
"விட்டல்" என்ற பக்தர் வருடா வருடம் பண்டரிபுரம் செல்வார். தினசரி வீட்டில் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்து பூஜை செய்வது வழக்கம். அவர் காலமான பிறகு அவரது மகன் "பகவந்த்ராவ்" வீட்டில் பூஜையும் செய்வதில்லை, பண்டரிபுரமும் போவதில்லை.
ஒருமுறை, பகவந்த்ராவ் ஷீரடிக்கு வந்து பாபாவைத் தரிசித்தார். அப்போது பாபா அருகிலிருந்தவர்களிடம், "இவனுடைய தந்தை என் நண்பர். பிரச்சினைகளிலிருந்து இவனைக் காக்கவே இங்கே இழுத்தேன். விட்டலைப் பட்டினி போடலாமா? பூஜையை ஒழுங்காகச் செய்தால் பல முடிச்சுகள் அவிழும் என்று இனிமேலாவது புரிந்து கொள்வானா? பண்டரிநாதருக்கென்ன, இவன் பார்க்காவிட்டால் இவனுக்குத்தான் அனர்த்தம்!" என்று கூறினார்.
அதைக் கேட்ட பகவந்த்ராவ் பாபாவின் சொற்படி, வீட்டில் தினமும் தவறாமல் பண்டரிநாதருக்கு பூஜை செய்து சிக்கல்களிருந்து விடுபட்டார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil