ஸாயீ மஹராஜ் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி பெற்றவர் !
''ஓ, நம்முடைய சிற்றறிவு எங்கே; மஹராஜின் பிரபஞ்சப் பேரறிவு எங்கே ! ஸாயீயினுடைய இதயத் தூய்மைதான் என்னே ! நம்முடைய பழைய கற்பனையெல்லாம் எவ்வளவு விபரீதமானது.
''ஸாயீ சிலரைத் தழுவிக்கொள்கிறார்; சிலரைக் கையால் தொடுகிறார். சிலருக்கு ஆசுவாசம் (ஆறுதல்) அளிக்கிறார். மேலும் பலரின்மீது தம் கடைக்கண் பார்வையால் கருணை பொழிகிறார்.
''சிலரைப் பார்த்துப் புன்னகை பூக்கிறார். துக்கப்படுபவர்களை சாந்தப்படுத்துகிறார். சிலருக்கு உதீ பிரஸாதம் அளிக்கிறார். இவ்வாறாக, சகலமான மக்களையும் திருப்தி செய்கிறார்.
''உண்மை நிலை இவ்வாறிருக்கும்போது, அவர் நம்மிடம் காட்டும் கோபம் நம்முடைய ஆரம்பகால நம்பிக்கையற்ற நடத்தையால்தான் என்பது தெளிவுபடும். அது கோபமன்று; நமக்குப் புகட்டப்படும் ஒரு போதனை; அதுவே கடைசியில் நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்."
பாபாவின் பாதங்களில் ரமித்து (மகிழ்ந்து) மூழ்கிவிட்டால் ஸாயீயின் கிருபையால் நாம் தூயவராக ஆக்கப்படுவோம். பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுவோம்.
ஸாயீபக்தியின் பிரபாவமும் வீரியமும், பொறாமையையும் தீய இயல்புகளையும் விரட்டியடிக்கட்டும். சாந்தியையும் செல்வச்செழிப்பையும் தைரியத்தையும் ஓங்கி வளரச் செய்யட்டும். ஸாயீ பக்தர்களுக்கு, செய்வதற்கு உரிய செயல்களைச் செய்த மனநிறைவு அளிக்கட்டும்.
பிரபஞ்சம் கந்தர்வர்களாலும் யக்ஷர்களாலும் தேவர்களாலும் அரக்கர்களாலும் மனிதர்களாலும் நகரும் நகராப் பொருள்களாலும் நிரம்பி இருக்கிறது. பிரபஞ்சத்தையே ஆடையாக அணிந்த முழுமுதற்பொருள் எங்கும் நிரம்பியிருப்பினும், அது ஓர் உருவத்தை ஏற்றுக்கொள்ளாமல் அருவநிலையிலேயே நிலைத்து நின்றுவிட்டால், உருவமுள்ள மனித இனமாகிய நமக்கு உபகாரம் ஏதுமில்லை
தாத்பர்யம் என்னவென்றால், "மனித உருவமேற்காமல் ஸாயீ விட்டுவிட்டிருந்தால், உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், துஷ்டர்களையும் கெடுமதியாளர்களையும் தண்டித்துச் சீர்திருத்துவதும், பக்தர்களுக்கு அநுக்கிரஹம் செய்வதும் எப்படி?"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil