Monday, December 31, 2018

பாபாவே தெய்வம்

Image may contain: 1 person, standing
கண்டேபா கோவில் பூசாரியும் பாபாவின் மிக நெருங்கிய பக்தருமான மஹல்சபாதியின் மகன் ஸ்ரீமார்த்தாண்ட் என்பவர் ஒருநாள் கண்டேபா கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அப்போது பாபா அங்கே வர மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணங்கினார்.

பாபா கண்டேபா கோவிலுக்குள் போவதை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென பாபா கண்டேபா சுவாமியின் விக்ரஹத்துக்குள் ஊடுறுவி விட்டார்.  மார்த்தாண்ட் விரைந்து சென்று விக்ரஹத்துக்கு முன்னாலும் பின்னாலும் பாபாவைத் தேடினார்.  ஆனால் பாபா அங்கே இல்லை.

'கோவிலுக்குள் வந்த பாபா எங்கே சென்றார்!'  என்று மார்த்தாண்ட் பிரம்மித்து நிற்கையிலே,  பாபா மீண்டும் கண்டேபா விக்ரஹத்தின் உள்ளிருந்து வெளிப்பட்டு மார்த்தாண்டை  புன்சிரிப்புடன் நோக்கிவிட்டு  கோவிலின் வெளியே சென்றார்.

அதுநாள்முதல் மார்த்தாண்ட், "தெய்வமும் பாபாவும் ஒன்றே!" என்பதை புரிந்துகொண்டார்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 29, 2018

பசித்தவர்களுக்கு அன்னமிடுவது உயர்ந்த செயல்

No automatic alt text available.

நீங்கள் செய்யும் அன்னதானத்தில் பாபா நிச்சயம் உணவருந்த வருவார்.

பேடுல் ஜில்லாவைச் சேர்ந்த டெண்டுல்கர் என்பவர் பாபாவின் பக்தர்.  அவர் ஒருமுறை ஷீர்டிக்கு  பாபாவை தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் பாபாவிடம் , "பாபா ! தாங்கள் ஒருநாளாவது என்னுடன் உணவருந்த வேண்டும் !"  என்று கேட்டுக் கொண்டார்.  அதற்கு பாபாவின் பதில் வெறும் புன்னகையாக மட்டுமே இருந்தது.

தான் கேட்டுக்கொண்டதை பாபா ஏற்கிறாரா,  மறுக்கிறாரா என்று டெண்டுல்கருக்கு புரியவில்லை.  இருப்பினும், டெண்டுல்கர் தினமும் தவறாமல் இரண்டு தட்டுக்கள் உணவு வாங்கி ஒரு தட்டு உணவைத்தான் உண்பார்.  மற்றொன்றை சகுண் என்பவரிடம் கொடுத்து,  "இது பாபாவுக்கு! மூடி வையுங்கள்!"  என்று கூறுவார்.  இரவு சாப்பாட்டு நேரம் கடந்ததும் பாபாவுக்கென்று  மூடி வைத்த மற்றொரு தட்டு உணவை, பிச்சைக்காரர்களுக்கு அளித்துவிடுவார்கள்.

ஒருநாள் இரவு பத்து மணிக்கு மறுநாள் பால் கறப்பதற்கான கழுவிக் கொண்டிருந்தார் சகுண்.  அப்போது ஒரு சாது வந்து, "எனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவைக் கொடு !"  என்று கேட்டார்.  சகுணும் உடனே அதை அவருக்குக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட சாது,  அதை சாப்பிட்டு முடித்ததும், "இதை வாங்கி வைத்த மனிதனைக் கூப்பிடுங்கள் !" என்றார்.  உடனே டெண்டுல்கரை அழைத்து வர ஆளனுப்பினார் சகுண்.  ஆனால், "டெண்டுல்கர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.  அவரை எழுப்ப முடியவில்லை"  என்ற பதிலுடன் வந்தான்.

"பசித்தவர்களுக்கு அன்னமிடுவது உயர்ந்த செயல்.  ஒன்றுமே இல்லாவிட்டாலும் ஒரு துண்டு வெல்லமாவது கொடுத்தனுப்ப வேண்டும்.  இவருக்கு எல்லா நலன்களும் கிட்டும்"  என்று கூறிச் சென்றார் அந்த சாது.

அவ்வமயம் அங்கு வந்த ஷாமா, சாதுவாக வந்தவர் பாபா என்பதை புரிந்துகொண்டு,  சகுணிடம் , "வந்தவர் வேறு யாரும் அல்ல, நமது பாபாவே !" என்று கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 28, 2018

அன்னதானம் செய்


பகவன்தாரோ ஷீர்சாகர் என்பவர் பாபாவின் பக்தர்.  ஷீரடிக்கு ஒருமுறை தரிசனத்திற்கு வந்தபோது பாபா அவரிடம்,   "ஓ ! ஷீர்சாகர்‌,   உன் தந்தை தீவிர விஷ்ணு பக்தர். அந்த ஷீர சாகரனின் பெயரை உனக்கு ஆசையாய் வைத்தார்.  வருடம் தவறாமல் பண்டரிபுரம் செல்வார்.  ஏகாதசி உற்சவமும்,  அன்னதானமும் செய்வார்.  ஆனால்,  நீயோ வீட்டில் செய்துவந்த பூஜையையும் நிறுத்திவிட்டாய் !.   நைவேத்யம் படைக்காமல் பகவானைப் பட்டினி போடுவது மகா அபசாரம்.  பகவான் எதையும் சாப்பிடுவதில்லை.  ஆனால் தன் பக்தனிடம் எதிர்பார்க்கிறார்.   நீ ஒன்று செய் ! பகவானுக்கு நைவேத்யம் செய்வதை மட்டுமே சாப்பிடுவதென்ற கொள்கையை கடைப்பிடி !  அப்போதுதான் உன் தவறு புரியும்"  என்றார்.

அதற்கு ஷீர்சாகரோ,  "ராமன், சிவன்,  கிருஷ்ணன் என எல்லோரையும் நான் உங்களிடமே காண்கிறேன் பாபா" என்றார்.

பாபாவோ,. "இருக்கலாம்!  ஆனால் தரித்திரப்பட்டவர்களுக்கு  வீட்டில் வழிபாடு நடத்த தனி இடம் கிடைக்காது.  அவர்கள்  ஆலயம் சென்றே தங்கள் குறைகளை முறையிடுவர்.  அந்த ஆலயம் சரிவர நடைபெற,  தூய்மையாயிருக்க பணக்காரர்கள் உதவ வேண்டாமா?  கோவிலுக்கு வரும் ஏழைகள் பசியோடு திரும்பாதிருக்கச் செய்யப்படுவதுதானே அன்னதானம்!" என்று அழுத்தமாகக் கூறி ஷீர்சாகரை திருத்தி பண்டரிபுரம் சென்று ஆண்டுதோறும் அன்னதானம் செய்ய வைத்தார் பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 27, 2018

உங்கள் வீட்டிலேயே பாபா எப்போதும் இருப்பதை உணர்வீர்கள்

Image may contain: one or more people and closeup
நீ எப்படி இருப்பினும், என்ன செய்யினும், நான் உன்னுடன் இருப்பேன். உன் உள்ளும் இருப்பேன், புறத்திலும் இருப்பேன் ! எமக்கு உள்ளே வரவோ, வெளியே செல்லவோ கதவுகள் தேவையில்லை. எமக்கு உருவமே கிடையாது. நாம் எங்கும் நிறைந்துள்ளோம். எம்மிடத்தில் முழுவதும் சரணடைந்து, தம் செயல்களை எல்லாம் எம்மிடம் அர்ப்பணித்து வரும் பக்தனுடைய தேவைகள் யாவையும் யாமே கவனித்துக் கொள்கிறோம்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

 ("மீ சாடே தீன் ஹாத் தேஹாமத்யே நாஹீம், சர்வ டிகாணீ ஆஹேம் சர்வ டிகாணீம் மலாஷாஹத் ஜா,") அதாவது, நான் ( பாபா ) இந்த மூணரை முழு சரீரம் அல்ல, நான் எங்கும் உளேன். ஒவ்வொரு இடத்திலும் என்னை காணுங்கள் என பாபா கூறியுள்ளார்.  பாபாவின் கிருபையை பெற , பாபாவை முழுமனதுடன் தியானித்து சாயிபாபாவுக்கு பிரேமையுடன் இதயத்தை அர்ப்பணிக்க வேண்டும். பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்தால், பாபா உங்கள் உள்ளும் புறமும், உங்கள் வீட்டிலேயே எப்போதும் இருப்பதை உணர்வீர்கள். பாபாவின் மீதான பக்தி வளர, ஷீரடி பயணம், ஷீரடி சுற்று சூழ்நிலை உதவக் கூடியதாயினும், ஷீரடிக்குச் சென்றுதான் பாபாவின் அருளைப் பெறவேண்டும் என்பதில்லை. புலனடக்கம் செய்து பாபாவை பக்தியுடன் தியானம் செய்தால் போதும். பக்தன்  எதையெல்லாம் பெற தகுதி படைத்திருக்கிறானோ அவை அனைத்தையும் பாபாவின் கிருபையால் நிச்சயம் பெற்றுவிடலாம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 26, 2018

பிரச்சினைகளிலிருந்து காக்கவே இங்கே இழுத்தேன்

Image may contain: 1 person, smiling, closeup

"விட்டல்" என்ற பக்தர் வருடா வருடம் பண்டரிபுரம் செல்வார்.  தினசரி வீட்டில் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்து பூஜை செய்வது வழக்கம்.  அவர் காலமான பிறகு அவரது மகன் "பகவந்த்ராவ்" வீட்டில் பூஜையும் செய்வதில்லை,  பண்டரிபுரமும் போவதில்லை.

ஒருமுறை,  பகவந்த்ராவ் ஷீரடிக்கு வந்து பாபாவைத் தரிசித்தார்.  அப்போது பாபா அருகிலிருந்தவர்களிடம்,  "இவனுடைய தந்தை என் நண்பர்.  பிரச்சினைகளிலிருந்து இவனைக் காக்கவே இங்கே இழுத்தேன்.  விட்டலைப் பட்டினி போடலாமா?  பூஜையை ஒழுங்காகச் செய்தால் பல முடிச்சுகள் அவிழும் என்று இனிமேலாவது புரிந்து கொள்வானா?  பண்டரிநாதருக்கென்ன,  இவன் பார்க்காவிட்டால் இவனுக்குத்தான் அனர்த்தம்!" என்று கூறினார்.  

அதைக் கேட்ட பகவந்த்ராவ் பாபாவின் சொற்படி,  வீட்டில் தினமும் தவறாமல் பண்டரிநாதருக்கு பூஜை செய்து சிக்கல்களிருந்து விடுபட்டார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 25, 2018

ஷீர்டி வேறு; பண்டரிபுரம் வேறா?

Image may contain: one or more people and closeup

ரகுவீர் புரந்தரேயின் அன்னை "பண்டரிபுரம் போகும் ஆசை இந்த ஜென்மத்தில் நிறைவேறப் போவதில்லை"  என்று அடிக்கடி புலம்புவார்.  ரகுவீருக்குப் பணம் கையில் புரளும்போது நேரம் ஒத்துழைக்கவில்லை.  நேரம் வாய்க்கும்போது கையில் பணம் வறட்சியாய் இருந்ததால்,  பயணம் தட்டிக்கொண்டே இருந்தது.

ஒருநாள் ரகுவீரும்,  அவரது அன்னையும் மசூதியில் பாபாவைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது அங்கே "பண்டரிநாதரும்  ருக்மணியும் நிற்பதைக் கண்டு மெய்சிலிர்த்தனர்".

அப்போது பாபா அவர்களிடம்,  "அம்மா !  எப்போது பண்டரிபுரம் போகப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.  அதற்கு ரகுவீரின் தாயார் சற்றும் தாமதிக்காமல் "ஷீர்டி வேறு; பண்டரிபுரம் வேறா?" என்று ஆனந்தக் கண்ணீர்மல்க பதில் கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 23, 2018

சாய்பாபாவின் தோற்றம்

Image may contain: one or more people


சாய்பாபா, ஏறத்தாழ ஐந்தடி ஆறங்குல உயரமிருந்தார். குண்டும் கிடையாது. மிகவும் ஒல்லியும் கிடையாது. அவரது நிறம் தங்கம் டாலடிக்கும் மாநிறம். அவரது கண்கள் நீல நிறத்திலிருந்தன. அவை, கரும் இருட்டில் காரணம் காண முடியாத அளவுக்கு மாயப் பளபளப்பினைக் காட்டின. அவரது மூக்கின் தீர்க்கம் குறித்துக் கொள்ளக் கூடியதாயிருக்கும். சாய் ஷர்தநந்தாஜி, மேற்கூறிய சாய் பாபா பற்றிய தோற்ற விவரணைகளைத் தந்தபோது, மேலும் குறிப்பிடுபவை;  அவருடைய சில பற்கள் விழுந்திருந்தன. மிச்சமிருந்தவை சுத்த வெள்ளையில் இருக்கவில்லை. அவர் என்றும் பற்களைத் தேய்த்தது கிடையாது. தினசரி காலை வேளையில் கொஞ்சம் தண்ணீரால் வாய் முழுவதையும் கொப்பளித்து மட்டும் வந்தார். அவர் காபி டீ  போன்ற பானங்களை அருந்தியவர் கிடையாது. ஆனாலும் அப்படி பக்தர்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் தடை போட்டதில்லை. புகை பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்பது பற்றி ஒருவரிடத்தும் எப்போதும் அவர் காரணம் சொன்னது கிடையாது.

அவர் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த சின்னத் துணி எப்போதாவது தான் மாற்றப்பட்டது. அது துவைக்கப்பட்டதே கிடையாது. அந்தத் துணியை மாற்ற விரும்பும்போது மட்டும் டெய்லருக்கு சொல்லி அனுப்புவார்: " எனக்கு ஒரு தலைத்துணி கொண்டு வா." தைத்து வரும்போது அதற்குத் தேவையான கூலியை விட அதிகமாகத் தந்தனுப்புவார். சாய்பாபா, மிகவும் கம்மியாகத்தான் பேசுவார். அமைதியாகவும் சாந்தமாகவும் தான் அநேகமாக இருப்பார். அவசியத் தேவை இருக்கும்போது மட்டும்தான் பேச்சு. வாய்விட்டு எப்போதுமே சிரித்தவரல்லர். ஆனால், மென்மையாய் ஓசையின்றி புன்னகைப்பது அதிகம். அதிகமான காலம் கண்களை மூடிய நிலையில் தான் அவர் அமர்ந்திருப்பார். பக்தன் அவரது தரிசனத்துக்கு வந்திருக்கும்போது மட்டும் மெலிதான கடைக்கண் பார்வை விழிப்பார். சில சமயங்களில் இதைக் கூட அவர் பண்ணியதில்லை. குழந்தைகள் என்றால் கொள்ளைப்  பிரியத்திலிருந்த அவர், அவைகளோடு சேர்த்துக் கொண்டு கொம்மாளமிடுவதை இஷ்டப்பட்டிருக்கிறார். மசூதிச் சுவரில் சாய்ந்தபடி ஆயாசமாய் ஒருமுறை கூட அவர் உட்கார்ந்திருந்தது கிடையாது. கால் நீட்டி உட்கார்ந்துக் கொண்டாலும் கூட சுவரில் சாயாது அதிலிருந்து ஓரிரு அடிகள் தள்ளி நடுவில் தான் அமர்ந்திருப்பார். ஷீரடியிலிருந்து கோயில்களை அவர் போய் பார்ப்பது அரிது.

சிற்சில சமயங்களில் பார்பருக்கு  ஆளனுப்பி வரச்சொல்லி சாய்பாபா மொட்டையடித்துக் கொள்வார் என பதிந்திருக்கிறார், மார்ட்தாண்ட், இவர் மஹல் சபதியின் பிள்ளை. சின்ன குறுந்தாடி வளர்க்கும் வழக்கும் அவருக்கு உண்டு. அகலமான நெற்றியுண்டு. அதிக அலங்காரங்களற்ற சாதாரண குஃபனி தான் ( தலையைச் சிட்ரிக் கட்டப்பட்ட துணி ) அவரது விருப்பம்.

                                          - ஓம் சாயிராம் -

Image may contain: 3 people, people standing and outdoor

                    ஸ்ரீ தத்தாத்ரேயர் 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 22, 2018

பாபா இன்றும் நம்முடன் இருக்கிறார்

Image may contain: 1 person, closeup

பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன்றி "தாயே! நான் இறக்கவில்லை. நீ எங்கிருந்தாலும், என்னை நினைத்த மாத்திரத்தில் எந்த ஒரு நேரத்தில் நீ விரும்பினாலும் நான் அங்கே இருப்பேன் (உடலுடன் கூடியோ இல்லாமலோ)" என ஆறுதல் அளித்தார்.  தாமோதர் ராசனே என்ற பக்தருக்கும் பாபா அந்த உறுதிமொழியை அளித்தார். நரசிம்ம ஸ்வாமியை சந்தித்த ராசனே 1918-ல் பாபா மகாசமாதி அடைந்த பின்னரும் அவர் பல தடவைகள் பாபாவை சரீரத்துடன் நடமாடுவதைக் கண்டதாகவும், அந்த சரீரி தம்முடன் பேசியதாகவும் கூறினார். பாபா இன்றும் நம்முடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே அத்தாச்சி. தன்னை நம்பியவர்களுக்கு பாபா என்றும் உயிருடன் இருக்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 21, 2018

உனக்கு எந்தவித தீங்கும் நேராது
"இன்று மட்டுமல்ல என்றென்றும், இப்பிறப்பில் மட்டுமல்ல இனி வரப்போகும் பிறவிகளிலும், உமக்கு எந்தவிதமான தீங்குமிழைக்க முடியாது. யாம் அதைப் பார்த்துக் கொள்கிறோம்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரான மகால்சாபதியிடம் கூறிய வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் மஹல்சாபதிக்கு மட்டுமல்ல, தம்மை வழிபடும் ஒவ்வொரு பக்தனுக்கு என்றென்றுக்கும் அளிக்கப்பட்ட சரணாகதி மந்திரம் ) 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 15, 2018

நீ செய்யும் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும்

Image may contain: 1 person, closeup

மதியப் பொழுது ஆரத்தி முடிந்த பிறகு ஒரு முறை பக்தனோடு பேசிக் கொண்டிருக்கையில் சாய்பாபா சொல்லியிருக்கிறார்;
" உனக்கு எங்கு விருப்பமோ அங்கு இரு. என்ன தெரிந்தெடுக்கிறாயோ அதையே நீ செய். ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும். நீ செய்யும் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும். நான் தான் நடத்துனர். அசைவன அசையாவன என அனைத்திலும் நானே இருக்கிறேன். அனைத்து உணர்வுகளின் இயக்குனன். ஆக்குபவன், காப்பவன், அழிப்பவன். என் பக்கம் கவனம் முழுவதையும் பதித்து விடுவோனை எதுவும் அழிக்காது. ஆனால், என்னை மறந்து விடுபவனை மாயை அழித்தே விடும். புழு பூச்சி முதல் சுழலும் கோள்கள் உட்பட பிரபஞ்சங்கள் அனைத்துமே நான் அல்லது என் பிற வடிவங்கள் "


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 13, 2018

பாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்

Image may contain: one or more people

பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன்றி "தாயே! நான் இறக்கவில்லை. நீ எங்கிருந்தாலும், என்னை நினைத்த மாத்திரத்தில் எந்த ஒரு நேரத்தில் நீ விரும்பினாலும் நான் அங்கே இருப்பேன் (உடலுடன் கூடியோ இல்லாமலோ)" என ஆறுதல் அளித்தார்.  தாமோதர் ராசனே என்ற பக்தருக்கும் பாபா அந்த உறுதிமொழியை அளித்தார். நரசிம்ம ஸ்வாமியை சந்தித்த ராசனே 1918-ல் பாபா மகாசமாதி அடைந்த பின்னரும் அவர் பல தடவைகள் பாபாவை சரீரத்துடன் நடமாடுவதைக் கண்டதாகவும், அந்த சரீரி தம்முடன் பேசியதாகவும் கூறினார். பாபா இன்றும் நம்முடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே அத்தாச்சி. தன்னை நம்பியவர்களுக்கு பாபா என்றும் உயிருடன் இருக்கிறார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 12, 2018

எதிர்காலம் சந்தோஷமானதாகவும் அருமையானதாகவும் திகழும்


நான் எப்போதும் உன்னுடனேயே தான் இருக்கிறேன். நீ கவலைபடத் தேவையில்லை. எத்தனைக்கெத்தனை நீ இப்போது கஷ்டங்களை அனுபவிக்கிறாயோ அத்தனைக்கத்தனை எதிர்காலம் சந்தோஷமானதாகவும் அருமையானதாகவும் திகழும் - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா. ( பாபா தனது பக்தர் உபாசனி பாபாவிடம் கூறியவை )http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 10, 2018

ஸ்ரீ சாய்பாபாவின் ஆன்மீகப் பயிற்சி

Image may contain: food

ஸ்ரீ சாய்பாபா, ஒரே மாதிரியான ஆன்மீகப் பயிற்சியையே அனைவருக்கும் போதிக்கவில்லை. வருபவருடைய சூழ்நிலை, தன்மை, நிலைமை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தன்னைத்தானே முதலில் பொறுத்திக் கொள்வார் அவர். தனது பக்தர்களுக்கு சாய்பாபா சொல்வார்;
" நீ ஒரு ராம பக்தனாயிருந்தால், அதை விட்டு விடாமலிரு. உனக்கு அல்லா மட்டுமே போதுமென்றால் அதையே கெட்டியாகப் பிடி." 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 9, 2018

பாபா மீது துளி சந்தேகமோ அல்லது ஒளிவு மறைவுகளோ வேண்டாம்

Image may contain: 1 person, smiling, closeup

எவனொருவன் தன்னையும் தன்  ஆன்மாவையும் பாபாவின் பாதக் கமலங்களில் அர்ப்பணித்து அவரிடம் சரணடைந்து விடுகிறானோ, அவனுக்கு வேறெந்த தேவையும் எழாது. பிறகு, அவனுக்குப் படித்தறிய வேண்டும் என்ற நிலை வராது. இதிகாசங்கள், வேதங்களெல்லாம் படித்துத் தான் பல்கிப் பெருக வேண்டும் என்ற தேவை எழாது. மாயப் பொருட்களின் மீதான ஆசையோ தேவையோ கூட உதயமாகாது. அவனது அனைத்துத் தேவைகளையும் பாபாவே  பார்த்துக்கொள்வார். அவனைப் பாதுகாப்பார். ஆன்மீகப் பாதையின் ஆன்ம இலக்கினைத் தொட வழிவகை செய்து வைப்பார்.  ஆனால் அது பாபாவின் மீது முழு அர்ப்பணிப்பாய் இருத்தல் வேண்டும். பாபா  மீது துளி சந்தேகமோ அல்லது ஒளிவு மறைவுகளோ பக்தனிடம் இருந்து விட்டால், சொல்லப்பட்ட பலனில் எதுவும் கிடைக்காது.  

என்பால் ஐயமற்ற அன்பு செலுத்தி உருகும் பக்தர்களுடைய வாழ்வின் மீது என்னுடைய மேற்பார்வையும், நான் தரும் பாதுகாப்பும் எப்போதும்   இருக்கும் - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 8, 2018

இயற்கை இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டு சாய்பாபா

                       Image may contain: 1 person

இயற்கை இயக்கங்களைக் கூட ஆணையிட்டு கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டு சாய்பாபா திகழ்ந்துள்ளார். ஒரு சமயத்தில் சாய்பாபாவின் தரிசனம் பார்த்துவிட்டு ஒரு பக்தன் கிளம்ப அப்போது பார்த்து நல்ல மழையும் புயலும் பிடித்துக் கொண்டு பேயாட்டமாடின, பம்பாய்க்கு உரிய நேரத்தில் திரும்பிப் போக முடியாமல் ஆகிவிடுமோ என அந்த பக்தன் பதறிப் போனான். சாயிபாபாவிடமே திரும்பிப் போன அவன் நிலமையைக் கையாள அவரிடம் அறிவுரை வேண்டினான். வானத்தை நிமிர்ந்து பார்த்த அவர் சொன்னவை; "அர்ரே, அல்லா, போதும், மழையை நிறுத்து, என் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பிப் போயாக வேண்டும், எந்த கஷ்டமும் படாமல் அவர்கள் திரும்பிப் போகட்டும்". சாய் பாபா பேசியது போலவே மழை மறைந்து சிறுசிறு தூறல்களாகி விட எவ்வித பிரயாண சிரமுமின்றி வந்த பக்தன் கிளம்பிப்போனான்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

WHY FEAR WHEN I AM HERE

Friday, December 7, 2018

நான் இங்கு இருக்கும்போது எதற்காக ஒருத்தன் பயப்படவேண்டும்?

Image may contain: 1 person, closeup

"இது உன் வீடு. நான் இங்கு இருக்கும்போது எதற்காக ஒருத்தன் பயப்படவேண்டும்?" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

ஜி.எஸ்.கபர்டே , சாய்பாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவர். இந்திய அரசியலின் முக்கியப் பெரும் புள்ளியாகவும் மத்திய பிரேதச நீதிமன்றங்களின் சிம்ம சொப்பனமாகவும் விளங்கியவர் இவர். பால கங்காதர திலகுருடன் இவருக்கிருந்த தொடர்பின் காரணமாக இவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு விடலாம் என்ற ஆபத்து அதிகமிருந்தது. 

1910ம் ஆண்டு சாய்பாபாவை முதன்முறையாக சந்தித்தார். மனம் லேசாக பல நீதிக்கதைகளை சாய்பாபா சொல்வார் என்றும் மக்களைத் துன்பம் கவ்வும்போது ஓடோடி வந்து அவர் பாதுகாப்பார் என்றும் கேள்விப்பட்டிருந்தார் கபர்டே.ஆங்கிலேய அரசால் எந்நேரத்திலும் கைதாகிவிடலாம் என்ற அவலநிலையில், 1911'ல் மீண்டும் ஷீரடிக்கு கபர்டே  ஓடியபோது சாய்பாபா சொன்னார் "இது உன் வீடு. நான் இங்கு இருக்கும்போது எதற்காக ஒருத்தன் பயப்படவேண்டும்? " என்று. 
எக்காரணம் கொண்டும் கபர்டே கைதாகி விடக்கூடாது என்பதில் ஸ்திரமாயிருந்தார் சாய்பாபா. "என்னை விரும்புவோரின் மீது என்னுடைய கண்காணிக்கும் பார்வை சர்வகாலமும் பதிந்தேயிருக்கும்" என்றார் அவர்.

பின்னாளில் கபர்டே எம்எல்எக்கு இணையான பதவி அடைந்துவிட, அவரது மகன் மந்திரியாகவே  ஆனார்.  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 5, 2018

கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை.

                 Image may contain: one or more people and closeup
நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம்.  ஆனால் உங்களது மனத்தை ஸாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள்.  பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்.  இதுவே எளிமையிலும் மிகவும் எளிமையான வழியாகும்.  எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை?


 காரணம்  என்னவென்றால்  கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு  வருவதில்லை.  கடவுள் அருளால் எல்லாம்  தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது.  முனிவர்களின் கதைகளைக் கேட்பது என்பது ஒருவழியில் அவர்களின் ஸத்சங்கத்தைப் பெறுதலை நிகர்ப்பதாகும்.  முனிவர்களின் கூட்டுறவின் முக்கியத்துவமானது மிகவும் பெரியது.  

நமது உடல் உணர்வையும், அஹங்காரத்தையும் அகற்றி, பிறப்பு – இறப்பு என்னும் சங்கிலித் தொடர்ச்சியை அறவே அழிக்கிறது.  இதய முடிச்சுக்களையெல்லாம் துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச் செல்கிறது.  புலன் உணர்வு விஷயங்களைப் பற்றி நமது அவாவின்மையை நிச்சயம் அதிகரித்து, இன்ப-துன்பங்களை நாம் முழுவதும் இலட்சியம் செய்யாதவராக்கி, ஆத்மீகப் பாதையில் மேன்மேலும் நம்மை அழைத்துச் செல்கிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

via Shirdi Saibaba Sayings https://ift.tt/2rjcHdv

Sunday, December 2, 2018

துவாரகாமாயி மற்றும் சாவடி

                               துவாரகாமாயிதொடர்புடைய படம்
ஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார்.  அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.
ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.

மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.

ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.

                                    சாவடி   


சாவடி, ஷிர்டி கிராமத்துப்  பெரியோர்கள் கூடிப் பொதுநலத்தைப் பற்றிய விஷயங்களை விவாதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டிடம். ஒருமுறை பலத்த மழையின்போது மசூதி  (துவாரகாமாயி ) முழுதும் ஈரமாகிவிட்டது. பாபாவும் அவரது பக்தர்களும் அமர்வதற்கு ஒரு சிறு உலர்ந்த பகுதிகூட இருக்கவில்லை. இப்போது போன்ற அந்த நாட்களில் முன்னாலுள்ள முற்றத்துக்குக் கூரை கிடையாது என்பதை நினைவில் கொள்வோமானால், அப்போது நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று அறிந்துகொள்ளலாம். தரையிலும் கற்கள் பதித்திருக்கவில்லை. அது ஒரு மண் கட்டிடம்; அதன் தரை அவ்வப்போது பசுஞ்சாணியினால் மெழுகப்படும், அவ்வளவே! அன்று, நாராயனதேலி என்பவர், மழைக்குப் பாதுகாப்பான சாவடிக்கு எல்லோரும் போகலாமென்று பாபாவிடம் கூறினார்.
   பாபா தமது வழக்கப்படி தாம் போகமருத்துத் தமது பக்தர்கள் யாவரும் அங்கே போகலாமென்று கூறினார். பக்தர்கள் அவரை விடாப்பிடியாக வற்புறுத்தி, இறுதியில் துணிந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, எப்படியோ ஒரு வழியாக அவரைச் சாவடிக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். ஒருமுறை அங்கு தூங்கியதும், சாவடியில் இரவைக் கழிப்பதை ஒரு விதியாகவே ஆக்கிக் கொண்டுவிட்டார். அவர் சாவடிக்குப் போகும்போதும், சாவடியிலிருந்து வரும்போதும்  அவரைத் தொடர்ந்து பக்தர்களின் ஊர்வலம் எல்லாவிதமான கேளிக்கைகளோடும் இசையோடும் செல்லும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...