Monday, November 12, 2018

கடன்கள் தீர, தொழில் வளர.


Image may contain: 1 person, smiling, closeup

கடன்கள் தீர, வேலை கிடைக்க, பிரச்சனைகள் தீர பாபா ஏதாவது பரிகார முறைகளை கூறியுள்ளாரா? பாபா கோவில்களில் சில , மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் அற்புதங்கள் நிகழ்வதாகவும்  கூறுகிறார்கள். எந்தெந்த கோவில்கள் என்று கூறமுடியுமா? 

உண்மையில் பாபாவின் தர்பாரில் பரிகார முறைகள் என்று எதுவுமில்லை. பாபா பரிகார முறைகளை பற்றி கூறியது இல்லை. தன் மீது நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் இருக்கும்படி மட்டுமே பாபா கூறியுள்ளார். ஆமாம்,  வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ பதினாறோ எனக்கு தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். பரிகாரம், யந்திரம் என்று பாபாவின் பெயரில் யாராவது உங்களிடம் கூறுவர்களேயேனால் அது முற்றிலும் ஒரு ஏமாற்றுவேலை. 
உண்மையான பக்தி கொண்டு, பாபா கூறியுள்ளபடி வாழும் பக்தனின் உள்ளமே  பாபாவின் மிகவும் சக்தி வாய்ந்த கோவில். உண்மையான பக்தன் எப்போதும், எல்லா இடங்களிலும் தன்னை காண்பதாக பாபா கூறியுள்ளார். ஆகவே உங்கள் நீங்கள் வெகு தூரம் சென்று பாபாவை தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. தாங்கள் நடத்தும் கோவிலில் இருக்கும் பாபாவே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பரிகார முறைகளை கூறுவதும்  ஒரு வகையில் பணம் பறிக்கும் எண்ணமே அன்றி வேறெதுவுமில்லை. நம்பிக்கையோடு எந்த இடத்தில் பாபாவை நினைத்தாலும், பாபா நமக்கு காட்சி அளிப்பர். 

பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபாவின்  ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை - ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10 

 முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.  பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் !
பாபா கூறியிருக்கிறார், "உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்" என்று. அதாவது, பாபாவின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே பிரதானம்..வியாபாரமயமாகிவிட்ட இந்த உலகத்தில், உங்கள் பிரச்சனைகளை களைய, வேலை கிடைக்க, குழந்தை பிறக்க என சாய்பாபா யந்திரம்,  சாய் பரிகார பூஜைகள்  என்று நிறைய ஏமாற்று வேலைகள் நடப்பதை நாம் காண்கிறோம். சாயியின் தர்பாரில் யந்திரம், பரிகாரம் என்று எதுவுமில்லை. பாபா தன் பக்தர்களிடம், தன்னை மட்டுமே நம்பும்படி கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவது, பாபா மீதான நம்பிக்கை இல்லாமையே காட்டுகிறது. எப்பொழுதும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். தொடர்ந்து இவ்விதமாக எண்ணிவாருங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...