
ரகுவீர் புரந்தரேயின் அன்னை "பண்டரிபுரம் போகும் ஆசை இந்த ஜென்மத்தில் நிறைவேறப் போவதில்லை" என்று அடிக்கடி புலம்புவார். ரகுவீருக்குப் பணம் கையில் புரளும்போது நேரம் ஒத்துழைக்கவில்லை. நேரம் வாய்க்கும்போது கையில் பணம் வறட்சியாய் இருந்ததால், பயணம் தட்டிக்கொண்டே இருந்தது.
ஒருநாள் ரகுவீரும், அவரது அன்னையும் மசூதியில் பாபாவைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது அங்கே "பண்டரிநாதரும் ருக்மணியும் நிற்பதைக் கண்டு மெய்சிலிர்த்தனர்".
அப்போது பாபா அவர்களிடம், "அம்மா ! எப்போது பண்டரிபுரம் போகப் போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ரகுவீரின் தாயார் சற்றும் தாமதிக்காமல் "ஷீர்டி வேறு; பண்டரிபுரம் வேறா?" என்று ஆனந்தக் கண்ணீர்மல்க பதில் கூறினார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil