Saturday, November 3, 2018

பாபா உங்களுடனேயே இருக்கிறார், வேறெங்கும் தேடி அலையவேண்டாம்.

Image may contain: 1 person, smiling, closeup

பல பக்தர்கள் அவர்களுடைய ஏதோ ஒரு விருப்பம் அல்லது மனோரதம் நிறைவேறினால் சீரடி யாத்திரை மேற்கொள்வதாக நேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் பல விஷயங்களில் சாயிபாபா சீரடியையும் தாண்டி எங்கும் நிறைந்தவராகி, அவருக்காக நிர்மாணிக்கப்பட்ட பல ஆலயங்களிலும், பஜனை கூடங்களிலும் அவருடைய சான்னித்யம் நேரிடையாக உணரப்படுகிறது. வீடுகளிலும் கூட பாபாவின் சான்னித்யம்  நேரிடையாக உணரப்படுவதுடன், சில சமயங்களில் அவருடைய காட்சியளிப்பதும் நிகழ்ந்து, அவர் தெய்வீக ஸ்வரூபமானவர், எங்குமுள்ளவர் என்னும் கருத்தை உறுதிப்படுத்திவிடுகிறது. பாபா தன் பக்தன் எங்கிருந்தாலும் அவனுடன் எப்போதும் இருப்பதாகவும், அவன் கீழே விழும் பட்சத்தில் , நான்கு கரங்கள் கொண்டு தாங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

வீட்டில் நீங்கள் வழிபடும் பாபாவின் படத்திற்கும் , பாபாவிற்கும்  சிறிதளவும் வித்தியாசம் இல்லை. பாபாவின் படத்திற்கு செய்யும் நமஸ்காரம், பாபாவின் படத்திற்கு அணிவிக்கும் மாலைகள் உண்மையில் பாபாவிற்கு நேரிடையாக அணிவித்ததற்கு சமம்..

பம்பாய் பாந்த்ராவைச்  சேர்ந்த திருமதி டெண்டூல்கர் பாந்த்ராவில் தமது இல்லத்தில் வைத்திருக்கும் பாபாவின் திருவுருவப்படத்திற்கு இரண்டு மாதங்களாக ஒவ்வொரு தினமும் வகுள மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை குவியல், குவியலாக அணிவித்து வந்தார். பின்னர் அவர் ஷீரடிக்கு சென்றார்...

பாபா : காகா! ( ஹரிஸீதாராம் தீக்ஷித் ) இந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஷீரடியில் இருக்கவே இல்லை. இந்த அன்னை என்னை வகுள மலர்களில் மூழ்க வைத்து திணற அடித்து விட்டார்; நான் மிகவும் திக்குமுக்காடிப் போய் நினைவையும் இழந்துவிட்டேன். இப்போது மெதுவாக பழைய  நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

மற்றொரு சம்பவம்....

பாலபுவா சுதார் என்ற பக்தர், முதன்முதலாக பம்பாயிலிருந்து 1917ம் ஆண்டில் ஷீரடிக்கு வந்து பாபாவை வணங்கினார்.

பாபா : ( வேறு ஒருவரை நோக்கி ) இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்.

பாலபுவா இதற்கு முன்பு பாபாவை சந்தித்ததில்லை. ஆகவே வியப்பு. ஆனால் பம்பாயில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பாபாவின் திருவுருவப் படத்தின் முன் விழுந்து நமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார்...1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.

பாலகிருஷ்ண வாமன் வைத்யா என்ற பக்தர் தமது அனுபவத்தை பதிவு செய்துள்ளார்;

1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை..-( பாலகிருஷ்ண வாமன் வைத்யா ).
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ரொட்டியும் வெள்ளைப்பூண்டு சட்னியும்

1908ம்  ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது   திருமதி சந்திரா பாய்  போர்க்கர் என்பவர் கோபர்கானில்  இருந்தார்....