
நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம். ஆனால் உங்களது மனத்தை ஸாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும். இதுவே எளிமையிலும் மிகவும் எளிமையான வழியாகும். எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை?
காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை. கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது. முனிவர்களின் கதைகளைக் கேட்பது என்பது ஒருவழியில் அவர்களின் ஸத்சங்கத்தைப் பெறுதலை நிகர்ப்பதாகும். முனிவர்களின் கூட்டுறவின் முக்கியத்துவமானது மிகவும் பெரியது.
நமது உடல் உணர்வையும், அஹங்காரத்தையும் அகற்றி, பிறப்பு – இறப்பு என்னும் சங்கிலித் தொடர்ச்சியை அறவே அழிக்கிறது. இதய முடிச்சுக்களையெல்லாம் துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச் செல்கிறது. புலன் உணர்வு விஷயங்களைப் பற்றி நமது அவாவின்மையை நிச்சயம் அதிகரித்து, இன்ப-துன்பங்களை நாம் முழுவதும் இலட்சியம் செய்யாதவராக்கி, ஆத்மீகப் பாதையில் மேன்மேலும் நம்மை அழைத்துச் செல்கிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil