அன்னை என்னை வகுள மலர்களில் மூழ்க வைத்து திணற அடித்து விட்டார்; நான் மிகவும் திக்குமுக்காடிப் போய் நினைவையும் இழந்துவிட்டேன். இப்போது மெதுவாக பழைய  நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

மற்றொரு சம்பவம்....

பாலபுவா சுதார் என்ற பக்தர், முதன்முதலாக பம்பாயிலிருந்து 1917ம் ஆண்டில் ஷீரடிக்கு வந்து பாபாவை வணங்கினார்.

பாபா : ( வேறு ஒருவரை நோக்கி ) இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்.

பாலபுவா இதற்கு முன்பு பாபாவை சந்தித்ததில்லை. ஆகவே வியப்பு. ஆனால் பம்பாயில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பாபாவின் திருவுருவப் படத்தின் முன் விழுந்து நமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார்...1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.

பாலகிருஷ்ண வாமன் வைத்யா என்ற பக்தர் தமது அனுபவத்தை பதிவு செய்துள்ளார்;

1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை..-( பாலகிருஷ்ண வாமன் வைத்யா ).
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 2, 2018

பாபாவின் பெயரை நினைவுகூர வேண்டும்" எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி, எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ, நான் அவனுடைய அடிமை. என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதே போல் இருப்பேன்- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா " 

எந்த உணவையோ பானத்தையோ சாப்பிடுவதற்கு முன்னால், பாபாவை நினைத்து, அவருக்கு சமர்ப்பித்த பிறகே சாப்பிடவேண்டும். பாபாவின் சிலையோ படமோ அருகில் இல்லையென்றாலும், கண்களை மூடி அவரை மனதுள் நினைத்து, அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒருபோதும் தனித்து உண்ணக்கூடாது... ஏனெனில், நாம் ஒருபோதும் தனியாக இல்லை, பாபா எப்போதும் நம்முடனேயே இருக்கிறார். 

மேலும் பாபா தனது பக்தரிடம் கூறியிருக்கிறார்  : " நீ சாப்பிடுவதை எல்லாம் பக்கத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்வாயென்று எனக்குத் தெரியும். ஆனால், நீ தனியாக இருக்கும்போது.... அதை என்னுடன் பகிர்ந்து கொள்கிறாயா ? நான் உன்னுடன் இல்லையா ? "

பாபாவின் இந்த வார்த்தைகள் விலைமதிப்பற்றவை. இச்சொற்களின் ஆழத்தைப் புரிந்துகொண்ட எவரும், ஒரு கவளம் உணவையோ அல்லது ஒரு மிடறு தண்ணீரையோ, பாபாவுக்கு அர்ப்பணிக்காமல் சாப்பிடமாட்டார்கள்.

உணவு மட்டுமல்லாமல், புலன் இன்பத்திற்கான நமது செயல்களையும் பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிடவேண்டும். உலக வாழ்வின் எந்தப் பொருளை அனுபவிக்கும் முன்பும், பாபாவின் பெயரை   நினைவுகூர வேண்டும். இதுவே அவருக்கு அர்ப்பணிப்பதற்கு ஒப்பானது. இப்படி செய்வதின் மூலம், நமது தீய பழக்கங்களையும் ஒழுக்கக்கேடான செயல்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, November 1, 2018

நீ விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை

Image may contain: 1 person, smiling, closeup

ஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை.

என் தோழர்களைக் காண்பித்து, "இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு" என பாபா பணித்தார். ஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர்  ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும்வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. "நீ உன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரும்வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும்" என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆர்த்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன். - -ஸாந்தாராம் பலவந்த் நாச்னே (பாபாவின் பக்தர்). 

"நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக்    கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.".
                                                                       - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாhttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...