
சாய்பாபா, ஏறத்தாழ ஐந்தடி ஆறங்குல உயரமிருந்தார். குண்டும் கிடையாது. மிகவும் ஒல்லியும் கிடையாது. அவரது நிறம் தங்கம் டாலடிக்கும் மாநிறம். அவரது கண்கள் நீல நிறத்திலிருந்தன. அவை, கரும் இருட்டில் காரணம் காண முடியாத அளவுக்கு மாயப் பளபளப்பினைக் காட்டின. அவரது மூக்கின் தீர்க்கம் குறித்துக் கொள்ளக் கூடியதாயிருக்கும். சாய் ஷர்தநந்தாஜி, மேற்கூறிய சாய் பாபா பற்றிய தோற்ற விவரணைகளைத் தந்தபோது, மேலும் குறிப்பிடுபவை; அவருடைய சில பற்கள் விழுந்திருந்தன. மிச்சமிருந்தவை சுத்த வெள்ளையில் இருக்கவில்லை. அவர் என்றும் பற்களைத் தேய்த்தது கிடையாது. தினசரி காலை வேளையில் கொஞ்சம் தண்ணீரால் வாய் முழுவதையும் கொப்பளித்து மட்டும் வந்தார். அவர் காபி டீ போன்ற பானங்களை அருந்தியவர் கிடையாது. ஆனாலும் அப்படி பக்தர்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் தடை போட்டதில்லை. புகை பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்பது பற்றி ஒருவரிடத்தும் எப்போதும் அவர் காரணம் சொன்னது கிடையாது.
அவர் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த சின்னத் துணி எப்போதாவது தான் மாற்றப்பட்டது. அது துவைக்கப்பட்டதே கிடையாது. அந்தத் துணியை மாற்ற விரும்பும்போது மட்டும் டெய்லருக்கு சொல்லி அனுப்புவார்: " எனக்கு ஒரு தலைத்துணி கொண்டு வா." தைத்து வரும்போது அதற்குத் தேவையான கூலியை விட அதிகமாகத் தந்தனுப்புவார். சாய்பாபா, மிகவும் கம்மியாகத்தான் பேசுவார். அமைதியாகவும் சாந்தமாகவும் தான் அநேகமாக இருப்பார். அவசியத் தேவை இருக்கும்போது மட்டும்தான் பேச்சு. வாய்விட்டு எப்போதுமே சிரித்தவரல்லர். ஆனால், மென்மையாய் ஓசையின்றி புன்னகைப்பது அதிகம். அதிகமான காலம் கண்களை மூடிய நிலையில் தான் அவர் அமர்ந்திருப்பார். பக்தன் அவரது தரிசனத்துக்கு வந்திருக்கும்போது மட்டும் மெலிதான கடைக்கண் பார்வை விழிப்பார். சில சமயங்களில் இதைக் கூட அவர் பண்ணியதில்லை. குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியத்திலிருந்த அவர், அவைகளோடு சேர்த்துக் கொண்டு கொம்மாளமிடுவதை இஷ்டப்பட்டிருக்கிறார். மசூதிச் சுவரில் சாய்ந்தபடி ஆயாசமாய் ஒருமுறை கூட அவர் உட்கார்ந்திருந்தது கிடையாது. கால் நீட்டி உட்கார்ந்துக் கொண்டாலும் கூட சுவரில் சாயாது அதிலிருந்து ஓரிரு அடிகள் தள்ளி நடுவில் தான் அமர்ந்திருப்பார். ஷீரடியிலிருந்து கோயில்களை அவர் போய் பார்ப்பது அரிது.
சிற்சில சமயங்களில் பார்பருக்கு ஆளனுப்பி வரச்சொல்லி சாய்பாபா மொட்டையடித்துக் கொள்வார் என பதிந்திருக்கிறார், மார்ட்தாண்ட், இவர் மஹல் சபதியின் பிள்ளை. சின்ன குறுந்தாடி வளர்க்கும் வழக்கும் அவருக்கு உண்டு. அகலமான நெற்றியுண்டு. அதிக அலங்காரங்களற்ற சாதாரண குஃபனி தான் ( தலையைச் சிட்ரிக் கட்டப்பட்ட துணி ) அவரது விருப்பம்.
- ஓம் சாயிராம் -

ஸ்ரீ தத்தாத்ரேயர்
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil